LATEST

Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Saturday, February 1, 2020

February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் வினா விடை பகுதி 8

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 8

1. உயர்கல்வி வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவது பல்கலைக்கழக மானியக் குழு

2. தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் திரு.காமராஜர்

3. தமிழ்நாட்டில் அணுமின் சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் கல்பாக்கம், கூடங்குளம்

4. தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள் உயிரி பொருட்கள் எரிசக்தி முறையில் மின் உற்பத்p செய்கின்றன

5. தேசிய அனல்மின் கழகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்கும் இடம் வல்லூர்

6. பசுமைப் புரட்சியினை அறிமுகப்படுத்தியது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

7. இந்தியாவின் மூன்று முக்கிய தொழில் நுட்ப மையங்கள் பெங்களுர், ஹைதராபாத், சென்னை

8. தொடக்கக் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம்.

9. இந்தியாவில் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலம் --------------
அ) கோவா
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) ஆந்திரபிரதேசம்
விடை: இ) கேரளா

10. ------------- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார்
அ) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
ஆ) பண்டிட் ஜவஹர்லால் நேரு
இ) சுபாஷ் சந்திர போஸ்
ஈ) சர்தார் பட்டேல்
விடை: ஆ) பண்டிட் ஜவஹர்லால் நேரு
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

1. பொருளாதார சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் மூன்று

2. தனியார் துறை தொழில் நிறுவனங்களுக்கான விதிமுறை, கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவது தாராளமயமாதல்

3. ஒரு நாட்டின் அங்காடியை பன்னாட்டு அங்காடியுடன் தொடர்புபடுத்துவது உலகமயமாதல்

4. நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது சந்திராயன்-I விண்கலம் 

5. சந்திராயன்-ஐ நிலவிற்கு செலுத்தப்பட்ட ஆண்டு 2008

6. 2011-கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 82.14%

7. 2011-கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 65.46%

8. மேல்நிலைக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு தொழிற்கல்வி

9. உயர்கல்வி வழங்குவதில் முதலிடம் வகிப்பது சீனா

10. உயர்கல்வி வழங்குவதில் இந்தியாவின் இடம் மூன்று
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

1. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 2007.

2. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் உடைமையாக்குவது தனியார் மயமாதல்.

3. விண்வெளியில் செயற்கைக் கோள்களை செலுத்தும் நாடுகள் ஆறு.

4. உயிரி பொருட்;கள் எரிசக்தியானது வேளாண் பொருட்களின் கழிவிலிருந்து பெறப்படுகிறது.

5. பட்டு நெசவில் புகழ்பெற்றது பெனாரஸ்.

6. கைத்தறி நெசவில் புகழ்பெற்றது தமிழ்நாடு.

7. மரத்தினாலான பொருட்கள் தயாரிப்பில் புகழ்பெற்றது லூதியானா.

8. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற அமைக்கப்பட்டது இந்திய திட்டக்குழு.

9. நம்நாட்டு வருவாயில் வேளாண்மையின் பங்கு 40%.

10. பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது அரசு.
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5


1. இந்தியாவில் முதன்முதலாக ஆர்யபட்டா என்கிற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

2. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 778.45 மில்லியன்.

3. இந்தியாவில் கேரள மாநிலத்தின் தான் மிக அதிகமாக 93.9 விழுக்காடு கல்வியிவு பெற்று உள்ளனர்.

4. தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.3 விழுக்காடு ஆகும்.

5. பீகாரில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 63.8 விழுக்காடு ஆகும்.

6. தமிழ்நாட்டின் சிறிய துறைமுகங்கள் கடலூர் மற்றும் நாகப்பட்டினம்.

7. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் மூன்று.

8. உயர்கல்வி வழங்குவதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு.

9. மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது காற்று மின்சக்தி.

10. இந்தியாவில் இதுவரை முடிவுற்றுள்ள ஐந்தாண்டுத் திட்டங்கள் பத்து.
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4


1. மரத்தினாலான பொருட்கள் தயாரிப்பில் லூதியானா புகழ் பெற்றது.

2. பிரிட்டிஷ் ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியா தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.

3. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்களே சிறந்தது என்று பரிந்துரைத்தவர் ஜவஹர்லால் நேரு.

4. ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டி தேசிய வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டது.

5. தேசிய வளர்ச்சிச்குழுவில் மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுகிறார்கள்.

6. நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது வேளாண்மை.

7. 1967 ஆம் ஆண்டு இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

8. பலநாடுகளில் தங்களது தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் என்று பெயர். 

9. தற்பொழுது இந்தியாவில் 7 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

10. 1956ஆம் ஆண்டு, முதலாவது அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்டது.
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. ஆர்யபட்டா என்கிற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு 1975.

2. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் குறைவாக உள்ள மாநிலம் பீகார்.

