LATEST

Showing posts with label தமிழ்நாடு மாவட்டங்கள். Show all posts
Showing posts with label தமிழ்நாடு மாவட்டங்கள். Show all posts

Friday, December 20, 2019

December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு - 10.கரூர்

Magme Guru

10. கரூர் வரலாறு 

தலைநகரம் : கரூர்
பரப்பு : 2,904 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,064,493 (2011)
எழுத்தறிவு : 727,044 (75.60 %)
ஆண்கள் : 528,184
பெண்கள் : 536,309
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 367

வரலாறு :

• கரூர் மாவட்டம் பலகாலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால்திருச்சி மாவட்டத்தின் வரலாறு கரூர் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
• நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-2 (கரூர், குளித்தலை); வட்டங்கள்-4 (கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்).

உள்ளாட்சி நிறுவனங்கள் :

ஊராட்சி ஒன்றியம்-8 (கரூர், தாந்தோனி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடலூர்).

எல்லைகள் :
• வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

தொழில் :
புகளூர் சர்க்கரை ஆலை :

• தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் சர்க்கரை ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
• இது காலத்தால் பழமையானது.
• நாளொன்றுக்கு சுமார் 1500 டன் கரும்புச்சாறு பிழியப்படுகிறது.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனம் :
• இக்காகித ஆலை புகளூரில் ரூ.236 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு உற்பத்தி நடக்கிறது.
• ஆண்டுக்கு 50,000 டன் செய்தித்தாள் காகிதமும், 40,000 டன் எழுது அச்சுக் காகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 40 கோடி அன்னிய செலாவணி மிச்சப்படுகிறது.
• இங்கு கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கிறார்கள். 785 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.


December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -09.கன்னியாகுமரி

Magme Guru

9. கன்னியாகுமரி வரலாறு

தலைநகரம் : நாகர்கோவில்
பரப்பு : 1,684.4 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,870,374 (2011)
எழுத்தறிவு : 1,548,738 (91.75 %)
ஆண்கள் : 926,345
பெண்கள் : 944,029
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 1,111

பெயர் வரலாறு:

• சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது.
• குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

உள்ளாட்சி நிறுவனங்கள்:
• நகராட்சிகள்- 4, (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை);
• நகரியம்-1 (கன்னியாகுமரி);
• ஊராட்சி ஒன்றியம் - 9; பேரூராட்சிகள் - 67; ஊராட்சி-88.

சட்டசபை தொகுதிகள்: 7
(கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.

நாடாளுமன்ற தொகுதி:1
(நாகர்கோவில்).

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்:
• தொல்காப்பியர், அதங்கோட்டாசான், திருவள்ளுவர் போன்ற பழங்கால தமிழ் அறிஞர்களும், இக்காலத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நூறு அவதானங்களை செய்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர், டி.கே. எஸ். சகோதரர்கள், தோழர் ஜஂவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரா பா. நடராசன், நாஞ்சில் மனோகரன் போன்றோர் முக்கியமானவர்கள்.

வரலாற்றில் கன்னியாகுமரி:

• வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார்.
• கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
• கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
• மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது.
• இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.
• பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது.
• புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி)
• நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி)
• வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது.

• முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது.
• சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன்.
• அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது.
• இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும்.
• நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது.
• 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது.
• 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த கதை:
• 1949க்குப் பின்னர் திருவாங்கூர்-கொச்சி அரசின் கீழ் தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. ஐக்கிய கேரளத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சேர்ப்பதற்கு மலையாளிகள் முயன்றனர்.
• 1945ம் ஆண்டு முதல் மொழியை வைத்து தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்.
• 1945 ஆம் ஆண்டு திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.
• குழுவில் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் எஸ். நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர்.
• பின்னர் திருத்தம் செய்யப்பெற்று திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
• கதவடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம் என்கிற முறையில் தமிழர் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர்.
• இந்திய விடுதலைக்கு பின்னர் திருவிதாங்கூரில் கேரள காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது.
• 1948 தேர்தலில் 4 வட்டங்களில் வெற்றி பெற்றனர் தமிழர். 

• பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தஇந்த காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றனர்.
• பலர் மீது வழக்குகள் போடப்பட்டன.
• திருவாங்கூர்-கொச்சி ராஜ்ய இணைப்பை எதிர்த்து நேசமணி போராட்டம் நடத்தினார்.
• 1954 ஆகஸ்ட் 11ம் நாள் விடுதலை நாளாக கருதப்பட்டு அறப்போராட்டங்களை நடத்தினர்.
• தொடுவட்டியிலும், மார்த்தாண்டத்திலும் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழர்கள் உயிரிழந்தனர்.
• 1955இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பட்டம் தாணுப்பிள்ளையின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.

தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வந்த பகுதிகள்:
• தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை தேவிக்குளம்,பீர்மேடு, சித்தூர் வட்டங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று வேண்டுகோளை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் இந்திய அரசிடம் அளித்தனர்.
• ஆனால் இந்திய அரசோ தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.
• இதற்கான சட்ட வரைவு 1956 ஆம் ஆண்டு சென்னை சட்டசபையிலும், இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
• தமிழரின் பாரம்பரிய பகுதிகள் இழந்ததன் வாயிலாக பெரியார், சிறுவாணி, மற்றும் உள்ள ஆறுகள் தமிழக விவசாயத்திற்கு கிடைக்காமல் வீணாக அரபிக்கடலில் கலப்பதை இன்றும் காணலாம்.

கன்னியாகுமரி: மாவட்டத்தின் எல்லைகள்:
• வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம்.
• மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

• இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது.
• இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம்.
• சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது.
• இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். 

• குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது.
• கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது.
• 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

• இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
• அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும்.
• இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
• அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை.
• கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.

நாகர்கோவில்:
• கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.
• இங்குள்ள நாகராஜா கோவில் பார்க்கத்தக்கது. இதன் வாயிலின் முகப்பு சீன முறையில் அமைந்த விகாரங்கள் பெளத்த பாணியைக் காண்பிக்கிறது.
• இக்கோயிலிலுள்ள தூண்களில் சமண தீர்த்தங்கர்களான மகாவீரர், பார்சுவநாதரின் உருவங்களைக் காணலாம். 

• நாகராஜாவே முக்கிய கடவுள். இக்கோவில் முற்காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்கும் என்பது அறிஞர்கள் முடிவு.
• நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
• இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
• பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது.
• மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.

இயற்கை வளங்கள்
கனிம வளம்:

• கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்குமே கிடைக்காத 'இல்மனைட்' மணலில் கிடைக்கிறது.
• இதிலிருந்து டிட்டானியம், ரூட்டைல், மோனசைட், சர்க்கான் போன்ற பிற கனிமங்கள் பெறப்படுகின்றன.
• இந்தக் கனிவளங்கள் மணலில் இருப்பதால் மணல் பொன்வண்ணமாக காட்சியளிக்கிறது. 

• இது தவிர பலவித வண்ண மணல்கள் கன்னியாகுமரியில் கிடைக்கின்றன.
• இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இல்மனைட்டில் 8% கன்னியாகுமரியிலிருந்து கிடைக்கிறது.
• இல்மனைட்டிலிருந்து டிட்டானியம் பிரித்தெடுக்கப்பட்டு டிட்டானியம் ஆக்ஸைடு வெடிமருந்து, வெள்ளை பெயின்ட் செய்ய பயன்படுகிறது. இதுதவிர கடைசல் வேலைக்கு டிட்டானியம் கலந்த எஃகு பயன்படுத்தப்படுகிறது. 

• வர்ணங்கள் ஒளிகுன்றாமல் இருக்கவும், ரப்பர்களில் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருள்களில் பளபளப்பு ஏற்படுத்தவும், தாள் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது.
• தமிழகத்தில்- இங்கு மட்டுமே கிடைக்கும் மோனாக்சைட்டில் 10 விழுக்காடு தோரியம் காணப்படுகிறது. இது அணுகுண்டு செய்ய பயன்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.

• அதிக வெப்பத்தைத் தாங்கும் சர்க்கான், பீங்கான் எஃகு தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது.
• இந்தியாவில் இத்தொழில்கள் இன்னும் பெருமளவில் வளராத காரணத்தால், இந்த வளத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
• உப்புத்தாள் தயாரிக்க உதவும் கார்னட் மணல் மண்டைக்காடு முதல் கடியபட்டினம் வரை காணப்படுகிறது. 

• கல்குரியஸ் என்னும் கடினமான பாறை வகைகள் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைக்கின்றன.
• இது தவிர கிராபைட், சுண்ணாம்புக் கல் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
• இரவிப்புதூர், மருங்கூர் முதலிய ஊர்பகுதிகளில் இரும்பு கலந்த கற்களும், ஆரல்வாய் மொழியிலிருந்து வெள்ளமடம் வரை சுண்ணாம்புப் படிவங்களும் படிவுகளாக உள்ளன.

