LATEST

Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Wednesday, May 5, 2021

May 05, 2021

மெய்ப்பாடு மற்றும் அதன் வகைகள்

 மெய்ப்பாடு மற்றும் அதன் வகைகள்


இது அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்பதாவதாக இடம் பெறுவது. மெய்ப்பாடு என்னும் சொல்லுக்குப் பொருட்பாடு, வெளிப்பாடு, புலப்பாடு எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய் என்பது உடலைக் குறிக்கும்.

 

உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்பாக உடலில் புலப்படுவது உண்டு. பேச்சே இல்லாமல் உடல் வழியான புலப்பாட்டில் மட்டுமே கருத்துகளை உணர்த்தமுடியும். இதையே மெய்ப்பாடு என்று வகுத்தனர்.

 

இம் மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), உவகை, வெகுளி (கோபம்) என்று எட்டு வகைப்படும். இவ் எட்டு உணர்ச்சிகளையும் உடல் வழியாகவே உணர்த்துதல் மெய்ப்பாடு ஆகிறது. இம் மெய்ப்பாடு அகப்பாடல்களில் கூற்று நிகழ்த்தும் தலைமக்களுக்குப் பெரிதும் பயன்தருவது.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.


இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.


1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.


2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.


3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.


4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.


5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.


6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.


7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.


8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.


உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


Monday, May 3, 2021

May 03, 2021

கடையெழு வள்ளல் பாரி

 

கடையெழு வள்ளல் பாரி


இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்தூரர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளன. சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் வழங்கிவந்தது. அங்கேதான் பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான்.

பாரி சிறிய நாடு ஒன்றுக்குத் தலைவன். வேளிர் பலர் அக்காலத்தே அங்கங்கே இருந்தார்கள். அவருள் ஒருவன் அவன். அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பெயர். பறம்பு மலையை நடுவே உடையதாக விளங்கியமையால் நாட்டுக்கும் பறம்பு என்று பெயர் அமைந்தது. அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன.

அந்தக் காலத்தில் பறம்பு மலை நல்ல வளமுடையதாக இருந்தது. எங்கே பார்த்தாலும் மரங்கள் அடர்ந்திருந்தன. பலாமரங்கள் குலைகுலையாகப் பழங்களுடன் நின்றன. மரத்துக்கு மரம் தேன் கூடுகள் அடை அடையாக இருந்தன. மலைப்பாறைகளிலும் பெரிய பெரிய தேனிருல்கள் தேனை ஊற்றுப்போல ஒழுக விட்டுக்கொண்டு பரந்திருந்தன. வண்ணவண்ண மலர்கள் காணக் காண இனியனவாய் மலர்ந்திருந்தன. மலைப் பாறைகளில் அருகருகே பல சுனைகள் தெளிந்த நீரோடு விளங்கின. மலைவளம் சிறந்திருந்த பறம்பு மலையில் ஓரிடத்தில் பாரி சிறிய அரண்மனையைக் கட்டிக்கொண்டிருந்தான். வேறு ஓரிடத்தில் சிவபெருமானுக்குரிய கோயில் இருந்தது.

பாரிவேள் வீரத்திலே சிறந்தவன்; பண்பிலே நிறைந்தவன்; தமிழ்ப் பாவின் நயம் தேர்வதில் பெரியவன்; எல்லாவற்றிற்கும் மேலாகக் கொடையிலே இணையற்றவன். பாரி என்றவுடன் முதலில் அவனுடைய ஆட்சி நினைவுக்கு வருவதில்லை; அவன் வீரம் நினைவுக்கு வருவதில்லை; அவனுடைய வள்ளன்மையே மக்களின் உள்ளத்திலே தோன்றியது.

எத்தனையோ புலவர்கள் அவனிடம் வந்து வந்து அவனுடைய உபசாரத்தையும் விருந்தையும் பெற்று அளவளாவினர்கள்; அவனுடன் இருந்து தமிழ் நூல்களின் நயத்தை நுகர்ந்தார்கள்; அவனுடைய சிறப்பைப் புதிய பாடல்களால் பாடினர்கள்; விடை பெற்றுச் செல்லும்போது மன நிறைவையும், உவகையையும், நன்றியறிவையும், பலவகைப் பரிசில்களையும் தாங்கிச் சென்றார்கள். புலவர்களுக்கு அவன் உணவு தருவான்; உடை தருவான்; பொருள் தருவான். ஒர் ஊர் முழுவதையும் புலவருக்கு அளித்து அதில் வருகின்ற வருவாயை நுகரும்படி செய்வான்.

யாரேனும் புதிய புலவர் ஒருவருடைய பழக்கம் அவனுக்குக் கிடைத்தால் அதைப் பெரும் பேருகக் கருதி இன்புற்றான்; ஏதோ புதிய நாட்டைப் பெற்றவனைப் போன்ற களிப்பை அடைந்தான்.

மதுரை மாநகர்ச் சங்கத்தில் தலைமைப் புலவராகக் கபிலர் விளங்கின காலம் அது. பாரிவேளுக்கு அவருடைய பழக்கம் வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. பாண்டியனால் சிறப்புப் பெற்று விளங்கும் பெரும் புலவராகிய அவர் தன்னை நாடிவருவார் என்று எதிர் பார்ப்பது பேதைமை என்று எண்ணினான் பாரி. ஆகவே தக்க அறிஞர் ஒருவரை மதுரைக்கு அனுப்பிக் கபிலரைக் காணச் செய்தான். கண்டு, அவரைச் சந்தித்து இன்புறவேண்டும் என்று தனக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிவித்து, பறம்பு மலைக்கு வரவேண்டும் என்று அழைக்கச் சொன்னான். சென்றவர் கபிலரிடம் பணிவான சொற்களைக் கூறிப் பாரியினுடைய ஆர்வத்தைத் தெரிவித்தார். கபிலர் வருவதாகச் சொல்லி அனுப்பினர். அப்படியே சென்றார்.

பாரிவேள் கபிலருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தான். கபிலரைக் கடவுளாகவே எண்ணி வழிபட்டான். அவனுடைய பேரன்பை அறிந்த கபிலர் மனம் உருகினர். அடிக்கடி அங்கே வந்தார். இருவருக்குமிடையே இருந்த அன்பு சிறந்த நட்பாக உருவாயிற்று. அதன் பயனாகக் கபிலர் மதுரையை விட்டுவிட்டுப் பறம்பு மலைக்கே வந்து விட்டார். பாரிக்குத் துணைவராகவும், ஆசிரியராகவும், அவைக்களப் புலவராகவும் விளங்கலானர்.

பாரிவள்ளலின் உயர்ந்த பண்புகளில் ஈடுபட்டார் புலவர். அவனுடைய கொடைத்திறத்தைக் கண்டு வியப்படைந்தார். அவனுடைய குணங்களை அருமையான பாடல்களால் பாராட்டினர்.

பறம்பு நாட்டில் அடர்ந்த காடுகளும் இருந்தன. பாரிவேள் அவ்வப்போது தன் நாட்டு மக்களைக் கண்டு அளவளாவி விட்டு வருவான். மலையின்மேல் உள்ள மலைவளத்தைக் கண்டு மகிழ்வது போலவே கீழே உள்ள காட்டு வளத்தையும் கண்டு களிப்பான்.

ஒருநாள் காடு அடர்ந்த ஓரிடத்திற்குச் சென்றான் பாரி. காட்டினிடையே தேர் செல்லுதற்கு ஏற்ற வழிகள் இருந்தன. அன்று அவன் தேரிலே தான் சென்றான். தேர்ப்பாகன் அதை ஓட்டிச் சென்றான். பல இடங்களைப் பார்த்துவிட்டு மீண்டு வந்தான், அப்போது பிற்பகல் வேளை, கதிரவன் மேல் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். பறம்பு மலையின் அடிவாரத்தை நோக்கித் தேர் போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த வள்ளல், “தேரை நிறுத்து” என்று கூவினான். இரு பக்கங்களிலும் உள்ள இயற்கை வளத்தை அவன் பார்த்துக் கொண்டே வந்தான்; ஆதலின் தேர் மெல்லத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போது, தேரை நிறுத்து. என்று அவன் சொல்லவே பாகன் நிறுத்தினான்.

