LATEST

Tuesday, December 17, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -04.கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வரலாறு
தலைநகரம் :   கோயம்புத்தூர்
பரப்பு :  4,732 ச.கி.மீ
மக்கள் தொகை :  3,458,045 (2011)
எழுத்தறிவு :  2,635,907 (83.98%)
ஆண்கள் :  ,729,297
பெண்கள் :  1,728,748
மக்கள் நெருக்கம் :  1 ச.கீ.மீ - க்கு 731
வரலாற்றுச் சிறப்பு:
  • சங்க காலத்திலேயே தமிழகத்தை சோழநாடு, பாண்டியநாடு, சேரநாடு, கொங்குநாடு என்று பிரித்திருந்தார்கள்.
  • கோவை மாவட்டம் கொங்கு பகுதியில் இருந்தது. கொங்கு நாடுபற்றி சங்க இலக்கியங்களில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது.
  • சேர நாட்டிற்கு அடுத்த நாடாக கொங்கு பகுதி இருந்தததால் சேரர்கள் இப்பகுதிகளை ஆண்டனர். களப்பிரர்கள், இராஷ்டிரர்கள், கங்க மன்னர்கள், சோழர்கள், விஜயநகரமன்னர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர் வரை இப்பகுதி அந்தந்தக் காலங்களில் அவர்களால் ஆளப்பட்டது.
கல்வெட்டில் காணப்படும் ஊர்கள்
சோழமாதேவி, தாளி, குடிமங்கலம், ஜோதம்பட்டி, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கொழுமம், குமாரலிங்கம், திருமுருக்கன்பூண்டி, அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் - இருகூர், சாவடிப்பாளையம், வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.
பெயர்க்காரணம்:
  • கோயம்புத்தூர் என்பது 'கோசர்' என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க்கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது. கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
எல்லைகள்:
  • கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரளமாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.
    கோவை மாவட்டத்திலுள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர்.
பொது விபரங்கள்
  • சாலைகளின் நீளம் - 8 கி.மீ.
  • பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042,
  • வங்கிகள் 328,
  • காவல்நிலையங்கள் - 60,
  • காவலர்கள் 5910,
  • தந்தி அலுவலகங்கள் 260,
  • தந்தி அஞ்சலகங்கள் 172,
  • மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர்.
வருவாய் நிர்வாகப் பிரிவு
  • கோட்டங்கள் - 2 (கோயம்புத்தூர், பொள்ளாச்சி)
    வட்டங்கள் - 8 (கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர்)
  • வருவாய் கிராமங்கள் - 441 உள்ளாட்சி நிறுவனங்கள்
    மாநகராட்சி - 1 கோவை
    நகராட்சிகள் - 3 மதுக்கரை, வால்பாறை
    ஊராட்சி ஒன்றியம் - 12
    பேரூராட்சி - 37
    பஞ்சாயத்துக்கள் - 227
சட்டசபை தொகுதிகள் - 10
  • மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை.
கல்வி
பள்ளிகள்
  • தொடக்கப் பள்ளிகள் - 1,441,
  • நடுநிலைப் பள்ளிகள் - 234,
  • உயர்நிலைப் பள்ளிகள் - 133,
  • மேநிலைப் பள்ளிகள் - 134.
கல்லுரிகள்
  • பொறியியல் கல்லுரிகள் - 3 ,
  • மருத்துவக் கல்லுரிகள் - 2 ,
  • பார்மசிக் கல்லுரி - 1 ,
  • ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகள் - 4,
  • கலை, அறிவியல் கல்லுரிகள் - 31,
  • சட்டக்கல்லுரி - 1,
  • வேளாண்மை, தோட்டக்கலை கல்லுரிகள் - 3,
  • தொழில் நுட்பக்கலை கல்லுரிகள்  7
  • பல்கலைக்கழகங்கள் - 3.
வழிபாட்டிடங்கள்:
பேரூர் - பட்டீஸ்வரர் கோவில், காரமடை-அரங்கநார் கோவில், குருந்தமலை முருகன் கோவில், அவிநாசியிலுள்ள அவிநாசியப்பர், திருமுருக்கன் பூண்டியில் உள்ள முருகநாதர் கோவில், மேல் சிதம்பரம் நடராஜர் கோவில், கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியவை வழிப்பாட்டிடங்கள் இம்மாவட்டத்தில் முக்கியமான தலங்களாகும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் காடுகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

1. போலம்பட்டிப்பள்ளத்தாக்கு. கோயம்புத்தூர் - சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. இங்கு வாகை, கருவாகை, வேல்வாகை, பில்லமருது, தாடச்சி, கெங்கை, ஈட்டி, வெண்தேக்கு, வெள்ளநாகை, சாதாதேக்கு போன்ற உயர்ந்த மரங்களும் உள்ளன. 5000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் வேடிப்பில்லா, பால் வடிஞ்சான், காட்டுப்பன்னை, மலைக்கொன்னை நாங்கு மரங்களும் வளர்ந்துள்ளன.