காட்டுவளம்:
• நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு மலையினை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது.
• இதனால் இங்கு காடுகள் செழித்துக் காணப்படுகின்றன.
• காடுகளின் மொத்த பரப்பளவு 449 ச.கி.மீ. ஆகும்.
• இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி வரை செல்கிறது.
• இங்கு யானை, மான், மிளாவு என்ற மான் வகை, சிறுத்தை, புலி, கரடி, பன்றி, உடும்பு, குரங்கு, செந்நாய், நரி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. 

• இங்கு தேக்கு, மட்டிப்பால், முன்னிலவு போன்ற மரங்கள் வளர்கின்றன.
• 800 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், 600 ஏக்கர் பரப்பில் தீக்குச்சி மரங்களும், 15 ஏக்கர் பரப்பில் அரக்கு உற்பத்திற்காக பூவன்மரத் தோட்டங்களும் வளர்க்கப் படுகின்றன.
• பல மருத்துவ மூலிகைகள் மருத்துவ மலையில் காணப் படுகின்றன.

வேளாண்மை:
• கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது.
• மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், உளுந்து, பயறு, பருப்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. 

• நாஞ்சில் நாட்டில், சம்பா, வால் சிறுமுண்டதும் என்ற இருவகை நெல் வகைகள் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.
• நெல்லுக்கு அடுத்து தென்னை 40,000 ஏக்கரில் பயிராகிறது.
• கன்னியாகுமரி முதல் தேங்காய்ப் பட்டினம் வரை தென்னை வளர்க்கப்படுகிறது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது.
• பனைமரம்- கல்குளம், விளவங்கோடு, வட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. 

• நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், பனை வெல்லம் போன்றவை பெறப்படுகின்றன.
• தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழிப் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
• ஊடுபயிராக நீண்ட இழைப் பருத்தி, மலைச்சாரல்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பயிராகிறது.

தொழில் வணிகம்:
• குமரி மாவட்டம் இயற்கை வளம் செறிந்தது. இந்த வளம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
• வேளாண்மை பொருள் உற்பத்தி தொழில்களே இங்கு பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. 

• தேசிய தொழில் வளர்ச்சிக் கழகம் இம்மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளவை என கணித்திருக்கும் தொழில்கள்: அலுமினியப் பொருட்கள், மீன் பிடிக்கும் எந்திரப் படகுகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல், ரப்பர் ஷஂட், போம் ரப்பர், லெடக்ஸ் சிமெண்ட், நார்க் கயிறு, ரொட்டி, பிஸ்கட் செய்தல், மீன் பதப்படுத்துதல். தொழில் முனைவோர் இவற்றில் இறங்கலாம்.


December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -08.காஞ்சிபுரம்

Magme Guru

8. காஞ்சிபுரம் வரலாறு

தலைநகரம் : காஞ்சிபுரம்
பரப்பு : 4,483 ச.கீ.மீ
மக்கள் தொகை : 3,998,252 (2011)
எழுத்தறிவு : 3,013,382 (84.49 %)
ஆண்கள் : 2,012,958
பெண்கள் : 1,985,294
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 892


வரலாறு :
• காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று.
• காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. 

• சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர்.
• பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர்.
• இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன.
• பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். 

• பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று.
• சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.
• சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். 

• பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது.
• விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
• 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது.
• இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். 

• பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
• 1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
• 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. 

• பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
• ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார்.
• ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

எல்லைகள் :
• காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன.
• தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.


December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -07. ஈரோடு

Magme Guru

7. ஈரோடு வரலாறு

தலைநகரம் : ஈரோடு
பரப்பு : 5,760 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,251,744 (2011)
எழுத்தறிவு : 1,492,662 (72.58%)
ஆண்கள் : 1,129,868
பெண்கள் : 1,121,876
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 391

பெயர்க் காரணம்:
• பிச்சைக்காரன் ஓடை, பெருபள்ள ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.
• இங்குள்ள கடவுளுக்கும் 'ஈரோடையப்பர்' என்ற பெயரே காணப்படுகிறது.

எல்லைகள்:

• தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம்-கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடகமும், மேற்கில் கோவை மாவட்டமும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாற்றுச் சிறப்பு:
• கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ந் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.
• கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும்.
• இப்பகுதிகளை கொங்கர் என்னும் ஆயர்கள் ஆண்டு வந்தனர்.
• கொங்கரை வெற்றி கொண்டு சேர நாட்டுடன் பல்யானை செல்கெழு குட்டுவன் சேர்த்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
• உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் கணிப்பு.
• இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னி மலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
• இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
• அவர்களை சோழர்கள் 9ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர்.
• சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது.
• இக்காலத்தில் கொங்குவேளிர் 'பெருங்கதை'யையும்; பவணந்தி 'நன்னுலையும்; அடியார்க்கு நல்லார் 'சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.
• சோழர்களுக்கு பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்புசுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.

சட்டசபை தொகுதிகள்:11
வெள்ளக்கோவில், காங்கேயம், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், தாராபுரம்.

பாராளுமன்ற தொகுதி: - 1 கோபிசெட்டிப் பாளையம்

ஆறுகள்:
காவிரி, நொய்யல், பவானி, உப்பாறு.

அணைக்கட்டுகள்:
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பள்ளம், உப்பாறு, காளிங்கரான் அணை.

கல்வி:
பள்ளிகள்:

தொடக்க நிலை-1,455; நடுநிலை-185; உயர்நிலை-77; மேநிலை-52; கல்லூரிகள் - 8; தொழிற்கல்வி நிறுவனங்கள்-9, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-1.

இயற்கை வளங்கள்
மலைவளம்:
• ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பமலை, தல்ல மலை, தவளகிரி மலை, பவள மலை, பன்னாரி மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாட்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்தூர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலூர் மலை, அரசன்னா மலை, திண்டல் மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.
• இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது.
• இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன.
• இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

காட்டுவளம்:
• இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர்.
• அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும்.
• தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடுமாவட்டத்திலிருந்து கிடைக்கிறது.
• சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது.
• மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன.
• அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன.
• இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
• இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.

விலங்குகள்:
• பவானி சாகர், தெங்க மராடா, மோயாறு, பன்னாரி ஹாசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன.
• இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தல்லமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன.
• இப்பகுதியில் காட்டு எருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.

கனிவளம்:
• இரும்பு - கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிகொட்டாம் பாளையம், பங்களாபுத்தூர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது.
• தங்கம் - கோபிச்செட்டிப்பாளையம், எக்காத்தூர், ஊதியூர், எழுமாத்தூர்.
• மைக்கா - வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி, ஏரப்ப நாயக்கன் பாளையம்.
• கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
• ஆஸ்பெஸ்டாஸ் - பெருந்துறை, பர்கூர்.
• ஜிப்சம் - தாராபுரம்.
• படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும்,பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

விவசாயம்:
• மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்;
• முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள்.
• விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது.

                                                               வணிக வளர்ச்சி
தொழில்கள்:
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.

கைத்தறி:
• நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன.
• இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர்.
• இங்கு டையிங் பேக்டரிகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது.
• கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி,சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈரோடு:
• இங்கு வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது.
• இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது.
• இதன் அருகில் முட்டையை பெளடராக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
• பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது.
• ஈரோடு துணி மார்க்கெட்இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. மாநிலத்தில் குழந்தைகள் இறப்பு வீதம் குறைவு.
• சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

சர்க்கரை:
சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மரம் அறுப்பு:
சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடிப்பு:
• ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
• தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன.
• பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது.
• இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது.
• ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது.
• இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.

எண்ணெய்:
எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.

சுற்றுலாத்தலங்கள்:
பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை.

வரலாற்று சுற்றுலா தலங்கள்:
அரச்சலூர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல்புதைபொருள் ஆய்வு இடம்.

இருப்புப் பாதை:
• முக்கிய புகைவண்டி நிலையங்கள்: ஈரோடு, ஊத்துக்குளி, பெருந்துறை, ஊஞ்சலூர், கொடுமுடி, பாசூர், ஈங்கூர்.
• இம்மாவட்டத்தில் உள்ள இரயில் பாதை அகன்ற இரயில் பாதையாகும்.
• ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.

நீர்வழி:
காவிரியாற்றின் போக்கை ஒட்டி படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது.

தாளவாடி மலை:
• இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும்.
• இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
• யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.

மாவட்ட பெரியோர்:
• தமிழக மக்களால் 'பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி பெரியார் ஈரோட்டில் பிறந்து, வளர்ந்தவர்.
• நரேந்திர தேவர், காங்கிரஸ் தியாகி.
• கொடிகாத்த குமரன் பிறந்த இடம் சென்னி மலைதான்.