பாரிவள்ளல் தேரிலிருந்து இறங்கினான். அங்கே அருகில் ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது; இளங்கொடியாக இருந்தது. நிறைய அரும்பு கொத்துக் கொத்தாக விளங்கியது. மாலை நேரம் வந்தால் அத்தன அரும்புகளும் மலர்ந்து மணக்கும். தளதளவென்று வளர்ந்திருந்தது முல்லைக்கொடி. ஆனால் அது பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தளர்நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல அது தளர்ந்து ஆடியது. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக் கொள்வதற்காக நாலு புறமும் வெறும் வெளியைக் கையால் துழாவுவது போல அது அசைந்தது. மெல்லிய காற்றில் அது திருப்பித் திருப்பி அசைந்தது. சிறிது காற்றுப் பலமாக அடித்தால் போதும்; அது ஒடிந்து விழுந்துவிடு மென்று தோன்றியது. அது அங்கும் இங்கும் அசைகிறதைப் பார்த்தால், வழியில் போகிறவர்களை “எனக்கு ஒரு பற்றுக்கோடு தரமாட்டீர்களா?” என்று கேட்பது போல இருந்தது.

கொழு கொம்பு இல்லாமல் அந்தக் கொடி தளர்வதைக் கண்டான் பாரி. மக்கள் வறுமையினலோ பசியினுலோ பிணியினாலோ தளர்வதைக் கண்டால் அவன் மனம் பொறுப்பதில்லை; உடனே உதவி செய்ய முற்படுவான். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் இயல்பே அவனிடம் இல்லை. கையில் எது கிடைத்தாலும் அதை அப்போதே கொடுத்துவிடும் வேகம் உடையவன். மக்களிடம் மாத்திரமா இந்த அன்பு? விலங்கினங்கள் துன்புற்றாலும், பறவைகள் வருந்தினாலும் அவன் சும்மா இருப்பதில்லை. அவற்றின் வருத்தத்தைப் போக்க ஏதாவது செய்ய முற்படுவான். அவன் உள்ளம் கருணைமயமானது.

அத்தகையவன் கண்ணில் பற்றுக் கோடின்றிப் பதை பதைத்து நிற்கும் முல்லைக் கொடிபட்டது. அது இயங்காது; வாய் பேசாது. ஆனாலும் உயிர்க் கூட்டங்களில் ஒன்று; ஓரறிவுடைய உயிர் அது. எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் பாரியின் உள்ளம் அந்த உயிரைக் கண்டும் இரங்கியது. அதன் தளர்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்தான். அதனைப் படரவிடப் பக்கத்தில் மரம் இல்லை. இருந்தால் அதுவே பற்றிக் கொண்டிருக்குமே! யாரேனும் உழவனாக இருந்தால் எங்காவது போய் ஒரு மூங்கிலைத் தேடிக் கொணர்ந்து நட்டு அந்தக் கொடி படரச் செய்வான். பாரிக்கு அந்த யோசனை தோன்றவில்லை. முல்லைக் கொடியின் தளர்ச்சியை உடனே போக்க வேண்டும். என்ன செய்வது? இப்போது அவனும் அந்தக் கொடியைப் போலப் பதைபதைத்தான். பளிச்சென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாகனை அழைத்துத் தேர்க் குதிரைகளை அவிழ்த்து ஓட்டிவிடச் சொன்னான். பிறகு தேரை இழுத்து அந்தக் கொடிக்கருகில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னான்; தானும் ஒரு கை கொடுத்தான். அருகில் நின்ற தேரின்மேல் அந்தப் பூங்கொடியை எடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு உண்டான இன்பத்தை எப்படிச் சொல்வது?

பாரிக்கு இந்தச் சிறிய கொடிக்குத் தேரைப்பற்றுக் கோடாக வைக்கலாமா என்ற எண்ணமே தோன்றவில்லை. அந்தக் கொடியின் தளர்ச்சி ஒன்றே அவன் கண்ணிலும் கருத்திலும் நின்றது. அருகில் எது இருந் தாலும் பற்றுக்கோடாக நிறுத்த வேண்டும். என்ற எண்ணமே முன் நின்றது. தேர் இல்லாவிட்டால், அவனே அங்கே நின்றிருப்பான்!


பாரி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். முல்லை பற்றுக்கோடு பெற்றுப் படர்ந்த அழகைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். அந்த வள்ளலின் சீரிய பண்பை எண்ணி எண்ணி அவனுடன் நடந்து கொண்டிருந்தான் தேர்ப் பாகன். குதிரைகளோ நேரே பறம்புமலையின் அடிவாரத்தை நாடிச் சென்றன.

அங்கே இருந்த குடிமக்கள் குதிரைகளை மாத்திரம் கண்டார்கள். பாரியின் தேர் என்ன ஆயிற்று, அவன் என்ன ஆணான் என்ற கேள்விகள் எழுந்தன. அவர்கள் என்ன நிகழ்ந்ததென்று அறிந்துகொள்ளப் புறப்பட்டு வந்தபோது இடை வழியிலே பாரியையும் பாகனையும் சந்தித்தார்கள். பாகன் வாயிலாகப் பாரியின் செயலை அறிந்து வியந்தார்கள்; உள்ளம் நெகிழ்ந்தார்கள். முல்லைக் கொடி இருந்த இடம் சென்று ஒரு பந்தலை அமைத்து அதைப் படரவிட்டுத் தேரை இழுத்து வந்தனர் சிலர்.

காட்டுக்கு நடுவே பாரியின் உள்ளத்தைக் கனிவித்த முல்லைக் கொடி, வேறு எதற்கும் இல்லாத சிறப்புடன் பந்தலில் படர்ந்தது. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான் என்ற வியப்புக்குரிய செய்தி தமிழுலகம் முழுவதும் படர்ந்தது. புலவர்கள் புகழ்ந்தனர்; மன்னர்கள் பாராட்டினர்கள். அன்று முதல் ‘முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல்’ என்று யாவரும் பாரியை வழங்கலானார்கள்.

பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகும் அறிவும் நிரம்பின அவர்களுக்குக் கபிலர் தமிழறிவு ஊட்டினார். பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவையும் கண்டு வியந்தார்கள். அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் பாரியின் புகழோடு அவனுடைய பெண்களின் புகழையும் பரப்பினார்கள். பாண்டிய மன்னனுக்குப் பாரி மகளிரின் பெருமை தெரிந்தது. அவர்களை மணந்துகொண்டால் பாரியின் உறவும் கிடைக்கும் என்று எண்ணினான். அவனுக்கு முன்பே மணமாகியிருந்தது; பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். பல பெண்களை மணப்பது மன்னர்களின் வழக்கமாக இருந்ததால் அவனுக்குப் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று.

அவன் பாரிக்கு ஓலை போக்கினான். இரு பெண்களையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று ஓலை கூறியது. பாரி அதைக் கண்டவுடன் சினந்தான். அவன் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரும், “அரசர் அந்தப்புரத்தில் நூறு பேரோடு சேர்ந்து நாங்கள் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். வந்த தூதுவன் மறுப்புடன் மீண்டு சென்றான்.

