LATEST

Thursday, December 19, 2019

மொழித்திறன் பயிற்சி - ர, ற பொருள் வேறுபாடு பகுதி 02


கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை
கரவு - பொய், வஞ்சனை, மறைவு
கறவு - கப்பம்
கரவை - கம்மாளர் கருவி
கறவை - பாற்பசு
கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
கறி - இறைச்சி, மிளகு
கரத்தல் - மறைத்தல்
கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
கருத்து - எண்ணம்
கறுத்து - கருநிறங்கொண்டு
கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
கரை - எல்லை, தடுப்பு, ஓரம்
கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
கரையான் - மீனவன்
கறையான் - செல் (ஓர் உயிரி)
கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை
கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம்
கற்பூரம் - பொன்னாங்கண்ணி
காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்
காறி - காறிஉமிழும் கழிவு
காரு - வண்ணான், தேவதச்சன்
காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
காறை - ஒரு கழுத்தணி
கீரி - ஓர் உயிரினம்
கீறி - பிளந்து, அரிந்து
குரங்கு - ஒரு விலங்கு
குறங்கு - தொடை, கொக்கி
குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்
குறவர் - ஒரு ஜாதியினர்
குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
குறவை - ஒருவகை மீன்
குரத்தி - தலைவி, குருவின் மனைவி
குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
குறுகு - அண்மைப்படுத்து
குருகினம் - பறவை இனம் குறுகினம் - நெருங்கினோம்
குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம் குறு - குறுகு
கூரல் - ஒரு மீன், பறவை இறகு கூறல் - சொல்லுதல், விற்றல்
கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் கூறை - புது ஆடை, சீலை
கூரிய - கூர்மையான கூறிய - சொன்ன
கூர - குளிர்ச்சி மிக கூற - சொல்ல, வேண்டல்
கோரல் - கூறுதல் கோறல் - கொல்லல்
கோரை - புல்வகை கோறை - குவளை, பொந்து
கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் கோறல் - குளிர் காற்று, மழை
சிரை - சிரைத்தல், முடிநீக்கல் சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
சீரிய - சினந்த, சிறந்த, சீராய் சீறிய - சினந்த
சுரா - கள் சுறா - சுறா மீன்
சூரல் - மூங்கில், பிரம்பு சூறல் - தோண்டல்
சுருக்கு - வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு, நெய்த்துடுப்பு சுறுக்கு - விரைவு
செரு - போர், ஊடல் செறு - வயல், பாத்தி, குளம்
செருநர் - பகைவர், படைவீரர் செறுநர் - பகைவர்
சொரி - தினவு, அரிப்பு, பொழி சொறி - சிரங்கு, சொறிதல்
தரித்தல் - அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல் தறித்தல் - வெட்டுதல்
தரி - அணி, அணிந்துகொள் தறி - தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல்
தருதல் - கொடுத்தல் தறுதல் - இறுகக்கட்டுதல்
தாரு - மரம், தேவதாரு, பித்தளை தாறு - குலை, அங்குசம், முள், இரும்பு, முள்கோல்
திரம் - மலை, உறுதி, நிலை, பூமி திறம் - உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, ஒழுக்கம், மேன்மை, வரலாறு, காரணம்
திரை - அலை, கடல், திரைச்சீலை திறை - கப்பம்
துரவு - கிணறு துறவு - துறத்தல், துறவறம்
துரை - பெரியோன், தலைவன் துறை - நீர்த்துறை, வழி, இடம், நூல், கடற்கரை, உபாயம், பாவினம்
துரு - களிம்பு துறு - கூட்டம், நெருக்கம்
தூரல் - தூருதல், வருத்தம் தூறல் - மழைத்துளி, பழி சொல்லுதல்
தூரன் - குலத்தின் பெயர் தூறன் - மூர்க்கன்
துரு - வீதி துதறு - அழி
தேரார் - கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர் தேறார் - அறிவிலார், பகைவர்
தேரி - மணல் திட்டை, மணல் குன்று தேறி - தேர்ச்சி பெற்று, தெளிந்து
நரை - நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை நறை - தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம்