December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -06. திண்டுக்கல்

Magme Guru

திண்டுக்கல் வரலாறு

தலைநகரம் : திண்டுக்கல்
பரப்பு : 6,036 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,159,775 (2011)
எழுத்தறிவு : 1,481,834 (76.26%)
ஆண்கள் : 1,080,938
பெண்கள் : 1,078,837
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 358

வரலாறு :

• திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது.
• இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும் திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.
• குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது.
• நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது.
• இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம்.
• பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான்.
• மலை மீது பாண்டியர் காலத்துக் கட்டிடக் கலைச் சிறப்புக் கொண்ட ஒரு கோயில் இருக்கிறது.
• 1605 இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலைக்குத் தென்கிழக்கில் மேற்கண்ட கோட்டையை கட்டினார்.
• திப்புசுல்தான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, திண்டுக்கல் கோட்டை விரிவாக்கப்பட்டு, பழைய வாயில்கள் மாற்றப் பட்டு புதிய வாயில்கள் அமைக்கப்பட்டன.
• 1798இல் ஆங்கிலேயர், கோட்டையில் மேலும் சில கட்டிடங்களைக் கட்டினர்.
• 1947 வரையில் இக்கோட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்தது.
• சுமார் 157 ஆண்டுகள் அவர்கள் வசமிருந்தது.
• மதுரை மாவட்டத்தில், முதன் முதலாக ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த பகுதி திண்டுக்கல்தான்.

எல்லைகள் :
• திண்டுக்கல் மாவட்டம் வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்களையும் தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்களையும், மேற்கில் கோயமுத்தூர் மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் திண்டுக்கல் ஆகும்.

வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-4 (திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்);

ஊராட்சி ஒன்றியங்கள்-14
(திண்டுக்கல், சாணார் பட்டி, நத்தம், ஆத்தூர்(இருப்பு), செம்பட்டி, ரெட்டியார்சத்திரம்,நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, பழனி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி, கொடைக்கானல்);

பேரூராட்சி-24 
(அம்மைநாயக்கனுர், அய்யம்பாளையம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, அகரம், பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு, சித்தயன்கோட்டை, ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சேவுகம்பட்டி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பாலசமுத்திரம் பாளையம், நெய்க்காரப்பட்டி, கீரனுர், வடமதுரை, அய்யலூர், எரியோடு, பண்ணைக்காடு);

கிராமங்கள்- 358.

சட்டசபைத் தொகுதிகள் :8
பழனி, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதி மட்டும்).

பாரளுமன்றத் தொகுதிகள் :3
திண்டுக்கல், பழனி, பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப்பகுதி மட்டும்).

கல்வி :

பள்ளிகள்: துவக்கநிலை-1,133; நடுநிலை-216; உயர்நிலை-55; மேனிலை-36; கல்லூரிகள்-9; (அரசு மற்றும் தனியார்) பொறியியல் கல்லூரிகள்-2; தொழில்பயிற்சி நிறுவனங்கள்-3; தொழிற்நுட்பக் கல்லூரிகள்-4; பல்கலைக் கழகம்-2; (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம்).

திண்டுக்கல் நகரம் :
• திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராய் இது விளங்குகிறது.
• இருபெரும் தேசிய
நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன.
கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இவ்வூரருகே சந்திக்கின்றன.
• இங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் செல்லுகின்றன.
• திருச்சி-மதுரை, திண்டுக்கல்-பாலக்காடு, திண்டுக்கல்-கோயம்புத்தூர் இரயில் பாதைகள் சந்திக்கும் இடமாக திண்டுக்கல் விளங்குகிறது.


இவ்வூரிலுள்ள மலை ஒரே கல்லால் ஆனது. திண்டு போல் அரைவட்ட வடிவமானது. இந்த ஊர் இங்குள்ள மலையால் இப்பெயர் பெற்றது. தேனி, பொள்ளாச்சி, மணப்பாறை போன்ற வணிக நகரங்களுக்கு மத்தியில் இருப்பதால், திண்டுக்கல் பெரிய வணிகச்சந்தையாக விளங்குகிறது. வேடச்சந்தூர்ப் புகையிலை, சின்னாளப்பட்டி நார்பட்டுத் துணிகள், கோடை மலையின் சில விளைபொருட்கள் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து கடலைப் புண்ணாக்கு ஏற்றுமதியாகிறது.

ஆந்திராவிலிருந்து வரும் சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்துக்கும் திண்டுக்கல்லே தலைச் சிறந்த விற்பனையிடம். சிறுமலை வாழைப்பழமும் மிகுதி. தெற்கேயுள்ள பல ஊர்களுக்கும் இங்கிருந்துதான் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

1866 இல் திண்டுக்கல் நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் பெரும்தொகையினராக இங்கு வாழ்கின்றனர். இரண்டுக் கல்லூரிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், தொழிற்பள்ளி இவற்றுடன் காந்திக்கிராமத்தில் உள்ள கல்வி நிலையங்களும் கல்விப் பணியாற்றி வருகின்றன.

திண்டுக்கல்லில் சிவன் கோயில்களும், பெருமாள் கோவில்களும் உள்ளன. இராமலிங்க சுவாமி கோயிலும் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருவிழாவில் தீச்சட்டி ஏந்துவதும், சுற்றுவதும் சிறப்பாக நடைபெறும். 1729 இல் கட்டப்பட்ட 'சர்ச் ஆப் அவர் லேடி ஆப் டோலர்ஸ்' மற்றும் 1872 இல் கட்டப்பட்ட 'புனித ஜோசப் சர்ச்' ஆகியன குறிப்பிடத்தக்க கிறிஸ்துவ தேவாலயங்கள். கரூர் சாலையில் பெஸ்கி பாதிரியார் பெயரால் இயேசு சபையாரின் கல்வி நிலையம் உள்ளது.

தொழில் வளம் நிறைந்த திண்டுக்கல்லில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுருட்டுச் சுற்றுதல் சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. கேரளத்திற்குப் பெரிய அளவில் வாசனைப் புகையிலை ஏற்றுமதியாகிறது. இங்குள்ள புகையிலைத் தொழிற் சாலைகளில் குறிப்பிடத்தக்கது ஸ்பென்சர் கம்பெனி.

நூல் ஆலைகள், பருத்திக் கொட்டையை நீக்கிப் பஞ்சு எடுக்கும் ஆலைகள், கடலைஎண்ணெய் ஆலைகள், தோல் பதனிடுதல், தோல் செருப்புகள் தயாரித்தல் முதலியன முக்கியப் பெரும் தொழில்களாக நடைபெறுகின்றன. ஜரிகை வியாபாரத்திற்கும் திண்டுக்கல் பிரசித்திப் பெற்றது.

பழங்குடிகள் :
திண்டுக்கல் மாவட்டத்தில் பலநூ ற்றாண்டுகளாக பழங்குடியினர் பலரும் வாழ்ந் துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தகுந்த பிரிவினராக பளியர், முதுவர், புலையர் முதலியோர் காணப்படுகின்றனர்.

மீன்வளம் :
திண்டுக்கல் மாவட்டத்தில இருக்கும் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களிலும் மீன்வளம் சிறந்து காணப்படுகிறது. அநேக ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், குளிர் நீரோடைகள் இம்மாவட்டடத்தில் உள்ளன. இவற்றில் மிக வேகமாக வளரக் கூடிய மீன் இனங்களான காட்லா, ரோடு, மிர்கால் மற்றும் சாதா கொண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மீன்வளப் பணிகளுக்காக தேர்ந்தெடுத் திருக்கும் நீர்த்தேக்கங்கள் வரதமாநதி அணை, பெரிய கோம்பை அணை, பாலாறு,
புரந்தலாறு அணை முதலியனவாகும்.