பாரியின் புகழைக் கேட்டுப் பொறாமை அடைந்திருந்தான் பாண்டியன். ஆகவே அவன் தன் மகளை மணம் செய்து தர மறுத்ததையே காரணமாக வைத்துக்கொண்டு அவனோடு போர் தொடுக்க எண்ணினான். இந்தச் செய்தி சோழனுக்கும் சேரனுக்கும் எட்டியது. அவர்களும் பாரியின் மேன்மையை உணர்ந்து பொறாமை கொண்டவர்களே. அவர்களுக்கும் பாரியை அடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. காரணம் இல்லாமல் அவன் மேல் போர் தொடுக்கலாமா? பாண்டியன் செய்த காரியத்தையே அவர்கள் செய்தார்கள். தனித்தனியே பாரியின் மகளிரை மணக்க வேண்டுமென்று தூது விட்டார்கள்; மறுப்பே விடையாக வந்தது.

பாரியை வெல்லவேண்டும் என்ற கருத்துத் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர்களாக விளங்கிய மூவருக்கும் உண்டாகிவிட்டது. அவர்கள் ஒன்றுகூடி அவனோடு போர் செய்யத் தமக்குள் ஆலோசனை செய்தார்கள்; போர் முரசு கொட்டினார்கள்.

பாரி தன் படைவீரர்களை யெல்லாம் ஒன்று கூட்டினான். நாட்டிலுள்ள ஆடவர்களில் வலிமையும் காளைப் பருவமும் உடையவர்கள் படையில் சேர்ந்தார்கள். நாடு முழுவதையும் காப்பதைவிடப் பறம்பு மலையைக் காப்பாற்றுவது எளிது என்று தோன்றியது. ஆகவே படை முழுவதையும் அம்மலையின் மீது, வைத்துக்கொண்டு அரண்களையெல்லாம் செப்பம் செய்தான் பாரி.

மூவேந்தர் படைகளும் பறம்புநாட்டின் எல்லேயை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை ஆங்கே நின்று அப்படைகளை எதிர்த்தது. சில நாழிகைகளில் அது பகைப் படைகளுக்கு வழி விட்டுவிட்டது. அதைக கண்டு மும்மன்னர்களுக்கும் பெருமகிழ்ச்சி உண்டாகியது. எதிர்ப்பு இல்லாமலே பறம்பையும் பாரியையும் கைவசப்படுத்திவிடலாம் என்று எண்ணினார்கள். அதற்கு ஏற்றபடி அவர்கள் நாட்டுக்குள்ளே நுழைந்து செல்கையில் யாரும் எதிர்க்கவில்லை. பறம்பு மலையை அடைந்தார்கள். அந்த மலையின்மேல் பாரி படையுடன் தங்கியிருப்பதை அறிந்தார்கள். மலையின்மேல் ஏறுவதற்குக் குறுகிய வழிகள் சில இருந்தன. ஆனால் அந்தப் பெரும்படை முழுவதும் எளிதில் அவற்றின் வழியே ஏற இயலாது. அன்றியும், பகைப்படை அடிவாரத்துக்கு வந்துவிட்டதை அறிந்த பாரியின் படைவீரர்கள் மேலிருந்து கற்களை உருட்டினர்கள். அவை கீழேயிருந்த படைகளின் மேல் வந்து தாக்கின. மலையின்மேல் ஏறுவது எளிதாகத் தோற்றவில்லை. கீழிருந்து அம்பை எய்தார்கள். அம்புகளை யாரைக் குறிபார்த்து எய்வது? மேலுள்ள வீரர்கள் மறைந்து நின்று சிறிய துளைகளின் வழியே அம்பை எய்தார்கள். அவை பலரைக் கீழே வீழ்த்தின. தாம் நினைத்த வண்ணம் பாரியை எளிதில் வெல்வது இயலாத காரியம் என்பதை இப்போது முடிமன்னர்கள் உணர்ந்தார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மலையைச் சுற்றித் தங்கள் படையை நிறுத்தி முற்றுகையிடுவதென்றும், கீழிருந்து உணவுப் பொருள் மேலே செல்ல முடியாமல் தடுக்க வேண்டுமென்றும், நாளடைவில் உணவில்லாமல் மேல் உள்ளவர்கள் தாமே சரணடைவார்கள் என்றும் நினைத்தார்கள். அதன்படியே படைகள் நின்றன.

மேலே பாரியும் கபிலரும் படைவீரர்களும் இருந்தார்கள். அவர்கள் தம் கையில் சேமித்து வைத்திருந்த உணவுப் பண்டங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். மலையின்மேல் மூங்கில்கள் முற்றியிருந்தன. அவற்றில் விளைந்த நெல்லைத் தொகுத்து அரிசியாக்கிச் சோறு சமைத்தார்கள். இனிய பலாப்பழங்களை உண்டு பசியாறினார்கள். பலாக்கொட்டைகளை மாவாக்கி அதிலிருந்து உணவுப் பண்டங்களைச் செய்து உண்டார் கள். வள்ளிக் கிழங்குகளைப் பறித்தெடுத்துச் சுட்டுத் தின்றார்கள். மிகுதியாகத் தேனடைகள் இருந்தமையால் இனிய தேன் குடம் குடமாகக் கிடைத்தது. பல பல சுனைகளில் தெளிந்த நீர் இருந்தது. ஆகவே, கீழிருந்து உணவுப் பண்டம் வாராமையால் அவர்களுக்கு எந்த இடையூறும் நேரவில்லை.

சில மாதங்கள் முற்றுகை நடந்து கொண்டிருந்தது. மன்னர்கள், மேலே இருப்பவர்கள் எப்படி உண்டு வாழ்கிறார்கள் என்று அறியாமல் வியப்படைந்தார்கள். ஒரு நாள் அம்பிலே கோத்த ஓலையொன்று மேலிருந்து கீழே வந்தது. கபிலர் ஒரு பாடல் பாடி அனுப்பியிருந்தார். "மலைமேல் எங்களுக்கு மூங்கில் நெல் கிடைக்கிறது. பலாமரங்கள் கணக்கில்லாத பழங்களை வழங்குகின்றன. வள்ளிக் கிழங்குக்குப் பஞ்சமே இல்லை. எங்கே பார்த்தாலும் தேனடைகள் மலிந்திருக்கின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போலத் தெளிந்த நீர்ச் சுனைகள் பல இங்கே இருக்கின்றன. ஆகவே எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. நீங்கள் அங்கே ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு யானையாகக் கட்டி வைத்தாலும் சரி, பல பல தேர்களைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் சரி, உங்களால் பறம்பு மலையைக் கைக்கொள்ள முடியாது” என்ற கருத்து அந்தப் பாட்டில் இருந்தது. அதைக் கண்டு சேர சோழ பாண்டியர்கள் ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள்.

கபிலர் ஒரு தந்திரம் செய்தார். கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அவற்றைப் பறக்கவிட்டுக் கீழே வயல்களில் விளையும் நெற்கதிர்களைக் கொண்டு வரும்படி செய்தார். அப்பறவைகள் கொண்டு வந்த நெல்லைக் கொண்டு சோறு சமைத்து அதையும் உண்டார்கள் பாரியின் வீரர்கள்.

பல காலம் முற்றுகையிட்டிருந்தாலும் உணவுக் குறைவு மேலே இருப்பவர்களுக்கு நேராது என்பதை மன்னர்கள் அறிந்து, தம் படைகளை மீட்டுக்கொண்டு தம் ஊரை அடைந்தார்கள். அவர்களுக்கு மனத்துக்குள் கோபம் மூண்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டார்கள். போன பிறகும் பாரியைத் தொலைக்க வஞ்சகமாக ஏதாவது வழி உண்டா என்று ஆராய்ந்தார்கள்.