2. தாடகம் பள்ளத்தாக்கு - ஊஞ்சல், காட்டு எலுமிச்சை, தெரணை, புல்லாவரம், பொரசு, மலைக்கிளுவை, தணக்கு போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.

3.டாப்ஸ்லிப் பகுதி - இங்கு 70 அங்குலம் மழை பெறுவதால், 150 அடி உயர மரங்கள் வளர்கின்றன.

4. ஆனைமலை காடுகள் - துணக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது. இங்கு அதிக மழை பெறுவதால் காடுகள் செறிந்து காணப்படுகின்றன.

5. பொள்ளச்சி பகுதி - இங்கு தேக்கு, கருமருது, கடுக்காய், ஓதியமரம், இலவமரம், பெருமூங்கில், கல்மூங்கில் மிகுதியாக உள்ளன.
ஆறுகள்:
பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
அணைகள்
நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லுர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.
அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
நீர்மின் திட்டம்:
பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்மின் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
வேளாண் உற்பத்தி:
கோவை மாவட்டத்தில் 65 சதவீதம் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன.
நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய உணவுப்பயிர்களும், துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சை கடலை முதலிய தானியங்களும், பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, தேங்காய், வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவையும் பெருமளவு விளைவிக்கப்படுகின்றன. பல்லடம் வட்டத்தில் பழவகைகள் அதிகம்.
கோவை மாவட்டத்தில் தென்னை மிகுதி. திருப்பூர், அவிநாசி எலுமிச்சைக்கும், பொள்ளாச்சி வெற்றிலைக்கும் பேர் பெற்றவை.
ஆனை மலையில் ஏலக்காய், சின்கோ, ரப்பர் மரங்கள் விளைகின்றன.
கோவையின் தொழில் வளர்ச்சி:
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்றுள்ளது.
இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின.
1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை.
அடுத்த 20 ஆண்டுகளில் பல மில்கள் வளர்ந்தன.
1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கியதும் பல ஆலைகள் புதிதாகத் தோன்றின.
கோவையில் மட்டும் ஏறக்குறைய அறுபது ஆலைகள் உள்ளன.
இது தவிர சிங்காநல்லுர், பீளமேடு, கணபதி, உப்பிலிபாளையம் முதலிய இடங்களிலும் பல ஆலைகள் உள்ளன.
பருத்தி பிரிக்கும் தொழிற்சாலை:
சூலுர், சிங்காநல்லுர், பீளமேடு, இடங்களில் மட்டும் 31 பருத்தி பிரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
பிளேடுகள்:
உள்நாட்டிலேயே பிளேடுகள் தயாரித்தது கோவைதான். இன்று ஆண்டுக்கு 2400 இலட்சம் பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கோவையை பார்த்தே மற்ற மாநிலங்களில் பிற்காலத்தில் லேசர் பிளேடுகள் தயாரிக்கப்பட்டன.
கடைசல் இயந்திர தொழிற்சாலை:
இயந்திரம், துளையிடும் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திர குடைக்கல் போன்ற இயந்திரத் தொழிற் கருவிகள் தயாரிக்கும் நுற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இம்மாவட்டம் முழுவதும் உள்ளன. பெரும் தொழிற்சாலைகளுக்கு சிறு தொழிற்சாலைகளுக்கும் இவை முக்கியமானதால் இங்கு பெருகி வளர்ந்துள்ளன.
அஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை:
தீப்பற்றாத அஸ்பெஸ்டாஸ் கூரைகள் செய்யும் தொழிற்சாலை கோவைக்கருகில் 5 மைல் தொலைவில் 1953 முதல் செயல்பட்டு வருகிறது.
அஸ்பெஸ்டாஸ் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
3 கோடி ரூபாய்க்கான இத்தொழிலில் 2500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
நீரிறைக்கும் பம்புகள்:
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்புகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சென்ட்ரி பியூகல் பம்புகளையும் அதைச்சார்ந்த துணை உறுப்புகளையும் தயாரிக்கும் நுற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
ஆண்டுக்கு சராசரி 7000 பம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பால் உற்பத்தி:
இரண்டாம் பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய பால் பண்ணைக்கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பால்பண்ணைத் திட்டத்தின் மூலம் 500 சங்கங்கள் பலனடைகின்றன. நாள் ஒன்றுக்கு 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 1,02,000 விவசாயிகள் பயனடைகின்றனர்.
இதில் ஈடுபட்டுள்ள கால் நடைகளின் எண்ணிக்கை 1,32,000.
ஏ.சி.சி. சிமெண்ட்:
இத்தொழிற்சாலை கோவையிலிருந்து எட்டாவது மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு 2000 பேர் பணியாற்றுகின்றனர். மாதம் சராசரி 25,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
சோப்பு உற்பத்தி:
இம்மாவட்டத்தில் உள்ள சிறுதொழில்களில் சோப்பு உற்பத்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சோப்பு, பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.
இதுதவிர இத்தொழிலுக்குத் தேவையான சோடியம் சிலிகேட் என்னும் கச்சாப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.
இது ஆண்டுக்கு 500 டன் தயாரிக்கிறது.