பாலாறு-புரந்தலாறு அணையில் ரூ.13.2 இலட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மீன் பண்ணையில் 2 சிறிய மீன் குளங்களும், 8 மீன் குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 12 நர்சரி குளங்களும் கட்டப்பட்டுள்ளன. பழனியில் மீனவர்கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் துறை ஏரிகளில் மீன்பிடிப் பதற்கு பங்கு முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேளாண்மை :
• வைகை ஆறு, முல்லையாறு ஆகிய பெரிய ஆறுகளும், மணலாறு, இரவங்கல் ஆறு, கலிக்க வையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக் குடியாறு பெருந்தலாறு, குதிரையாறு, கூலிளங்காறு, முத்துக் கோம்மையாறு, வராகநதி, பாம்பாறு ஆகிய ஆறுகளும் திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மையில் வளம் செழிக்க உதவுகின்றன.
• வைகை அணையும், பெரியாறு அணையும் இம்மாவட்ட வேளாண்மை பாசனத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 2,74,707 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகும்.
• நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, சிறுதிணைகள், நிலக்கடலை, பூக்கள், ஆமணக்கு, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, புகையிலை, கரும்பு முதலியன விளைவிக்கப்படுகின்றன.
• கரும்பு உற்பத்தி பழனி வட்டத்தில் அதிகமாய் நடைபெறுகிறது.
• கொடைக்கானல் மலையில் பல வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
• கொடைக்கானல்,நிலக்கோட்டை, திண்டுக்கல் வட்டங்களில் பெருமளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.
• வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவையும் இம்மாவட்டத்தில் அதிகமாய் விளை கின்றன.
• வெற்றிலை பயிரிடுவதில் வத்தலக்குண்டு இம்மாவட்டத்தில் முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது.
• தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மலர்களில் பெருமளவு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தே கிடைக்கின்றன.
• மலர் உற்பத்தியில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 1757 ஹெக்டேரில் மலர்களை இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.
• உற்பத்தியாகும் பூ வகைகளில் மல்லிகைப்பூ முதலிடம் வகிக்கிறது.
• கொடைரோடு, அம்பாத்துறை ஆகியவை மலர் உற்பத்தியில் குறிபிடத்தக்க இடங்கள். நாள்தோறும் ஆயிரக்கணகான கூடைகளில் இந்தியாவெங்கும் பூக்கள் இரயில், விமானம் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.
• பெருமளவு மலர்கள் உற்பத்தியால் இம்மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என வழங்கப்படுகிறது.
• சில இடங்களில் கருங்கண்ணிப் பஞ்சும், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளில் கம்போடியாப் பஞ்சும் விளைகின்றன.
• பழனி மலைத்தொடரில் பழனி, பட்டிவீரன்பட்டி, சிறுமலை போன்ற பகுதிகளில் காப்பி பெருமளவில் விளைகிறது. இங்கு தேயிலையும் ஓரளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
• பட்டி வீரன்பட்டியிலிருந்து திராட்சைப் பழங்களும் பதியன்களும் ஏராளமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப் படுகின்றன.
• மேலும் பன்னீர் திராட்சையும் பயிரிடப்பட்டு, பானைகளில்அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
• கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிறு அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது.
• இம்மாவட்டத்தில் பெருமளவில் வாழைத் தோட்டங்கள் உள்ளன.
• இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வாழைப்பழங்கள் அனுப்பப்படுகின்றன.
• இம்மாவட்டத்தில் நெல் சாகுபடியாகும் பரப்பு 33,200 ஹெக்டேர் ஆகும்.
• அதில் அமோக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான ஐ.ஆர்.20, கோ.43, வைகை ஐஐடி 4786, பொன்னி, ஆடுதுறை 36 முதலியவை 20,810 ஹெக்டேரில் சாகுபடியாகின்றன.
• சோளம் இயல்பாக நன்செயில் 12,912 ஹெக்டேரிலும், மானாவாரியில் 63,062 ஹெக்டேரிலும் சாகுபடியாகிறது. கரும்பு சாகுபடி செய்யும் இயல்பான பரப்பு நன்செயில் 8922 ஹெக்டேர், மானாவாரியில் 7740 ஹெக்டேர்.
• சுமார் 37,700 ஹெக்டேரில் பயிறு வகை உற்பத்தியாகிறது.
• எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 47,35/ ஹெக்டேரிலும், சூரியகாந்தி 8000 ஹெக்டேரிலும், எள் 2500 ஹெக்டேரிலும், ஆமணக்கு 500 ஹெக் டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன.
• வேளாண்மைக் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களால் பலவித வேளாண் கருவிகள் செய்யப்படுகின்றன.
• குறிப்பாக பலவிதப் பெயர்களில் கலப்பைகள் இம்மாவட்டத்தில செய்யப்படுகின்றன.
• தோட்டக்கலைத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பழமரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழில் வளர்ச்சி:
தொழில் :
• திண்டுக்கல் மாவட்டத்தில் 3592 சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன.
• 52 தொழிற்சாலைகள் உள்ளன.
• மதுரை-திண்டுக்கல்-கரூர் அகல இரயில்பாதை திட்டம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.

பட்டுத்தொழில் :
• பட்டுப்பூச்சி வளர்ப்பு இம்மாவட்டத்தில் சுமார் 2100 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெறுகிறது. திண்டுக்கல், பழனியில் அரசுபட்டுக்கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன.
• இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், வத்தலகுண்டு, பழனி ஆகிய இடங்களில் பட்டுத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன.

தேனீ வளர்ப்பு :
கொடைக்கானல், மற்றும் காமனுர் என்னும் இடங்களில் செயல்படும் இரு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்.

சுற்றுலாதலங்கள் :

கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக்கேணி ஆகியன இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.


Thursday, December 19, 2019

December 19, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -05.கடலூர்

5. கடலூர் வரலாறு

தலைநகரம் : கடலூர்
பரப்பு : 3,678 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,605,914 (2011)
எழுத்தறிவு : 1,815,281 (78.04 %)
ஆண்கள் : 1,311,697
பெண்கள் : 1,294,217
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 704

பெயர்காரணம் :
கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.

வரலாறு :
(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).

எல்லைகள் :
தெற்கே அரியலூர் மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

சட்டசபை தொகுதிகள் :
9. (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்குடி(தனி), சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர்(தனி).)

பாராளுமன்ற தொகுதிகள் : 2 
கடலூர், சிதம்பரம்

நீர்வளம் :
இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.

ஏரிகள் :
• வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது.
• வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது.
• திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது.

கனிவளம் :
• இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை.
• களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.
• பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது.
• மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன.
• நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.

வேளாண்மை :
• சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர்.
• கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன.
• மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
• நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன.
• புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன.
• கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.

ஆலைகள் :
• சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன.
• கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.

மின்சார தொழில் :
• வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடல் சார்ந்த தொழில்கள் :
• கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன.
• இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன.
• பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன.

சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது

தொழிற்சாலைகள்:
1. மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்
2. தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்
3. பைபர் பைப் லிட்
4. இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்
5. ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்
6. ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்
7. கேலாக் பிரைவேட் லிட்
8. கிளின் பீல்ட் இந்தியா லிட்
9. பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்
10. மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்
11. மலாங் என்டர் பிரைசஸ் லிட்
12. கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்
13. யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.

துறைமுகம் :
• கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.
• இத்துறை முகம் பழமையானது.
• அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது.
• இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி.
• கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம்.
• முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன.
• முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.

புகழ்பெற்ற பெருமக்கள் :
• அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன்.



Tuesday, December 17, 2019

December 17, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -04.கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வரலாறு
தலைநகரம் :   கோயம்புத்தூர்
பரப்பு :  4,732 ச.கி.மீ
மக்கள் தொகை :  3,458,045 (2011)
எழுத்தறிவு :  2,635,907 (83.98%)
ஆண்கள் :  ,729,297
பெண்கள் :  1,728,748
மக்கள் நெருக்கம் :  1 ச.கீ.மீ - க்கு 731
வரலாற்றுச் சிறப்பு:
  • சங்க காலத்திலேயே தமிழகத்தை சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு, கொங்குநாடு என்று பிரித்திருந்தார்கள்.
  • கோவை மாவட்டம் கொங்கு பகுதியில் இருந்தது. கொங்கு நாடுபற்றி சங்க இலக்கியங்களில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது.
  • சேர நாட்டிற்கு அடுத்த நாடாக கொங்கு பகுதி இருந்தததால் சேரர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். களப்பிரர்கள், இராஷ்டிரர்கள், கங்க மன்னர்கள், சோழர்கள், விஜயநகரமன்னர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர் வரை இப்பகுதி அந்தந்தக் காலங்களில் அவர்களால் ஆளப்பட்டது.
கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்
சோழமாதேவி, தாளி, குடிமங்கலம், ஜோதம்பட்டி, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமாரலிங்கம், திருமுருக்கன்பூண்டி, அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் - இருகூர், சாவடிப்பாளையம், வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.
பெயர்க்காரணம்:
  • கோயம்புத்தூர் என்பது 'கோசர்' என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க்கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
எல்லைகள்:
  • கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரளமாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.
    கோவை மாவட்டத்திலுள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர்.
பொது விபரங்கள்
  • சாலைகளின் நீளம் - 8 கி.மீ.
  • பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042,
  • வங்கிகள் 328,
  • காவல்நிலையங்கள் - 60,
  • காவலர்கள் 5910,
  • தந்தி அலுவலகங்கள் 260,
  • தந்தி அஞ்சலகங்கள் 172,
  • மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர்.
வருவாய் நிர்வாகப் பிரிவு
  • கோட்டங்கள் - 2 (கோயம்புத்தூர், பொள்ளாச்சி)
    வட்டங்கள் - 8 (கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர்)
  • வருவாய் கிராமங்கள் - 441 உள்ளாட்சி நிறுவனங்கள்
    மாநகராட்சி - 1 கோவை
    நகராட்சிகள் - 3 மதுக்கரை, வால்பாறை
    ஊராட்சி ஒன்றியம் - 12
    பேரூராட்சி - 37
    பஞ்சாயத்துக்கள் - 227
சட்டசபை தொகுதிகள் - 10
  • மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை.
கல்வி
பள்ளிகள்
  • தொடக்கப் பள்ளிகள் - 1,441,
  • நடுநிலைப் பள்ளிகள் - 234,
  • உயர்நிலைப் பள்ளிகள் - 133,
  • மேநிலைப் பள்ளிகள் - 134.
கல்லுரிகள்
  • பொறியியல் கல்லுரிகள் - 3 ,
  • மருத்துவக் கல்லுரிகள் - 2 ,
  • பார்மசிக் கல்லுரி - 1 ,
  • ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகள் - 4,
  • கலை, அறிவியல் கல்லுரிகள் - 31,
  • சட்டக்கல்லுரி - 1,
  • வேளாண்மை, தோட்டக்கலை கல்லுரிகள் - 3,
  • தொழில் நுட்பக்கலை கல்லுரிகள்  7
  • பல்கலைக்கழகங்கள் - 3.
வழிபாட்டிடங்கள்:
பேரூர் - பட்டீஸ்வரர் கோவில், காரமடை-அரங்கநார் கோவில், குருந்தமலை முருகன் கோவில், அவிநாசியிலுள்ள அவிநாசியப்பர், திருமுருக்கன் பூண்டியில் உள்ள முருகநாதர் கோவில், மேல் சிதம்பரம் நடராஜர் கோவில், கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியவை வழிப்பாட்டிடங்கள் இம்மாவட்டத்தில் முக்கியமான தலங்களாகும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் காடுகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