பாரியிடம் புலவரும் பாணரும் விறலியரும் தடையின்றிப் பரிசு பெற்றுச் செல்வதைத் தமிழுலகம் நன்கு அறிந்திருந்தது. முடி மன்னர் மூவரும் அறிந்திருந்தார்கள். அதனால், யாழ் வாசிக்கத் தெரிந்த சிலரை அழைத்துத் தம் கருத்தை முடிக்கும் படி ஏவினார்கள். அவ் வஞ்சப் பாணர்கள் பாரியிடம் சென்று யாழிசையாலும் பாட்டாலும் அவன் அன்பைப் பெற்றனர். ஒரு நாள் மலைவளம் காணவேண்டும் என்று அவனுடன் சென்றனர். கபிலர் அப்போது வெளியூர் சென்றிருந்தார்.

பறம்பு மலையின்மேல் மரங்கள் அடர்ந்த சூழலில் அந்த வஞ்சகர்களுடன் பாரி நடந்து சென்றான். அப்போது அந்தக் கொடுஞ் செயலாளரில் ஒருவன் பாரியை வாளால் துணித்து வீழ்த்திவிட்டான். பின்பு அந்த வஞ்சகர்கள் தம் வேடத்தை மாற்றி ஓடி விட்டார்கள்.

பொய்யாது பெய்த மேகம் வறண்டது. புலவர்களுக்கு வற்றாது நல்கிய அருவி வற்றியது. பறம்பு நாடு மட்டுமா கண்ணீர் வடித்தது? தமிழ்நாடு முழுவ துமே பாரியின் மறைவுக்காகப் புலம்பியது. கபிலர் வெளியூரிலிருந்து ஓடி வந்தார். உயிருடன் தம் நண்பனைக் காண முடியாததற்காக அடித்துக்கொண்டு அழுதார். தாமும் உலக வாழ்வை நீத்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனாச் பாரியின் மகளிர் இருவரையும் தக்க இடத்தில் மனம் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அவ்வாறு செய்யவில்லை.

பாரி மறைந்த பிறகு பகை மன்னர் அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். அதனை அறிந்த கபிலர் அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுவிட்டார். சில வேளிர்களிடம் சென்று அப்பெண்களை மணம் புரிந்துவ்கொள்ளும்படி கேட்டார். பல காரணங்களால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். கடைசியில் மனம் வெறுத்துப்போன அச்சான்றோர் இரண்டு பெண்களையும் ஒரு நல்ல குடும்பத்தில் அடைக்கலமாக ஒப்பித்துவிட்டு, ஒருவரும் அறியாமல் பெண்ணையாற்றங்கரையில் பட்டினி கிடந்து உயிர் நீத்தார்.

சில நாட்களுக்குப் பின்பு தமிழ்ப் புலமையிற் சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அப்பெண்கள் இருக்குமிடத்தை அறிந்து, மலையமான் திருமுடிக்காரியின் மரபில் வந்த ஒருவனுக்கு அவர்களை மணம் முடித்துவைத்தார்.



May 03, 2021

வ.உ.சிதம்பரனாரின் குறள் முகம்

 

வ.உ.சிதம்பரனாரின் குறள் முகம்


·         வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் உரை வெகு பிரசித்தம். அதை வெளியிடுவதற்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றியுமிருக்கிறார். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் இரு கண்களாகக் கருதி வ.உ.சி. போற்றியிருக்கிறார்; இரண்டையும் கற்றுத்தேர்ந்து, அதன் உரைகளின் இயல்புகளை மதிப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்.

·         வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவரைச் சந்திக்கவந்த நண்பர் சுவாமி வள்ளிநாயகத்திடம், “தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லைஎன்றிருக்கிறார். திருக்குறள் மீது வ.உ.சி. கொண்டிருந்த அளவுகடந்த பெருமதிப்புக்கு இந்த வரிகள் ஓர் உதாரணம்.

·         இந்தப் பெரும் பற்றின் காரணமாகத்தான் ப.ஜீவானந்தம், திருக்குறள் பித்தர் என்று வ.உ.சி.யை அன்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

·         திருக்குறள் அன்பர் என்று வ.உ.சி. தன்னைத் தானே அழைத்து மகிழ்ந்துகொண்ட நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. வள்ளுவத்துக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு உயிரும் உடலுமானதாக இருந்தது.

 

திருக்குறள் உரை

·         திருக்குறள் உரைகளிலேயே மணக்குடவர் உரை வ.உ.சி.யை வெகுவாகக் கவர்ந்தது.

·         அதனால், மணக்குடவர் உரைச் சுவடியை முதன்முதலாக அச்சிட்டு மகிழ்ந்தார்.

·         அறத்துப்பாலை மட்டும் கொண்ட முதல் பகுதியை 1917-ல் வெளியிட்டார்.

·         வ.உ.சி. பதிப்புத் துறையில் ஈடுபட்டுப் பதிப்பித்த நூல்களுள் திருக்குறள் மணக்குடவர் உரை மிக முக்கியமானதாகும்.

·         பரிமேலழகர் உரை பல இடங்களில் பிழையாயுள்ளது என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியன அல்ல என்றும் வ.உ.சி. தமக்கு இயற்கையாயுள்ள ஆவேசத்தோடு பேசியிருக்கிறார்.

 

தனித்துவமான வ.உ.சி. உரை

·         திருக்குறள் முழுவதற்கும் உரையெழுத வேண்டும் என்று வ.உ.சி. திட்டமிட்டு, அறத்துப்பால் உரைப் பகுதியை முதலாவதாக 1935-ல் வெளியிட்டிருக்கிறார்.

·         திருக்குறளுக்குரிய நவீனகால உரைகளுள் வ.உ.சி.யின் உரை தனித்து நோக்கத்தக்கதாகும்.

·         இந்த உரைப் பதிப்பில் காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம்என்று பதிவுசெய்து தம் சுதேசிய உணர்வைப் பறைசாற்றிப் பெருமை கொண்டிருக்கிறார் வ.உ.சி.

·         திருக்குறளின் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் (இப்படி அமைப்பது வ.உ.சி. வழக்கு) மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று அவர் விரும்பியபோதும், பக்க மிகுதியைக் கருத்தில்கொண்டு அறப்பால் பகுதியை மட்டும் முதலில் வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி வெளிவந்த அடுத்த ஆண்டு அதாவது 1936-ல் வ.உ.சி. காலமாகிவிட்டதால் ஏனைய பகுதிகள் வெளிவராமல்போயின. குறளின் ஏனைய இரு பகுதிகளுக்கும் வ.உ.சி. உரை எழுதினாரா, இல்லையா?’ என்ற ஐயமும் பலருக்கு இருந்துவந்த நிலையில், பேராசிரியர் மா.ரா.அரசு எழுதிய வ.உ.சிதம்பரனார்என்ற நூலில் (2005) பொருட்பால், இன்பப்பால் பகுதிக்குமான வ.உ.சி.யின் உரை இருப்பது குறித்து எழுதினார்.

 

எல்லோருக்குமான வள்ளுவர்

·         வ.உ.சி. திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்காலமும் முந்தைய உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்காலமுமாகிய இடைக்காலப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றும் முடிவு செய்கிறார்.