சிக்கோனா தொழிற்சாலை:
தமிழக அரசின் முயற்சியால் 1955ல் இத்தொழிற்சாலை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இங்கு குனைன் சல்பேட் மற்றும் குனைன் ஹைட்ரோ குளோரைட் போன்ற கொய்னாப் பொருட்கள், குனிடின் சல்பேட், மருந்து போன்றவையும், இதுதவிர நறுமணத் தைலங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழக அரசின் தொழில் முதலீடுகள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இதுவரை 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது.
அவற்றில் பத்துத் தொழிற்பிரிவுகள் பொதுத் துறையின் கீழும், மற்ற 36 தொழிற்பிரிவுகள் கூட்டுத்துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன. இதில் அரசு தொழிற்கழகத்தின் முதலீடு சுமார் 600 கோடி ஆகும்.
இதனால் 20,000 பேர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
1979-ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையம் தொடங்கப்பட்ட பின்னர் 10 ஆயிரத்திற்கு அதிகமான சிறுதொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
1960ஆம் ஆண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் உருவாக்கப்பட்ட பின்னர் பின்வரும் கிராமத்தொழில்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன.
சோப்பு, தோல், செக்கு, எண்ணெய், சுண்ணாம்புத் தொழில், தேனீ வளர்ப்பு, காலணி தயாரித்தல், மட்பாண்டம் தச்சு, கொல்லுத்தொழில், பிரம்புதொழில் முதலியவை வளர்ந்து வருகின்றன.
தொழிற்பேட்டைகள்:
  • குறிஞ்சி, திருப்பூர், சிறுமுகை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுதொழிற்கள் வளர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    சுயதொழில் தொடங்குவதற்கு இத்தொழிற்பேட்டைகள் இடங்களைத் தந்துள்ளது.
தொழில் மேதை ஜி.டி.நாயுடு:
  • ஜி.டி.நாயுடு ஒரு தொழில் மனிதர் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளரும் ஆவார்.
    பேருந்து போக்குவரத்தை நடத்திய நாயுடு அதை நன்கு புரிந்து கொண்டு, மோட்டாரில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்து சாதனை புரிந்தார். அவர் கண்டு பிடிப்புகளில் சில-
    மோட்டாரில்,
1. ரேடியேட்டருக்கு சமமான இயந்திரம்
2. என்ஜின் ஓடும்போது அதன் துடிப்பை அறியும் கருவி
3. பேருந்து அதிர்ச்சியை சோதிப்பதற்கான இயந்திரம்
4. கேமராவில் டிஸ்டண்ட் அட்ஜஸ்டர்
5. ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரம்
6. குறைந்த விலை வானொலி
7. ரேஸாண்ட் என்னும் மின்விசை மழிப்பான்
8. ஒரு அங்குலத்தில் இருநுற்றில் ஒரு பாகம் கன அளவுள்ள பிளேடு இது ஓராண்டுக்கு ஒரு நபருக்கு பயன்படும்.
இதுபோன்ற 80 வகையான கண்டுபிடிப்புகள். வேளாண்மையில் புதிய வகை விளைச்சலை உண்டாக்கக்கூடிய நாயுடு காட்டன் என்ற பருத்தி ஜெர்மனிக்குச் சென்றது.

அதிசய சோளச் செடி, பருத்திச்செடி, பெரியதுவரைச்செடி, கசப்பை இனிப்பாக மாற்றுவது, விதையில்லாத பழம் வாழை மரத்துக்கு பூச்சி தடுப்பான் போன்ற பலவற்றை கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார்.
மாணவர்களுக்கு பாலிடெக்னிக்கும், பொறியியல் கல்லுரியும் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.

No comments:

Post a Comment