1. போலம்பட்டிப்பள்ளத்தாக்கு. கோயம்புத்தூர் - சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. இங்கு வாகை, கருவாகை, வேல்வாகை, பில்லமருது, தாடச்சி, கெங்கை, ஈட்டி, வெண்தேக்கு, வெள்ளநாகை, சாதாதேக்கு போன்ற உயர்ந்த மரங்களும் உள்ளன. 5000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் வேடிப்பில்லா, பால் வடிஞ்சான், காட்டுப்பன்னை, மலைக்கொன்னை நாங்கு மரங்களும் வளர்ந்துள்ளன.

2. தாடகம் பள்ளத்தாக்கு - ஊஞ்சல், காட்டு எலுமிச்சை, தெரணை, புல்லாவரம், பொரசு, மலைக்கிளுவை, தணக்கு போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.

3.டாப்ஸ்லிப் பகுதி - இங்கு 70 அங்குலம் மழை பெறுவதால், 150 அடி உயர மரங்கள் வளர்கின்றன.

4. ஆனைமலை காடுகள் - துணக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது. இங்கு அதிக மழை பெறுவதால் காடுகள் செறிந்து காணப்படுகின்றன.

5. பொள்ளச்சி பகுதி - இங்கு தேக்கு, கருமருது, கடுக்காய், ஓதியமரம், இலவமரம், பெருமூங்கில், கல்மூங்கில் மிகுதியாக உள்ளன.
ஆறுகள்:
பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
அணைகள்
நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லுர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.
அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
நீர்மின் திட்டம்:
பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்மின் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
வேளாண் உற்பத்தி:
கோவை மாவட்டத்தில் 65 சதவீதம் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன.
நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய உணவுப்பயிர்களும், துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சை கடலை முதலிய தானியங்களும், பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, தேங்காய், வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவையும் பெருமளவு விளைவிக்கப்படுகின்றன. பல்லடம் வட்டத்தில் பழவகைகள் அதிகம்.
கோவை மாவட்டத்தில் தென்னை மிகுதி. திருப்பூர், அவிநாசி எலுமிச்சைக்கும், பொள்ளாச்சி வெற்றிலைக்கும் பேர் பெற்றவை.
ஆனை மலையில் ஏலக்காய், சின்கோ, ரப்பர் மரங்கள் விளைகின்றன.
கோவையின் தொழில் வளர்ச்சி:
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்றுள்ளது.
இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின.
1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை.
அடுத்த 20 ஆண்டுகளில் பல மில்கள் வளர்ந்தன.
1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கியதும் பல ஆலைகள் புதிதாகத் தோன்றின.
கோவையில் மட்டும் ஏறக்குறைய அறுபது ஆலைகள் உள்ளன.
இது தவிர சிங்காநல்லுர், பீளமேடு, கணபதி, உப்பிலிபாளையம் முதலிய இடங்களிலும் பல ஆலைகள் உள்ளன.
பருத்தி பிரிக்கும் தொழிற்சாலை:
சூலுர், சிங்காநல்லுர், பீளமேடு, இடங்களில் மட்டும் 31 பருத்தி பிரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
பிளேடுகள்:
உள்நாட்டிலேயே பிளேடுகள் தயாரித்தது கோவைதான். இன்று ஆண்டுக்கு 2400 இலட்சம் பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கோவையை பார்த்தே மற்ற மாநிலங்களில் பிற்காலத்தில் லேசர் பிளேடுகள் தயாரிக்கப்பட்டன.
கடைசல் இயந்திர தொழிற்சாலை:
இயந்திரம், துளையிடும் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திர குடைக்கல் போன்ற இயந்திரத் தொழிற் கருவிகள் தயாரிக்கும் நுற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இம்மாவட்டம் முழுவதும் உள்ளன. பெரும் தொழிற்சாலைகளுக்கு சிறு தொழிற்சாலைகளுக்கும் இவை முக்கியமானதால் இங்கு பெருகி வளர்ந்துள்ளன.
அஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை:
தீப்பற்றாத அஸ்பெஸ்டாஸ் கூரைகள் செய்யும் தொழிற்சாலை கோவைக்கருகில் 5 மைல் தொலைவில் 1953 முதல் செயல்பட்டு வருகிறது.
அஸ்பெஸ்டாஸ் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
3 கோடி ரூபாய்க்கான இத்தொழிலில் 2500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
நீரிறைக்கும் பம்புகள்:
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்புகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சென்ட்ரி பியூகல் பம்புகளையும் அதைச்சார்ந்த துணை உறுப்புகளையும் தயாரிக்கும் நுற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
ஆண்டுக்கு சராசரி 7000 பம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பால் உற்பத்தி:
இரண்டாம் பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய பால் பண்ணைக்கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பால்பண்ணைத் திட்டத்தின் மூலம் 500 சங்கங்கள் பலனடைகின்றன. நாள் ஒன்றுக்கு 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 1,02,000 விவசாயிகள் பயனடைகின்றனர்.
இதில் ஈடுபட்டுள்ள கால் நடைகளின் எண்ணிக்கை 1,32,000.
ஏ.சி.சி. சிமெண்ட்:
இத்தொழிற்சாலை கோவையிலிருந்து எட்டாவது மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு 2000 பேர் பணியாற்றுகின்றனர். மாதம் சராசரி 25,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
சோப்பு உற்பத்தி:
இம்மாவட்டத்தில் உள்ள சிறுதொழில்களில் சோப்பு உற்பத்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சோப்பு, பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.
இதுதவிர இத்தொழிலுக்குத் தேவையான சோடியம் சிலிகேட் என்னும் கச்சாப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.
இது ஆண்டுக்கு 500 டன் தயாரிக்கிறது.

சிக்கோனா தொழிற்சாலை:
தமிழக அரசின் முயற்சியால் 1955ல் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இங்கு குனைன் சல்பேட் மற்றும் குனைன் ஹைட்ரோ குளோரைட் போன்ற கொய்னாப் பொருட்கள், குனிடின் சல்பேட், மருந்து போன்றவையும், இதுதவிர நறுமணத் தைலங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழக அரசின் தொழில் முதலீடுகள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இதுவரை 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது.
அவற்றில் பத்துத் தொழிற்பிரிவுகள் பொதுத் துறையின் கீழும், மற்ற 36 தொழிற்பிரிவுகள் கூட்டுத்துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன. இதில் அரசு தொழிற்கழகத்தின் முதலீடு சுமார் 600 கோடி ஆகும்.
இதனால் 20,000 பேர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
1979-ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையம் தொடங்கப்பட்ட பின்னர் 10 ஆயிரத்திற்கு அதிகமான சிறுதொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
1960ஆம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் உருவாக்கப்பட்ட பின்னர் பின்வரும் கிராமத்தொழில்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன.
சோப்பு, தோல், செக்கு, எண்ணெய், சுண்ணாம்புத் தொழில், தேனீ வளர்ப்பு, காலணி தயாரித்தல், மட்பாண்டம் தச்சு, கொல்லுத்தொழில், பிரம்புதொழில் முதலியவை வளர்ந்து வருகின்றன.
தொழிற்பேட்டைகள்:
  • குறிஞ்சி, திருப்பூர், சிறுமுகை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுதொழிற்கள் வளர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    சுயதொழில் தொடங்குவதற்கு இத்தொழிற்பேட்டைகள் இடங்களைத் தந்துள்ளது.
தொழில் மேதை ஜி.டி.நாயுடு:
  • ஜி.டி.நாயுடு ஒரு தொழில் மனிதர் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளரும் ஆவார்.
    பேருந்து போக்குவரத்தை நடத்திய நாயுடு அதை நன்கு புரிந்து கொண்டு, மோட்டாரில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து சாதனை புரிந்தார். அவர் கண்டு பிடிப்புகளில் சில-
    மோட்டாரில்,
1. ரேடியேட்டருக்கு சமமான இயந்திரம்
2. என்ஜின் ஓடும்போது அதன் துடிப்பை அறியும் கருவி
3. பேருந்து அதிர்ச்சியை சோதிப்பதற்கான இயந்திரம்
4. கேமராவில் டிஸ்டண்ட் அட்ஜஸ்டர்
5. ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரம்
6. குறைந்த விலை வானொலி
7. ரேஸாண்ட் என்னும் மின்விசை மழிப்பான்
8. ஒரு அங்குலத்தில் இருநுற்றில் ஒரு பாகம் கன அளவுள்ள பிளேடு இது ஓராண்டுக்கு ஒரு நபருக்கு பயன்படும்.
இதுபோன்ற 80 வகையான கண்டுபிடிப்புகள். வேளாண்மையில் புதிய வகை விளைச்சலை உண்டாக்கக்கூடிய நாயுடு காட்டன் என்ற பருத்தி ஜெர்மனிக்குச் சென்றது.