Sunday, July 12, 2020

July 12, 2020

பொது அறிவு வினா விடை 10

பொது அறிவு வினா விடை 10

91. இரட்டைப்பதிவு கணக்குப்பதிவியல் முறையினைக் கண்டுபிடித்தவர்
விடை: லூக்கா பேசியாலா
 
92. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது
விடை: கலவை வங்கி முறை
 
93. 2008-2009 நிதி ஆண்டிற்கு வருமான வரி வதி விலக்குக்கு உட்பட்ட வருமான அளவு
விடை: ரூ. 1,50,000
 
94. ‘மறு ஏற்றுமதி’ வணிகம் என்றால் என்ன?
விடை: இறக்குமதி-ஏற்றுமதி வணிகம்
 
95. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு
விடை: 1969 (சென்னை)
 
96. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930-ம் ஆண்டுடன் தொடர்புடையது
விடை: சட்டமறுப்பு இயக்கம்
 
97. பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை எழுதியவர்
விடை: கல்கி
 
98. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது
விடை: மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய
 
99. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்
விடை: C. ராஜகோபாலாச்சாரி
 
100. தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊர்
விடை: எட்டயபுரம்

July 12, 2020

பொது அறிவு வினா விடை 09

பொது அறிவு வினா விடை 09

81. ‘மெய்கீர்த்தி’ என்பது
விடை: கல்வெட்டின் வரலாற்று முகவுரை
 
82. ‘சமூகவியல்’ என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது
விடை: லத்தீன், கிரேக்க சொல்லிருந்து
 
83. ‘சமூகவியல்’ என்ற சொல்லை தோற்றுவி;த்தவர்
விடை: காம்டே
 
84. யாருடைய ஆட்சிகாலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை?
விடை: பல்லவர்
 
85. ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டுமல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினர்?
விடை: குடும்ப அமைப்பு
 
86. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர்
விடை: ஜவஹர்லால் நேரு
 
87. லோக்சபாவிற்கு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது
விடை: நேரடி தேர்தலினால்
 
88. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்?
விடை: நேரு
 
89. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பிலிருந்து
எடுக்கப்பட்டது?
விடை: அயர்லாந்து
 
90. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர்
விடை: பிரதம அமைச்சரால் மற்றும் காபினெட்டின் ஒப்புதலோடு
July 12, 2020

பொது அறிவு வினா விடை 08

பொது அறிவு வினா விடை 08

71. பொகாரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
விடை: ஜார்கண்ட்
 
72. நீலகிரி மலை ஒரு பகுதியாக அமைந்துள்ள தொடர்
விடை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
 
73. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை
விடை: ஈரோடு
 
74. மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
விடை: திருநெல்வேலி
 
75. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): வறட்சி என்பது படிப்படியாக நடைபெறுகிற நிதழ்ச்சியாதலால்
இந்நிகழ்ச்சியை துல்லியமாக முன்கூட்டியே தெரிவிப்பது கடினமான
ஒன்று
காரணம் (R): சொற்பமான மழைப்பொழிவும் மற்றும் அதீத அளவில் நிலத்தடி
நீரை உறிஞ்சுதல் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது
விடை: (A) மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
 
76. பொருத்துக:
சென்னை - 13^0 வ 81^0 கி
உறைந்த மண்டலங்கள் - துருவங்கள்
புவி அச்சு - சுழற்சி
சந்திர கிரகணம் - 100 நிமிடங்கள்
 
77. கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்:
விடை: காற்று மற்றும் புவி சுழற்சி ஆகியவற்றை பொருத்து நீரோட்டங்களின் திசைகள் அமைகின்றன
 
78. தென் அரைக்கோளத்தில் 550 அட்சக்கோட்டிற்கு தெற்கே அமைந்து உள்ள நீர்ப்பரப்பின் பெயரானது
விடை: தென் பெருங்கடல்
 
79. ஒரிசா கடற்கரை பெரும்புயலால் தாக்கப்பட்ட நாள்ஃநாட்கள்
விடை: 29 அக்டோபர், 1999
 
80. கடலினடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உருவாகும் நீண்ட இராட்சத பேரழிவு அலைகள்
விடை: கடற்கோள்களாகும்
July 12, 2020

பொது அறிவு வினா விடை 07

பொது அறிவு வினா விடை 07

61. மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது?
விடை: யூக்கலிப்டஸ்
 
62. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகிறது?
விடை: ரஷ்யா
 
63. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள இடம்
விடை: நெய்வேலி
 
64. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையாகும்?
விடை: விந்துக்குழாய் அகற்றல்
 
65. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. வருடத்திற்கு 5மூ வீதம் அதிகரித்தால், 2 வருடம் கழித்து அந்நகரத்தின் மக்கள் தொகை
விடை: 1,94,481
 
66. இந்திய தேர்தல் ஆணையம் தனது ஐம்பதாம் ஆண்டு நிறைவை கண்ட தினம்
விடை: ஜனவரி 17, 2001
 
67. ராவ்-மன்மோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு
நடைமுறைப்படுத்தப்பட்டது?
விடை: 1991
 
68. குஜராத்தில் புவி அதிர்ச்சி ஏற்பட்ட நாள்
விடை: ஜனவரி 25, 2001
 
69. பின்வருவனவற்றில் யார் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின்
தலைமைப் பொருப்பை தற்போது ஏற்றுக்கொண்டவர்?
விடை: முகமது சஃபி குரேசி
 
70. மத்திய கல்வி நிறுவனங்களில் OBC இட ஒதுக்கீடு தலைவராக நியமிக்கப்பட்ட அரசியல் பிரமுகர் யார்?
விடை: வீரப்ப மொய்லி
July 12, 2020

பொது அறிவு வினா விடை 06

பொது அறிவு வினா விடை 06

51. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும் போது அதன் இயக்க ஆற்றல்
விடை: நான்கு மடங்காகும்
 
52. ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும் போது அதன் வேக வளர்ச்சி
விடை: பூஜ்ஜியம்
 
53. டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர்
விடை: மைக்கேல் ஃபாரடே
 
54. மின் சாதனங்களுக்கு புவி இணைப்பு தரப்படுவது
விடை: மின் குறுக்கு ஏற்படும்போது, மின்னோட்டம் கெடுதல் விளைவிக்காமல் பூமியைச் சென்றடைய
 
55. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை
விடை: குறையும்
 
56. டி.என்.ஏ என்பது எதனால் உண்டாக்கப்பட்டது
விடை: நியூக்ளியோடைடுகள்
 
57. இரும்பு துருப்பிடித்ல் கீழ்கண்டவற்றுள் எது என தேர்வு செய்:
விடை: ஆக்ஸிஜனேற்றம்
 
58. பொருத்துக:
அம்மோனியம் சல்பேட் - உரம்
குளோரோபாரம் - மயக்க மருந்து
கார்பன் - ஒடுக்கி
ஹைட்ரஜன் பெராக்ஸைடு - நிறம் நீக்கி
 
59. கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:
துணிபு (A): குடிக்கும் சோடா சிறிது அமிலத் தன்மையுடையது
காரணம் (R): அதில் கார்பன்டைஆக்ஸைடு உள்ளது
விடை: (A) தவறு, ஆனால் (R) சரி
 
60. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது
விடை: யுரேனியம் ரு-235
July 12, 2020

பொது அறிவு வினா விடை 05

பொது அறிவு வினா விடை 05

41. 11 எண்களின் சராசரி 60 ஆகும். அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும் கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால், ஆறாவது எண்ணின் மதிப்பு?
விடை: 66
 
42. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் யு-ன் வயது டீ-ன் வயதில் பாதியாக இருந்தது. தற்போதைய அவர்களின் வயது விகிதம் 3 : 4 எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
விடை: 35 வருடங்கள்
 
43. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 18,000. மக்கள் தொகை முதல் வருடத்தில் 10 சதவீதமும் இரண்டாவது வருடத்தில் 20 சதவீதமும் உயருமானால், இரண்டு வருடங்கள் கழித்து நகரத்தின் மக்கள் தொகை?
விடை: 23,760
 
44. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும்போது அதன் பரப்பளவின் குறைவு
 விடை: 75%
 
45. மாறுபாட்டுக் கெழுவினை கணக்கிடும் வாய்ப்பாடு
விடை: (S.D/Mean) x 100
 
46. Q1, Q2 மற்றும் Q3 என்பவை ஒரு புள்ளிவிவரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால்மானங்கள் எனில், கால்விலக்க குணகமானது
விடை: Q3-Q1/Q3+Q1
 