நாரி - பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன், நாறி - கற்றாழை
நிருத்தம் - கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை நிறுத்தம் - நிறுத்தும் இடம்
நிரை - பசு, ஒழுங்கு, வரிசை நிறை - கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு
நூரல் - அவிதல், பதங்கெடுதல் நூறல் - அவித்தல்
நேரி - அமுக்கு, நசுக்கு, அழுத்து நேறி - வழி, கோயில், கற்பு
பரட்டை - பரட்டைத்தலை பறட்டை - செழிப்பற்றது
பரதி - கூத்தாடுபவன் பறதி - அவசரம், பறத்தல்
பரத்தல் - அலமறுதல், மிகுதல் பறத்தல் - பறந்துசெல்லல்
பரம்பு - வயலை சமப்படுத்தும் பலகை பறம்பு - பாரியின் மலை
பரல் - விதை, பருக்கைக்கல் பறல் - பறவை
பரவை - கடல், ஆடல், பரப்பு பறவை - பறப்பவை, ஒரு நோய்
பரி- குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி பறி - பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு,ஓலைப்பாய்
பரித்தல் - காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல், பறித்தல் - பிடுங்குதல்
பரிவு - அன்பு, துன்பம், இரக்கம் பறிவு - கழிவு, அதிர்தல்
பருகு - குடி, அருந்து பறுகு - பறட்டை, அன்பு, பக்குவம்
பரை - சிவசக்தி பறை - இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல்
பாரை - கடப்பாரை பாறை - கற்பாறை
பிரை - உறைமோர், பயன் பிறை - பிறைச்சந்திரன்
பீரு - புருவம்,அச்சமுள்ளோன் பீறு - கிழிவு
புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,பின்புறம், முதுகு
புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் புறவு - காடு, புறா,
பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,மிகுவித்தல் பெறுக்கல் - அரிசி, மிகுத்தல்
பொரி - நெற்பொரி, பொரிதல் பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு
பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல் பொறித்தல் - எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல்
பொருப்பு - மலை, பக்கமலை பொறுப்பு - பாரம், பொறுமை
பொரு - போர் பொறு - பொறுத்திரு
மரத்தல் - விறைத்தல் மறத்தல் - மறதி, நினைவின்மை
மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,பறைவகை மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.
மரி - விலங்குகளின் குட்டி மறி - தடை செய்
மரித்தல் - இறத்தல், சாதல் மறித்தல் - தடுத்தல்,திரும்புதல், அழித்தல்.
மரை - மான் மறை - வேதம் (எ.கா:- அறம் பொருள், இன்பம் வீடு என்கிற நால் வேதங்கள்)
மரு - மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து. மறு - குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மருப்பு - கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு. மறுப்பு - எதிர்ப்பு
மருகு - வாசனை தாவரம் மறுகு - சிறியதெரு
மாரன் - மன்மதன், காமன் மாறன் - பாண்டியன், சடகோபாழ்வார்
முரி - பாலைநிலம், நொய், சிதைவு. முறி - ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
முருக்குதல் - அழித்தல், உருக்குதல். முறுக்குதல் - சுழற்றுதல், திரித்தல்.
வரம் - இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம். வறம் - வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை.
வரவு - வருமானம், வழி வறவு - கஞ்சி
வரப்பு - எல்லை, வரம்பு வறப்பு - வறட்சி, வறுமை, வற்றுதல்
விரகு - விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம். விறகு - எரிகட்டை
விரலி - மஞ்சள் விறலி - மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள்.
விரல் - மனித உடலில் உள்ள உறுப்பு விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.
விராய் - விறகு விறாய் - செருக்கு, இறுமாப்பு
வெரு - அச்சம் வெறு - வெறுத்துவிடு
வெரல் - மூங்கில் வெறல் - வெல்லுதல், வெற்றி கொள்ளல்
விரை - விரைந்துசெல் விறை - மரத்துப்போ(தல்)



No comments:

Post a Comment