அதிசய சோளச் செடி, பருத்திச்செடி, பெரியதுவரைச்செடி, கசப்பை இனிப்பாக மாற்றுவது, விதையில்லாத பழம் வாழை மரத்துக்கு பூச்சி தடுப்பான் போன்ற பலவற்றை கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.
மாணவர்களுக்கு பாலிடெக்னிக்கும், பொறியியல் கல்லுரியும் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.

Monday, December 9, 2019

December 09, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு - 03.சென்னை


                                           சென்னை (தமிழ்நாட்டின் தலைநகர்)

அமைவிடம்:
  • தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

தலைநகரம் : சென்னை
பரப்பு :174 ச.கி.மீ
மக்கள் தொகை :  4,646,732 (2011)
எழுத்தறிவு :  3,776,276 (90.18%)
ஆண்கள் :  2,335,844
பெண்கள் :  2,310,888
மக்கள் நெருக்கம் :  1 ச.கீ.மீ - க்கு 26,553

வரலாறு :
  • சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
  • 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது : அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.
 சட்டசபைத் தொகுதிகள்-16
  • ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி

பாராளூமன்றத் தொகுதிகள்-3
  •  வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.
  • வழிபாட்டிடங்கள்: கந்தகோட்டம், வடபழனி, மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்டலட்சுமி கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, ஸ்ரீராகவேந்திர மடம், சாந்தோம் சர்ச்.
சுற்றுலாத் தலங்கள்
  • வள்ளுவர் கோட்டம், கோல்டன் பீச், வண்டலுர் மிருகக் காட்சி சாலை, மெரினா பீச், கிண்டி சிறுவர் பூங்கா, மியூசியம்.
வள்ளுவர் கோட்டம் :
  • இது சென்னை மத்திய பகுதியில் அமைந்துள்ளது. தேர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. 133 குறள்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கோல்டன் பீச்:
  • சென்னையிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இது அமைந்துள்ளது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை சிறந்த பொழுதுபொக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.
மெரினா பீச்:
  • இது சென்னைக்கு கிழக்கே காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. ஆசியாவின் நீண்ட கடற்கரையான இதன் நீளம் சுமார் 13 கிலோ மீட்டர் ஆகும்.
சிறப்புகள்
  • தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம், தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட. பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
மொழி :
  • தமிழ், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது.
வரலாறு முழுத்தொகுப்பு
  •  சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. இது தொண்டை மண்டல மாகாணத்தில் கடலூர் பெண்ணாறு நதிக்கும் நெல்லூர் பெண்ணாறு நதிக்குமிடையில் அமைந்துள்ள பகுதியாகும். முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும்.
  • தொண்டை மண்டலம் கி.மு. 2வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. இப்பகுதியானது குறும்பர் இன மக்களின் பூர்வீக வசிப்பிடத்தை உள்ளடக்கியதாக அறியப்படுகிறது.
  • இளந்திரையனுக்குப் பிறகு இப்பகுதியானது சோழ இளவரசன் இளங்கிள்ளி என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதாகநம்பப்படுகிறது. இதற்குப் பின்னர் வடக்கு பகுதியிலிருந்து ஊடுருவிய ஆந்திர சாதவாகன இனத்தின் இரண்டாம் புளூமாலி ஆதிக்கத்தால் தொண்டை மண்டல சோழ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
  • இவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த இப்பகுதியை கண்காணிப்பதற்கு தலைமை பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செய்த பப்பசுவாமி என்பவர் இப்பகுதியை ஆண்ட முதல் பல்லவர் எனவும், இவர் காஞ்சிபுரம் எல்லையைக் கொண்ட சாதவாகனர்களின் தலைமைப் பிரதிநிதி  எனவும் கருதப்படுகிறார்.

  •     சாதவாகனாகளின் கீழ் இயங்கிய பல்லவ பிரதிநிதிகள், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தன்னிச்சை அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களாக மாறினர்.
  •     மூன்றாவது நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதியின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது.

  •     மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கி.மு. 879 ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.
  •     கி.மு. 1264ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆதிக்கத்தால் சோழர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  •     பாண்டியர்களின் அரை நுற்றாண்டு ஆட்சிக்கு பின்னர் டெல்லி சுல்தானின ஆட்சியின் நீட்சியாக பாமின் அரசின் கில்ஜி வம்சத்தில் வந்த வருவாய் பணிகள் உருவாக்கத்தின் முன்னோடியாய் விளங்கிய அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின்கீழ் இப்பகுதி இருந்தது.

  •     1361ஆம் ஆண்டில், விஜயநகர மன்னரின் குமாரர்களாகிய இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தொண்டைமண்டலம் விஜயநகர பேரரசின் ஆட்சிக்குட்பட்டது.

  •     விஜயநகர் ஆட்சியாளர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வெங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார்.

  •     1639ஆம் ஆண்டில் கூவம் ஆற்றுக்கும் எழும்பூர் ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது.

  •     இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல்போர்ச்சுக்கீசிய குடியேற்றப்பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது.

  •     மதராசபட்டினம் என்று அழைக்கப்படும் பழைய பகுதி இதன் வடக்கே அமைந்துள்ளது. பின்னர், இதன் இடைப்பட்ட வடக்குப் பகுதிகளில் விரைவாக புதிய குடியேற்றங்கள் மற்றும் வீடுகள் உருவாக்கப்பட்டு மேற்படி இரு நகரங்களும் கிட்டத்தட்ட ஒரே நகரமாக மாறியது. குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்திற்கு பயன்படுத்தினர்.

  •     ஜெனரல் மிர் ஜும்லா தலைமையிலான கோல்கொண்டா படைகள் 1646ல் சென்னையைக் கைப்பற்றியதுடன் சென்னை மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றியுள்ள பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

  •     1687ஆம் ஆண்டில் கோல்கொண்டா வீழ்ச்சிக்குப் பின்னர், இப்பகுதி டெல்லியிலுள்ள முகலாய பேரரசர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.

  •     சென்னையில் ஆங்கில நிறுவனம் அமைக்க முகலாய பேரரசர்களால் உரிமம் வழங்கப்பட்டது. பதினேழாம் நுற்றாண்டின் இறுதியில், கவர்னர்களின் ஆட்சியின்கீழ் சென்னை படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கவர்னர் எலியேல் (1687-92) ஆட்சியின்போது, சென்னை நகரத்தின் மேயர் பதவியும் மற்றும் மாநகராட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டது மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.

  •     1693ஆம் ஆண்டில், உள்ளூர் நவாப்புகளால் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் நகரங்கள் ஆங்கில நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

  •     1698இல் தாமஸ்பிட் சென்னை ஆளுநராக பொறுப்பேற்று பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து பதவியிலிருந்து வந்தார். இக்காலகட்டத்தில் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு சென்னை செல்வம் கொழிக்கும் நகரமாகவும் விளங்கியது.

  •     இதே காலகட்டத்தில் முக்கிய நிகழ்வு சென்னை புறநகர் பகுதிகள் தாவுத்கான் தலைமையில் முற்றுகையிடப்பட்டு, ஆங்கிலேயர்களால் கூடுதல் புறநகர்ப்பகுதிகள் கையகப்படுத்தப்பட்டதாகும்.
  •     1708ஆம் ஆண்டில் திருவொற்றியூர், வியாசர்பாடி, கத்திவாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சாத்தாங்காடு ஆகிய பகுதிகள் ஆங்கிலேயருக்கு இலவச பரிசாக வழங்கப்பட்டன.

  •     1735ஆம் ஆண்டில், சிந்தாதிரிபேட்டையும், 1742ஆம் ஆண்டில் வேப்பேரி, பெரம்பூர் மற்றும் பெரியமேடு ஆகிய பகுதிகளும் ஆங்கிலேயருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

  •     நிக்கோலஸ் மோர்ஸ் 1744 முதல் 1746 வரை ஆளுநராக இருந்தார். அவரது காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாக இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டது. தென்னிந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையேயான மேலாதிக்கத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் இதுவே ஆகும்.