47. {2, 4, 5, 6, 8} என்ற புள்ளிவிவரத்தின் திட்ட விலக்கம்
விடை: 2
 
48. {12, 7, 3, 17, 7, 10, 7, 9, 14} என்ற புள்ளி விவரத்தின் முகடு மதிப்பு
விடை: 7
 
49. கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்டது எது?
A) கம்ப்யூட்டர் 
B) பிரிண்டர்
C) மௌஸ் 
D) புரோகிராம்
விடை: புரோகிராம்
 
50. கீழ்க்கண்டவற்றுள் எது மென்பொருள் இல்லை?
A) SPSS 
B) Windows
C) FORTRAN 
D) Excel
விடை: FORTRAN
July 12, 2020

பொது அறிவு வினா விடை 04

பொது அறிவு வினா விடை 04

31. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய
பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம்
 
32. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை
விடை: சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
 
33. நிதி நெருக்கடி காலங்களில்
விடை: ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர்நீதி மன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
 
34. பின்வரும் மாநிலங்களில் சமீபத்தில் சரத்து 356 ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது
விடை: பீகார்
 
35. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக
மாற்றியமைத்தார்?
விடை: 1944
 
36. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
விடை: குழந்தை இறப்பு விகிதம்
 
37. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது?
விடை: பற்றாக் குறையான உற்பத்தி; திறனால்
 
38. இந்தியாவில் வறுமைக்கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?
விடை: லக்கடா வாலா கமிட்டி
 
39. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எவ்வளவு?
விடை: 62.4 மில்லியன்
 
40. இந்திய திட்டக்குழு:
(i) 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
(ii) அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட குழு
(iii) ஒரு ஆலோசனை அமைப்பு
(iv) அரசின் ஒரு துறை
விடை: (i) மற்றும் (iii) சரியானவை
July 12, 2020

பொது அறிவு வினா விடை 03

பொது அறிவு வினா விடை 03

21. கீழ்க்கண்ட அரசர்களுள் யார் ‘கவிராஜா’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார்?
விடை: சமுத்திர குப்தர்
 
22. ‘இந்தியாவில் சமய அமைதியின்மை’ என்று கூறப்படும் காலம்
விடை: கி.மு. ஆறாம் நூற்றாண்டு
 
23. மகாவீரரின் மறுபெயர்
விடை: வர்த்தமானர்
 
24. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர்
விடை: சார்வாகம்
 
25. ‘சாங்கியம்’ என்பதன் பொருள்
விடை: எண்
 
26. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
விடை: தயானந்த சரஸ்வதி
 
27. ‘மத்துவா’ ஏற்றுக் கொள்வது
விடை: பஞ்ச பேதம்
 
28. சரியான விடையைக் காண்க
விடை: மாணிக்கவாசகர் என்பவர் திருவாதவூர் முனிவர் என்று அழைக்கப்பட்டவர்
 
29. ‘தமிழ் மறைகள்’ பாடியது
விடை: மூன்று முனிவர்கள்
 
30. ஐந்தாவது வேதம் என்பது
விடை: ஆயுர்வேதம்
July 12, 2020

பொது அறிவு வினா விடை 02

பொது அறிவு வினா விடை 02

11. கீழ்க் குறிப்பிட்டுள்ள தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழ்ப்புணர்ச்சி ஏற்பட முக்கிய பங்காற்றியது?
விடை: சுதேசமித்திரன்
 
12. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக
விடை: வ.உ. சிதம்பரனார்
 
13. தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை: 2006
 
14. ‘முதியோர் காதல்’ என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
விடை: பாரதிதாசன்
 
15. 2006- உலகக் கோப்பை கால்பந்து நடைபெற்ற நாடு
விடை: ஜெர்மனி
 
16. பொருத்துக:
வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி.க - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
 
17. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்
விடை: ஸ்ரீபெரும்புதூர்
 
18. பின்வரும் விருதுகளில் தமிழ்வளர்ச்சி துறையால் வழங்கப்படாத விருது எது?
விடை: கலைமாமணி விருது
 
19. ‘இரட்சணிய யாத்ரிகம்’ எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
விடை: எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
 
20. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்றைக் கீழ்க்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க:
விடை: காவடி ஆட்டம்
July 12, 2020

பொது அறிவு வினா விடை 01

பொது அறிவு வினா விடை 01

01. கிளைக்காலைஸிஸ் என்பது ............ன் மாற்றமாகும்.
விடை: குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
 
02. புரோட்டோபிளாசம் என்பது ‘வாழ்வின் மூலாதாரம்’ என்று அழைத்தவர்
விடை: ஹக்ஸ்லீ
 
03. ATP என்பது
விடை: ஒரு முலக்கூறு, அது அதிக ஆற்றல்கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது
 
04. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக ............ வழியாக நடைபெறுகிறது.
விடை: இலைத்துளை
 
05. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப்பொருள் ............
விடை: லாக்டிக் அமிலம்
 
06. நாளமில்லா சுரப்பிகள் என்பவை
A) நாளங்கள் இல்லாத சுரப்பிகள்
B) சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன
C)ஹார்மோன்களை சுரக்கின்றன
விடை: இவை அனைத்தும்.
 
07. ஹெபேரின் என்பது
விடை: உறைதலை தடுப்பது
 
08. கீழ்க்கண்டவற்றுள் எது மெண்டலியன் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்:
விடை: 9:3:3:1
 
09. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்
விடை: டிசம்பர் 1-ம் தேதி
 
10. மனிதனில் இதயத்துடிப்பின் தோற்றத்தில், கீழ்கண்டவற்றிலிருந்து தவறான விடைகளைத் தேர்ந்தெடு:
(i) சைனோ-ஆரிக்குலார் கணு (SA கணு) பேஸ் மேக்கராக செயல்படுவதில்லை
(ii) சைனோ-ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கராக செயல்படுகிறது
(iii) பேஸ்மேக்கர் வலது ஆரிக்கிளின் மேற்புறத்தில் அமைந்துள்ளது
(iv) பேஸ்மேக்கர் இடது ஆரிக்கிளின் மேற்புறத்தில் அமைந்துள்ளது
விடை: (i) மற்றும் (iv)

Saturday, April 18, 2020

April 18, 2020

பொது தமிழ் வினா விடை 98

பொது தமிழ் வினா விடை 98

1. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. முத்துராமலிங்கர் விருப்பத்துக்கு இணங்க மருதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார்
II. நடுவண் அரசு முத்துராமலிங்கரது அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.
III. ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் ‘தேசியம் காத்த செம்மல்’ எனும் விருதளித்தது.
IV. முத்துராமலிங்கர் தம் சொத்துகள் முழுவதையும் பதினேழு பாகங்களாகப் பிரித்து, திருக்கோவில்களுக்கு எழுதி வைத்தார்.
(A) I, III சரியானவை
(B) III, IV சரியானவை
(C) II, IV சரியானவை
(D) I, II சரியானவை
ANS: (D) I, II சரியானவை
2. ‘தமிழுக்குக் கதி’ என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்
(A) சங்க இலக்கியம், மகாபாரதம்
(B) சிலப்பதிகாரம், மணிமேகலை
(C) கம்பராமாயணம், திருக்குறள்
(D) தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்
ANS: (C) கம்பராமாயணம், திருக்குறள்
3. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” கூறியவர் 
 (A) மகாகவி பாரதியார்
(B) பேரறிஞர் அண்ணாத்துரை
(C) தமிழ்த்தென்றல் திரு.வி.க
(D) செயங்கொண்டார்
ANS: (B) பேரறிஞர் அண்ணாத்துரை
4. பொருத்ததுக:
(a) மணிமேகலை 1. உமறுப்புலவர்
(b) தேவாரம் 2. கிருஷ்ணப்பிள்ளை
(c) சீறாப்புராணம் 3. சீத்தலைச்சாத்தனார்
(d) இரட்சணியயாத்திரிகம் 4. சுந்தரர்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 1 2 4 3
(C) 3 4 1 2
(D) 1 4 2 3
ANS: (C) 3 4 1 2
5. “திராவிட சாஸ்திரி” – என அழைக்கப்பட்டவர்
(A) பரிதிமாற் கலைஞர்
(B) மறைமலை அடிகள்
(C) சி.வை. தாமோதரனார்
(D) உ.வே. சாமிநாதர்
ANS: (A) பரிதிமாற் கலைஞர்
6. பட்டியல் I உடன் பட்டியல் II யை பொருத்துக :
பட்டியல் I பட்டியல் II
(a) சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை, 1. கடுவெளிச்சித்தர்
ஆன்மீகத்துக்கும் இல்லை என்றவர்
(b) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் 2. ஜவஹர்லால் நேரு
எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றவர்
c) பிறர் தாழும்படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே 3. பசும்பொன் முத்துராமலிங்கர்
என்றவர்
(d) ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையைப் 4. தந்தை பெரியார் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர்
(a) (b) (c) (d) 
 (A) 1 2 4 3
(B) 3 4 1 2
(C) 2 3 1 4
(D) 4 2 3 1
ANS: (B) 3 4 1 2
7. ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர் யார்?
(A) ஓளவையார்
(B) கம்பர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
ANS: (B) கம்பர்
8. பொருத்துக :
(a) வினையே ஆடவர்க்குயிர் 1. தாராபாரதி
(b) உடம்பை வளர்த்தேன் ; உயிர் வளர்த்தேனே 2. தொல்காப்பியர்
(c) முந்தீர் வழக்கம் மகடூஉவோடில்லை 3. குறுந்தொகை
(d) விரல்கள் பத்தும் மூலதனம் 4. திருமூலர்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 3 4 2 1
(D) 4 3 2 1
ANS: (C) 3 4 2 1
9. பொருத்துக :
நூலாசிரியர் நூல்
(a) சி.சு.செல்லப்பா 1. ‘அப்பாவின் சிநேகர்’
(b) பி.எஸ்.இராமையா 2. ‘வலம்புரிச் சங்கு’
(c) அசோகமித்திரன் 3. ‘எழுத்து’
(d) நா.பார்த்தசாரதி 4. ‘நட்சத்திரக் குழந்தைகள்’
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 3 4 2 1
(C) 4 3 1 2 
 (D) 1 2 3 4
ANS: (A) 3 4 1 2
10. “அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” - இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
(A) தாயுமானவர்
(B) இராமலிங்கர்
(C) திருமூலர்
(D) மறைமலையடிகள்
ANS: (B) இராமலிங்கர்
April 18, 2020

பொது தமிழ் வினா விடை 97

பொது தமிழ் வினா விடை 97

1. சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
(A) பாம்பு
(B) இறுமாப்பு
(C) உடம்பு
(D) வேம்பு
ANS: (C) உடம்பு
2. பொருட்பாலில் பகுக்கப் பெறாத இயல்
(A) பாயிரவியல்
(B) அரசியல்
(C) அங்கவியல்
(D) ஒழிபியல்
ANS: (A) பாயிரவியல்
3. கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்
(A) அயோத்தியா காண்டம்
(B) மதுரைக் காண்டம்
(C) ஆரணிய காண்டம்
(D) யுத்த காண்டம்
ANS: (B) மதுரைக் காண்டம்
4. தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது
(A) நாயக்கர் காலம்
(B) களப்பிரர் காலம்
(C) கற்காலம்
(D) உலோகக் காலம்
ANS: (B) களப்பிரர் காலம் 
5. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
- எனும் குறளில் ‘கூகை’ என்பதன் பொருள் யாது?
(A) ஆட்டுக்கடா
(B) கோட்டான்
(C) முதலை
(D) யானை
ANS: (B) கோட்டான்
6. “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” – என்னும் பழமொழியில் ‘அஷ்டபிரபந்தம்’ என்பது எத்தனை நூல்களைக் குறிக்கிறது?
(A) பத்து நூல்கள்
(B) பதினெட்டு நூல்கள்
(C) எட்டு நூல்கள்
(D) நான்கு நூல்கள்
ANS: (C) எட்டு நூல்கள்
7. பொருத்துக :
(a) சிறுபஞ்ச மூலம் 1. கணி மேதாவியார்
(b) திருவிளையாடல் புராணம் 2. முன்னுரை அரையனார்
(c) பழமொழி நானூறு 3. பரஞ்சோதி முனிவர்
(d) ஏலாதி 4. காரியாசன்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 1 3 2 4
(C) 4 2 3 1
(D) 4 3 2 1
ANS: (D) 4 3 2 1
8. பொருத்துக :
ஊர் சிறப்புப்பெயர்
(a) சிதம்பரம் 1. திருமறைக்காடு
(b) வேதாரணியம் 2. திருச்சிற்றம்பலம்
(c) விருத்தாசலம் 3. திருப்பாதிரிப்புலியூர்
(d) கடலூர் 4. திருமுது குன்றம்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3 
(B) 3 1 2 4
(C) 2 3 1 4
(D) 2 1 4 3
ANS: (D) 2 1 4 3
9. தன் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?
(A) கால்டுவெல்
(B) வீரமாமுனிவர்
(C) ஜி.யு.போப்
(D) சீகன் பால்கு
ANS: (C) ஜி.யு.போப்
10. ‘திருவேங்கடத்தந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) குமரகுருபரர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) கம்பர்
(D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
ANS: (D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
April 18, 2020

பொது தமிழ் வினா விடை 96

பொது தமிழ் வினா விடை 96

1. ‘ஆற்றுணா வேண்டுவ(து) இல்’ - இப்பழமொழியில் உள்ள ‘ஆற்றுணா| என்பதன் பொருள்.
(A) அரையன்
(B) வழிநடை உணவு
(C) அரண்மனை
(D) திருவிழா
ANS: (B) வழிநடை உணவு
2. சங்க கால இலக்கியங்கள்
(A) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
(B) நன்னூலும், நம்பியகப்பொருளும்
(C) கம்பராமாயணமும், பெரியபுராணமும்
(D) வளையாபதியும், குண்டலகேசியும்
ANS: (A) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
3. கீழக்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக.
I. பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.
II. கபிலர் பாடிய அறநூல் ‘இன்னா நாற்பது’ 
III. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது
IV. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
(A) II மட்டும் பொருத்தமற்றது (B) III மட்டும் பொருத்தமற்றது
(C) IV மட்டும் பொருத்தமற்றது (D) I மட்டும் பொருத்தமற்றுது
ANS: (D) I மட்டும் பொருத்தமற்றுது
4. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம்” கலிங்கத்துப்பரணியே - இப்படிக் கூறியவர்
(A) திரு.வி. கல்யாண சுந்தரம்
(B) பெரியார்
(C) அண்ணாதுரை
(D) மு.வரதராசன்
ANS: (C) அண்ணாதுரை
5. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
(A) தொண்டகப்பறை
(B) செங்கோட்டுயாழ்
(C) புல்லாங்குழல்
(D) உடுக்கை
ANS: (A) தொண்டகப்பறை
6. “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்
(A) ஓவியக் கலைஞர்கள்
(B) சிற்பக் கலைஞர்கள்
(C) கட்டடக் கலைஞர்கள்
(D) இசைக் கலைஞர்கள்
ANS: (A) ஓவியக் கலைஞர்கள்
7. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
(A) சுவாமிமலை
(B) பிள்ளையார்பட்டி
(C) திருப்பரங்குன்றம்
(D) பழனி
ANS: (B) பிள்ளையார்பட்டி
8. கீழக்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
(A) ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
(B) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
(C) கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
(D) சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே
ANS: (B) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்
9. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர் 
(A) தருமர்
(B) ஜி.யு.போப்
(C) மல்லர்
(D) பரிமேலழகர்
ANS: (B) ஜி.யு.போப்
10. கபிலரைப் பிற கவிஞர்கள் புகழ்ந்ததைச் சரியாகப் பொருத்துக :
(a) நக்கீரர் 1. ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’
(b) பெருங்குன்றூர் கிழார் 2. ‘வாய்மொழிக் கபிலன்’
(c) இளங்கீரனார் 3. ‘பொய்யா நாவிற் கபிலன்’
(d) மாறோக்கத்து நப்பசலையார் 4. ‘நல்லிசைக்கபிலன்’
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 3 4 2 1
ANS: (B) 2 4 1 3
April 18, 2020