  •     சென்னை 1744 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் ஐஎன்-லா-சேப்பலின் சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக சென்னை 1749ல் ஆங்கிலேயரால் மீட்டெடுக்கப்பட்டது.

  •     ஜார்ஜ் பிகோட் 1755 முதல் 1763 வரையிலான காலப்பகுதிக்கான ஆளுநராக இருந்தார். இக்காலக்கட்டத்தில் கம்பெனியானது வர்த்தக கழகங்கள், தமக்கென தனிமைப்படுத்தப்பட்ட நகரங்கள், கோட்டைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் சக்தி கொண்ட பரந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தும் ஒரு அதிகாரம் கொண்ட வர்த்தக நிறுவனமாக மாறியது.

  •     1767 ஆம் ஆண்டில் சார்லஸ் போச்சியர் ஆளுனரானார். அவரது காலத்தில் ஹைதர் அலி மைசூர் பேரரசை கைப்பற்றினார். மேலும் நிஜாமுடன் கைகோர்த்து சென்னை நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

  •     1761இல் ஹைதர் அலி மற்றும் கம்பெனிகாரர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. இவ்வுடன்படிக்கைபடி இவ்விருவரும் பரஸ்பரம் தாங்கள் கைப்பற்றிய இடங்களை விட்டு கொடுத்தனர். நவாப்புகள் ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்க போதிய வருவாய் இல்லாததால், கர்நாடகத்தின் ஆளுமை சென்னை அரசாங்கத்தின் பொறுப்பானது.

  •     1763ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பெறப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் சென்னை ஜாகீர்  என்ற இராணுவ பராமரிப்புத் தளமாக அழைக்கப்பட்டது. 1781ல் லார்ட் மகர்ட்னி சென்னை அரசாங்கத்தின் பொறுப்பேற்றார்.

  •     இவரது காலத்தில் சென்னை ஒரு முக்கிய கடற்படைத் தளமாக மாறியது

  •     1790ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் மேடோஸ் ஆளுநராக பதவி ஏற்றார். தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி பாதுகாப்பான நிலையை அடைந்தது. இதர வெளிநாட்டு சக்திகளின் அதிகாரங்கள் நீக்குதல் மற்றும் உள்ளுர் பிரதேசத்தின் வரம்புகளை வரன்முறைப்படுத்தல் ஆகியவை அரசாங்கத்திற்கு உறுதிப்பாட்டினை அளித்ததோடு வணிக வளர்ச்சியின் சகாப்தத்திற்கும் வழிவகுத்தன.
  •  1792ஆம் ஆண்டில், ஏற்பட்ட உடன்படிக்கையின்படி முகமது அலி கர்நாடகத்தின் முழு நிர்வாகப் பொறுப்புக்கான ஒப்படைத்து அதற்கு பதிலாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வு மைசூர் யுத்தம் ஆகும்.
  •  1799இல் திப்பு சுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கர்நாடகம் பிரிட்டன் வசமானது.இவ்வாறு தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. பல நுற்றாண்டுகளாக சிதறிக்கிடந்த கிராமங்கள் மற்றும் அதன் எல்லைகள் பிரிட்டன் வருகைக்குப் பின்னர் ஒரே அலகுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  •  1939-40ல் இந்த நகரத்தின் நில வடிவமைப்பும் பரப்பளவும் 19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலே ஏற்பட்டது.
  •  1803 முதல் 1827 வரையிலான காலப்பகுதி, நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.
  •  சர் எட்வாட் எலியட் என்பவர் அக்காலத்தில் சென்னையின் முக்கிய ஆளுநராக இருந்தார். அவர்  1814ஆம் ஆண்டில் மன்ரோவை சென்னை மாகாணத்தின் நீதித்துறை ஆணையத்தின் தலைவராக நியமித்தார். நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்கள் இந்நீதி ஆணைக்குழுவினால் செய்யப்பட்டன. சர் தாமஸ் மன்ரோ 1820ஆம் ஆண்டில் ஆளுநராகி, 1827 வரை அப்பதவியில் தொடர்ந்தார். 
  • இவர் தன்னால் இயன்ற அளவு கல்வியறிவை பெருக்க முயற்சி மேற்கொண்டார் . இவர் சென்னையில் ஆங்கிலக் கல்வியை தொடங்கினார் . மேலும் இவரால் பொதுக்கல்வியை மேம்படுத்தவும் நேரடியாக கண்காணிக்கவும் ஒரு பொதுக்கல்வி வாரியம் நிறுவப்பட்டது.
  • 19ஆம் நுற்றாண்டின் முதல் பாதியில் சென்னை நகரம் அடைந்த முக்கிய முன்னேற்றம் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான நிறுவனங்கள் அமைக்கப்பட்டதாகும்.
  •  20ஆம் நுற்றாண்டில் சென்னை முதல் ஆளுநர் லார்ட் அம்ப்த்தில் (1901-06) என்பவர் ஆவர். 1906-1911 வரை சர் ஆர்த்தர் லா என்பவரும், 1912-1919 வரை லார்ட் பெண்ட்லாண்டு என்பவரும் ஆளுநர் பதவியை வகித்தனர். இந்த காலக்கட்டத்தின் முக்கிய நிகழ்வாக 1906ல் உருவாக்கப்பட்ட சென்னை மின்சார வழங்கல் கழகம் மற்றும் 1907ல் உருவாக்கப்பட்ட இந்தியன் வங்கியும் ஆகும்.
  •  1934 மற்றும் 1936ஆம் ஆண்டுகளில் சிறிது காலத்திற்கு சர் எம்.டி.உஸ்மான் சாகிப் மற்றும் சர். கே. வெங்கட்டா ரெட்டி நாயுடு ஆகிய இரண்டு இந்தியர்கள் சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டனர்.
  • 1937ல் சி.இராஜகோபாலச்சாரி அவர்களின் அமைச்சரவை இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் இருந்தது. நிர்வாகத்தில் ஆளுநர் செல்வாக்கு மற்றும் அதிகாரம் கணிசமாக குறைக்கப்பட்டது.

  • 1947 ஆகஸ்ட் 15ல் ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றனர். எனவே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு செய்ததை விளக்கும் ஒரு நினைவுச்சின்னமாக சென்னை திகழ்கிறது.

December 09, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு - 02.தர்மபுரி

Magme guru

தருமபுரி வரலாறு

வரலாறு :

  •         சங்க காலத்தில் தர்மபுரியின் பெயர் தகடூர்.
  •         இவ்வூரை அதியமான் ஆண்டதாக இலக்கியம் கூறுகிறது.
  •         பிற்காலத்தில் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அதியமான் மகன் எழினி தோற்கடிக்கப்பட்டான்.
  •         இதனை 'தகடூர் யாத்திரை' என்ற தமிழிலக்கியம் விரிவாக விளக்குகிறது.
  •         சேரரின் ஆட்சிக்குப் பிறகு தர்மபுரி என வழங்கும் தகடூர், நுளம்பர், சோழர், மீண்டும் அதியமான்கள், ஹொய்சாளர், விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் இருந்தது.
  •         17-ஆம் நூற்றாண்டில் பிஜப்பூர் சுல்தான்களின் ஆளுகையின் கீழ் தருமபுரி இந்தது. 1652 முதல் 1768 வரை மைசூர் மன்னர்களின் மேலாண்மையின் கீழ் இருந்தது.
  •         இக்காலத்தில் கன்னடர்கள் பெருமளவில் இம்மாவட்டத்தில் குடியேறினர்.
  •         இவர்களுக்கு முன்பே விஜயநகர காலத்தில் தெலுங்கர்கள் மாவட்டம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
  •         18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத் தளபதி வுட் என்பவன் பிரிட்டீஸ் இந்தியப் பகுதிக்குள் தர்மபுரியை கொண்டு வந்தான்.
  •         வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்துடன் தர்மபுரி இணைந்தே இருந்தது. 1965-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  •         இம்மாவட்டம் தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் கன்னட, தெலுங்கு செல்வாக்கு உண்டு.
  •         ஊர்களும் ஹல்லி, பள்ளி என்று அமைந்திருக்கும். இங்கு பழங்குடியினரும் அதிகம்.


தலைநகரம் : தர்மபுரி

பரப்பு :  4,497 ச.கி.மீ

மக்கள் தொகை : 1,506,843 (2011)

எழுத்தறிவு : 917,709 (68.54 %)

ஆண்கள் : 774,303

பெண்கள் : 732,540

மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 335


பொது விபரங்கள் : மழையளவு சராசரி : 857மி.மீ; காடுகள் : 3,66,231; ஹெக்டேர் சாலைகளின் நீளம் : 5,796கி.மீ; காவல் நிலையங்கள் : 52; பதிவுபெற்ற வாகனங்கள் : 18,640; திரையரங்குகள் : 142; வெப்பம் : 38நீ

எல்லைகள் : வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

உள்ளாட்சி நிறுவனங்கள் : நகராட்சிகள்-1 (தர்மபுரி);ஊராட்சி ஒன்றியம்-8 (தர்மபுரி, அரூர்,காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம்);

பேரூராட்சிகள்-10 (அரூர், கடத்தூர், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பி. மல்லாபுரம், கம்பைநல்லூர்);கிராம பஞ்சாயத்துக்கள்-588;

சட்ட சபை தொகுதிகள்: 5;பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்

கல்வி : பள்ளிகள்: தொடக்கநிலை 1,837 நடுநிலை 173  - உயர்நிலை 149  - மேல்நிலை 56  - கல்லூரிகள் 3  - பொறியியல் கல்லூரி 1 மருத்துவம் : அரசு மருத்துவமனைகள்-7; ஆரம்ப சுகாதாரமையங்கள்-18; துணைமையங்கள்-62.

புகழ்பெற்ற பெரியோர் :
சங்ககால மன்னர் அதியமான், புலவர் அவ்வையார், சுதந்திர போராட்டவீரர் தீர்த்த கிரிகவுண்டர்; கவனர் ஜென்ரல் ராஜாஜி; விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா.

தருமபுரி வரலாறு முழுத்தொகுப்பு:

  • சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார்.
  • 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.
  • 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 2ம்-நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்கு இம்மாவட்டத்தில் இருந்தது. இந்த சமயத்தில் தெற்கில் சோழர்கள் அதிகாரத்திற்கு வந்தனர்.
  • கி.பி.894-ல் முதலாம் ஆதித்திய சோழன் கொங்கு நாட்டை கைப்பற்றினார்.
  • கி.பி.949-950-ல் சோழர்கள் இராஷ்டகூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இராஷ்டகூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்கு பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கவாடி சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சி பகுதியாக ஆக்கப்பட்டது.
  • 12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப்பகுதிகளை கைப்பற்றினார்.
  • பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால் அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்திருந்தது.
  • ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனை சோழர்கள் பகுதியிலிருந்து விரட்ட யாதவர்களுக்கு முதலாம் சுந்தர பாண்டியன் உதவினார்.
  • 13-ம் நூற்றாண்டின் வரலாறு ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்கு பிறகு ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்கு பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனை சோழ பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது.
  • ஆனால் அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரன் மகன் வீர ராமநாதன் சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாக பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானின் முகமதிய ஆட்சியர்களால் சூழப்பட்டனர்.
  • 14-ம் நூற்றாண்டில் விஜய நகர இராஜ்ஜியத்தின் எழுச்சி காணப்பட்டது. மதுரையில் உள்ள முகமதிய சுல்தானின் அரசை வீழ்த்துவதற்காக கி.பி.1365-66 ஆண்டு முதலாம் புக்கா தனது கவனத்தை தெற்கு திசையில் திருப்பினார். இந்த படையெடுப்புகளில் ஒன்றில் தான் சேலம் மாவட்டம் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது.
  • கி.பி.1565-ம் ஆண்டு வரை பெருமையுடன் ஆண்ட விஜயநகர அரசர்களை தக்காண சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகள் தலைக்கோட்டை, ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்த்தினர். இதே சமயம் சென்னை பட்டணத்தின் ஜெகதீரராயர் மைசூருடன் சேர்த்து பாரமஹாலையும் ஆட்சி செய்தார். 
  • இதற்கிடையில் கி.பி.1623-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கரின் மூலம் மதுரை நாயக்கர்களின் புகழ் உச்சியை அடைந்தது.
  • பாளையக்காரர்கள் நாயக்கர்களிடம் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் இப்பகுதியை பாளையக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர்.
  • பாளையக்காரர்களில் ஒருவரான இராமசந்திரநாயக்கர் காவேரியின் தெற்கு பகுதியிலுள்ள நாமக்கல் வட்டத்துடன் தலைமலை பகுதியையும், கூடுதலாக கவனித்து வந்தார்.
  • நாமக்கல் கோட்டை இவர்களாலேயே கட்டப்பட்டது என கூறப்படுகிறது. காவேரியின் வலது கரையில் அமைந்துள்ள காவேரிபுரத்தையும் சேர்த்து நாயக்கர்களின் பேரரசின் முக்கிய பகுதிகள் கெட்டி முதலியார்களின் பொறுப்பில் இருந்தது. மேலும் காவேரிபுரம் மைசூர் பீடபூமிக்கு செல்லும் ஒரு முக்கிய வழிப்பாதையின் தொடக்கத்தில் அமைந்திருந்தது.
  • இவர்களுடைய அதிகாரத்தின் மையப்பகுதி தாரமங்கலமாக இருந்ததால் அங்கே ஒரு பெரிய கோயிலை நிறுவினர். இவர்களுடைய ஆட்சி கிழக்கே தலைவாசல் வரையும், தெற்கே கோவையிலுள்ள தாராபுரம் வரை நீண்டியிருந்தது. ஓமலூர் மற்றும் ஆத்தூரில் உள்ள கோட்டைகள் கெட்டி முதலியார்களின் முக்கிய கோட்டைகளாகும்.
  • கி.பி.1611-ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தை சேர்ந்த காந்திராவேநரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றினார். 
  • மேலும் இவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1654-ம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து விராலகத்திரதுர்க், பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். ஓசூரை மைசூர் மன்னரான சந்திரசங்கர் தொட்டா தேவராஜ் என்பவரிடமிருந்தும், ஓமலூரை கெட்டி முதலியார்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார். மராட்டியர்களின் ஆக்கிரமிப்பால் மைசூர் அரசு ஒடுக்கப்பட்டது. பாரமஹால் மற்றும் தால்காட் பகுதி மராட்டியர்களின் கைகளுக்கு மாறியது.
  • கி.பி.1688-89 -ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராயர் பாரமஹால் பகுதியின் மீது படையெடுத்து தருமபுரி மனுக்கோண்டா, ஓமலூர் பரமத்தி, காவேரிபட்டணம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.
  • கி.பி.1704-ம் ஆண்டில் சிக்க தேவராயரின் மரணத்திற்கு முன்பு சேலத்தின் முழுபகுதியும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதற்கிடையில் கடப்பாவின் நவாப் அப்துல் நபிக்கான் தன்னுடைய அதிகாரத்தை தெற்கு நோக்கி செலுத்தி கி.பி.1714-ம் ஆண்டில் பாரமஹால் பகுதியின் தலைவரானார்.
  • கி.பி.1760-ம் ஆண்டு மைசூர் பாரமஹால் ஹைதர்அலியின் அதிகாரத்தில் இருந்தது.
  • கி.பி.1767-ல் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயே அரசு ஹைதர்அலியின் மீது தாக்குதல் நடத்தி காவேரிப்பட்டணத்தை கைப்பற்றினர். பின்னர் கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர். ஹைதர்அலி மீண்டும் வலிமையுடன் போரிட்டு, ஆங்கிலேயர்களை துரத்திவிட்டு,காவேரிப்பட்டணத்தை மீண்டும் கைப்பற்றினார். சில மாதங்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பாரமஹால் மீது மீண்டும் ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர்.
  • மேலும் தெற்கு தருமபுரி, சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் ஆகியவை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி சரணடைந்தது. இருந்த போதிலும் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. 
  • ஹைதர்அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கலை கைப்பற்றினார். இரண்டாம் மைசூர் போரின் போது சேலம் மாவட்டம் ஹைதர்அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • ஹைதர்அலிக்கு பின் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அதிக அதிகாரம் பெற்றவராக இருந்தார்.திப்புசுல்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் மராட்டியர் மற்றும் ஹைதாராபாத் நிஜாமுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கி.பி.1790-ல் மூன்றாம் மைசூர் போரை தொடுத்தனர்.
  • ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு காவேரிப்பட்டிணத்தில் வலிமையுடன் போரிட்டது. திப்புசுல்தான் முழுபலத்துடன் போரிட்ட போதும் அவரால் ஆங்கிலேயரை தடுத்து நிறுத்த முடியவில்லை.
  • கி.பி.1791-ம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, நீலகிரி மற்றும் இரத்தினகிரி ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. மேலும் சில கோட்டைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆங்கிலேயர் வசம் வந்தது.
  • கி.பி.1791-ம் ஆண்டில் திப்புசுல்தான் தெற்கிலிருந்து ஒரு படைப்பிரிவை அனுப்பினார். அது பென்னாகரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரிடத்தில் சரணடைந்தது.
  • கி.பி.1792-ம் ஆண்டில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே சமாதானம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புசுல்தான் ஆட்சியின் பாதி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. பாலக்காட்டு பகுதியை தவிர்த்து சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும், ஒசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது. ஆங்கிலேயரின் முதல் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிடமாக கிருஷ்ணகிரி அமைக்கப்பட்டது.
  • கி.பி.1799-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஒசூர் தாலூக்கா, நீலகிரி, அஞ்செட்டி, துர்க்கம், இரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் போன்ற பல இடங்கள் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் இறந்த பிறகு சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கிலேய ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.
  • தற்போதைய தருமபுரி மாவட்டம் ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவாக இருந்தது.
  • 2.10.1965-ஆண்டு தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
  • தருமபுரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு.ஜி.திருமால் இ.ஆ.ப ஆவார்
  • 09.02.2004-ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.