பொது தமிழ் வினா விடை 95

பொது தமிழ் வினா விடை 95

1. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 
புல்லார் புரள விடல் - இக்குறட்பாவில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(A) உரிச்சொற்றொடர்
(B) வினையெச்சம்
(C) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ANS: (D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. கீழக்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
(A) இடப்பக்கச் சுவறில் எழுதாதே
(B) இடது பக்கச் சுவரில் எழுதாதே
(C) இடக்பக்கச் சுவற்றில் எழுதாதே
(D) இடப்பக்கச் சுவரில் எழுதாதே
ANS: (D) இடப்பக்கச் சுவரில் எழுதாதே
3. கீழக்காணும் அடிக்கோடிட்ட சொற்களுள் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் காண்க.
(A) அறிவறிந்த மக்கட்பேறு
(B) இராமனுக்கு அடி விழுந்தது.
(C) முருகன் பரிசு பெற்றான்
(D) மாதவி ஆடற்கலையில் சிறந்தவள்
ANS: (A) அறிவறிந்த மக்கட்பேறு
4. ‘வந்தான்’, ‘நடந்தான்’” – வேர்ச்சொல்லைச் சுட்டுக.
(A) வந்து, நடந்து
(B) வந்த, நடந்த
(C) வா, நட
(D) வந்தான், நடந்தான்
ANS: (C) வா, நட
5. பின்வரும் சொற்களில் ஈறுபோதல் விதிப்படியும் இனமிகல் விதிப்படியும் புணரும் பண்புச் சொல்
எது?
(A) நிலங்கடந்தான்
(B) வாழைப்பழம்
(C) கருங்குயில்
(D) பெரியன்
ANS: (C) கருங்குயில்
6. ‘விரல்கள் பத்தும் மூலதனம்’ என்று கூறியவர்
(A) திருமூலர்
(B) தொல்காப்பியர்
(C) தாராபாரதி
(D) மருதகாசி
ANS: (C) தாராபாரதி
7. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப்பெறுவது எது?
(A) மதுரை
(B) நாகர்கோவில்
(C) இராமநாதபுரம்
(D) திருச்சி
ANS: (A) மதுரை
8. கீழ்காணும் நூலகளில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது? 
 (A) அகநானூறு
(B) கலித்தொகை
(C) ஐங்குறுநூறு
(D) நெடுநல்வாடை
ANS: (D) நெடுநல்வாடை
9. தமிழநாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
(A) தேசியக்கொடி
(B) கதரின் வெற்றி
(C) தேச பக்தி
(D) கதரின் இரகசியம்
ANS: (B) கதரின் வெற்றி
10. நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக
(a) குறிஞ்சி 1. ஆலங்காடு
(b) முல்லை 2. கோடியக்கரை
(c) மருதம் 3. ஆனைமலை
(d) நெய்தல் 4. புளியஞ்சோலை
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 1 3 4
(C) 3 2 1 4
(D) 1 3 4 2
ANS: (A) 3 1 4 2
April 18, 2020

பொது தமிழ் வினா விடை 94

பொது தமிழ் வினா விடை 94

1. “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர்
செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது
(A) மணக்கொடை
(B) கைம்மை ஒழிப்பு
(C) மூடநம்பிக்கை
(D) குழந்தைத் திருமணம்
ANS: (D) குழந்தைத் திருமணம்
2. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
(A) நாற்சீர்
(B) முச்சீர்
(C) ஐஞ்சீர்
(D) அறுசீர்
ANS: (B) முச்சீர்
3. இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
(A) உ, ஒ
(B) இ, ஈ
(C) அ, ஆ
(D) ப, ம
ANS: (A) உ, ஒ
4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
ஐயோ, முள் குத்திவிட்டதே!
(A) வினா வாக்கியம்
(B) கட்டளை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம் 
ANS: (C) உணர்ச்சி வாக்கியம்
5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘சித்தன்னவாசல் ஓவியங்கள் அழகுமிக்கவை’
(A) வினா வாக்கியம்
(B) கட்டளை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம்
ANS: (D) செய்தி வாக்கியம்
6. கீழக்காணும் சொற்களுள் ‘நிலவு’ என்னும் பொருள் குறிக்காத சொல்
(A) திங்கள்
(B) ஞாயிறு
(C) இந்து
(D) மதி
ANS: (B) ஞாயிறு
7. நெய்தல் திணைக்குரிய தெய்வம்
(A) இந்திரன்
(B) வருணன்
(C) துர்க்கை
(D) திருமால்
ANS: (B) வருணன்
8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) அவன் கவிஞன் அல்ல
(B) அவன் கவிஞன் அன்று
(C) அவன் கவிஞன் அல்லன்
(D) அவன் கவிஞன் இல்லை
ANS: (C) அவன் கவிஞன் அல்லன்
9. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
என்னால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்பட்டது
(A) செய்வினை வாக்கியம்
(B) செயப்பாட்டு வினை வாக்கியம்
(C) தொடர் வாக்கியம்
(D) கலவை வாக்கியம்
ANS: (B) செயப்பாட்டு வினை வாக்கியம்
10. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும் - இப்பாடலில் அடிக்கோடிட்டவையில் எவ்வகைத் தொடை நயம் இடம்பெற்றுள்ளது?
(A) எதுகை
(B) இயைபு
(C) மோனை
(D) தொடை
ANS: (B) இயைபு
April 18, 2020

பொது தமிழ் வினா விடை 93

பொது தமிழ் வினா விடை 93

1. “பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வெ.இராமலிங்கனார்
(D) சுரதா
ANS: (C) வெ.இராமலிங்கனார்

2. ‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
(A) அப்துல் ரகுமான்
(B) வாணிதாசன்
(C) முடியரசன்
(D) துரை. மாணிக்கம்
ANS: (D) துரை. மாணிக்கம்
3. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ;
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்
(A) உமறுப்புலவர்
(B) அப்துல் ரகுமான்
(C) ந. பிச்சமூர்த்தி
(D) ஞானக் கூத்தன் 
ANS: (B) அப்துல் ரகுமான்

4. தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
(A) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
(B) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
(C) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
(D) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
ANS: (A) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
5. ‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
(A) பரிதிமாற்கலைஞர்
(B) மறைமலையடிகள்
(C) இரா.பி.சேதுப்பிள்ளை
(D) திரு.வி.க.
ANS: (B) மறைமலையடிகள்
6. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில்
ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து”
இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) ஒளவையார்
(C) கவிமணி
(D) பரணர்
ANS: (C) கவிமணி
7. தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
(A) பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
(B) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
(C) கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
(D) நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
ANS: (B) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
8. ‘காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்
(A) திருமூலர்
(B) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
(C) பாரதியார்
(D) பாரதிதாசன் 
ANS: (B) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
9. “நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே
நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்
(A) காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
(B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
(C) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
(D) ருசிய அறிஞர் தால்கதாய்
ANS: (C) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
10. தாயுமேது தந்தையேது
தனையர் கற்றத் தாருமேது
ஆயும்போது யாவும் பொம்ம
லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
(A) மீரா
(B) சாலை, இளந்திரையன்
(C) பாஸ்கரதாஸ்
(D) பாரதிதாசன்
ANS: (C) பாஸ்கரதாஸ்