3. இந்தியா தொலைதொடர்பு வசதியில் உலக அளவில் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

4. தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

5. எம்.ஆர்.டி.எஸ் இரயில் திட்டம் செயல்பட்டு வருகின்ற மாநகர் சென்னை.

6. பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆட்சி செய்த பொழுது கிராமப்பொருளாதாரம் நலிவடைந்தது.

7. பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவின் இயற்கை வளங்கள் இங்கிலாந்தின் தொழில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

8. பட்டு நெசவில் பெனாரஸ் புகழ் பெற்றது.

9. கைத்தறி நெசவில் தமிழ்நாடு புகழ் பெற்றது.

10. சால்வை தயாரிப்பில் காஷ்மீர் புகழ் பெற்றது.
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. பண்டைக் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் கிராமப்புற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

2. இந்தியாவின் முக்கியத் தொழில் விவசாயம்.

3. சால்வைகள் தயாரிப்பில் காஷ்மீர் புகழ் பெற்றது.

4. இங்கிலாந்தின் மூலப்பொருட்களின் தேவையை இந்தியா ஈடுகட்டியது. 

5. நேரு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த விரும்பினார்.

6. இந்திய மக்களில் 70 விழுக்காட்டினர் வேளாண்மையை நம்பி வாழ்ந்தார்கள்.

7. காளிகோ துணிகள் உறப்த்தியில் புகழ் பெற்றது வங்காளம்.

8. இந்தியாவில் இதுவரை 11 ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிவுற்றுள்ளன.

9. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

10. டி.ஐ.சைக்கிள் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
February 01, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் வினா விடை பகுதி 1

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

வினா விடை பகுதி 1


1. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு ----------
அ) சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது
இ) இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது
ஈ) ஐக்கிய அரசு நாடுகளிலிருந்து பெறப்பட்டது
விடை: அ) சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது

2. பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலம் ---------------
அ) 1956-61
ஆ) 1997-2002
இ) 2002-2007
ஈ) 2007-2012
விடை: ஈ) 2007-2012

3. இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் -----------
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமர்
இ) நிதியமைச்சர்
ஈ) குடியரசுத் துணைத்தலைவர்
விடை: ஆ) பிரதமர்

4. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -----------
அ) 1962
ஆ) 1950
இ) 1956
ஈ) 1949
விடை: ஆ) 1950

5. பிரதமர் நேரு நடைமுறைப்படுத்த விரும்பிய இந்தியப் பொருளாதாரம் ---------
அ) கலப்புப் பொருளாதாரம்
ஆ) சமதர்ம பொருளாதாரம்
இ) முதலாளித்துவ பொருளாதாரம்
ஈ) பணப்பொருளாதாரம்
விடை: அ) கலப்புப் பொருளாதாரம்

6. பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1967
ஆ) 1977
இ) 1987
ஈ) 1957
விடை: அ) 1967

7. பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் ---------------
அ) ஜெயபிரகாஷ் நாராயண்
ஆ) ஜவஹர்லால் நேரு 
இ) ஆச்சார்ய வினோபா பாவே
ஈ) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
விடை: இ) ஆச்சார்ய வினோபா பாவே

8. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ------
அ) 1981
ஆ) 1991
இ) 2001
ஈ) 2010
விடை: ஆ) 1991

9. செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் --------------
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
இ) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
ஈ) இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
விடை: இ) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
 

10. 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
அ) 74.04%
ஆ) 68.8%
இ) 66.8%
ஈ) 67.8%
விடை: அ) 74.04%
February 01, 2020

நாட்டு வருமானம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

நாட்டு வருமானம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு = நிகர உள்நாட்டு உற்பத்தி.

2. கணக்கில் காட்டப்படாத பணம் கருப்புப் பணம்.

3. முறையற்ற பண்டமாற்று முறை பணம் சாரா பொருளாதாரம் என அழைக்கப்படுகிறது.

4. பண்டங்கள் உற்பத்தியில் இடுபொருட்களின் மதிப்பு இருமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இருமுறை கணக்கிடுதல்.

5. வேளாண்மைத் துறையில் திரட்டப்படும் வருமானம் குறித்த புள்ளி விவரங்கள் நம்பகத் தன்மை அற்றது.

6. நாட்டு வருமானத்தில், வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல், சுரங்கங்கள் ஆகியவற்றைக் குறிப்பது முதன்மைத் துறை. 

7. 2009-ல் இந்தியாவில் நாட்டு வருமான விழுக்காடு 7.4%.

8. பழங்கால அரசுகள் காவல் அரசுகள் ஆக செயல்பட்டன.

9. அரசின் முக்கிய அலகுகளாகச் செயல்படுவது நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம்.

0. இந்தியாவின் நாட்டு வருமானம் கணக்கிடப்படும் முறைகள் உற்பத்தி முறை, வருமான முறை, செலவின் முறை. 
February 01, 2020

நாட்டு வருமானம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

நாட்டு வருமானம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. ஜப்பானின் தலா வருமானம் 47,490 டாலர்.

2. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலா வருமானம் 46,040 டாலர்.

3. வங்காள தேசத்தின் தலா வருமானம் 470 டாலர்.

4. இந்தியாவில் பொதுவாக உற்பத்தி முறை மற்றும் வருமான முறையில்
நாட்டுவருமானம் கணக்கிடப்படுகிறது

5. நாட்டு வருமானத்தை குறைத்து மதிப்பிட வழி வகை செய்வது கருப்பு பணம்.

6. நாட்டு வருமானத்தில்; செய்தி, தொலைத் தொடர்பினைக் குறிப்பது பணிகள் துறை.

7. நாட்டு வருமானத்தில் இரண்டாம் துறை குறிப்பது உற்பத்தி, மின்சாரம்.

8. பொருளாதார வளர்ச்சியில் பழங்கால அரசு பின்பற்றியது தலையிடாக் கொள்கை.

9. உற்பத்திக் காரணிகள் என்பது நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழிலமைப்பைக் குறிக்கும்.

10. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு =  நிகர நாட்டு உற்பத்தி.
February 01, 2020

நாட்டு வருமானம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

நாட்டு வருமானம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மான செலவு.

2. இந்திய நாட்டு வருமானத்தில் இரண்டாம் துறைகளின் பங்களிப்பு 25.8%.

3. பணிகள் துறையின் பங்களிப்பு நாட்டு வருமானத்தில் 58.4%. 

4. கருப்புப் பணம் என்பது சட்டத்திற்கு புறம்பான வழிகளில் ஈட்டப்பட்ட வருவாய் ஆகும்.

5. அரசு பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது தலையிடாக் கொள்கை ஆகும்.

6. பாகிஸ்தானின் தலா வருமானம் 870 அமெரிக்க டாலர்.

7. உற்பத்தியில் மூலதனப் பொருட்களின் பழுதை சரி செய்ய மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தேய்மானச் செலவு.

8. நாட்டு வருமானத்தை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு தலா வருமானம்.

9. மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கப் பயன்படும் கருவி தலா வருமானம்.

10. நாட்டு வருமானம் + மக்கள் தொகை = தலா வருமானம்.
February 01, 2020

நாட்டு வருமானம் வினா விடை பகுதி 1

நாட்டு வருமானம்

வினா விடை பகுதி 1

1. நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர் --------------
அ) உண்மை வருமானம்
ஆ) பண வருமானம்
இ) மொத்த நாட்டு உற்பத்தி
ஈ) பெயரளவு வருமானம்
விடை: இ) மொத்த நாட்டு உற்பத்தி

2. நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள் ------------
அ) 2 முறைகள்
ஆ) 3 முறைகள்
இ) 4 முறைகள்
ஈ) 5 முறைகள்
விடை: ஆ) 3 முறைகள்

3. நிகர நாட்டு உற்பத்தி என்பது.
அ) மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
ஆ) நிகர நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
இ) தலா வருமானம் (-) தேய்மானம்
ஈ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
விடை: அ) மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

4. இந்தியாவின் தலா வருமானம் -------------
அ) 220 டாலர்கள்
ஆ) 950 டாலர்கள்
இ) 2930 டாலர்கள்
ஈ) 600 டாலர்கள்
விடை: ஆ) 950 டாலர்கள்

5. முதன்மைத்துறை என்பது ---------------
அ) வணிகம்
ஆ) கட்டமைப்புத் துறை
இ) வேளாண்மைத் துறை
 ஈ) தொலைத்தொட்புத்துறை
விடை: இ) வேளாண்மைத் துறை

6. நாட்டு வருமானக் கணக்கீடு என்பது --------------
அ) மொத்த பணமதிப்பு 
ஆ) உணவு தானிய உற்பத்தியின் மொத்த மதிப்பு
இ) தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
விடை: ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
 

7. செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது ----------------
அ) உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஆ) வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இ) செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
ஈ) சேமிப்பினன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
விடை: இ) செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

8. வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது -------------
அ) செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
ஆ) வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
இ) சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
ஈ) முதலீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
விடை: ஆ) வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது
 

9. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது -------------------
அ) மக்களின் செல்வநிலையை
ஆ) மக்களின் ஏழ்மைநிலையை
இ) மக்களின் வாழ்க்கைத் தரத்தை
ஈ) மக்களின் கல்வி நிலையை
விடை: இ) மக்களின் வாழ்க்கைத் தரத்தை
 

10. இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு -----------
அ) 15.8 %
ஆ) 25.8%
இ) 58.4%
ஈ) 12.8%
விடை: அ) 15.8%

Saturday, January 18, 2020

January 18, 2020

பொருளாதாரம் - வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 2

பொருளாதாரம்

வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 2


1. ‘டாக்ஸோ’ என்ற லத்தீன் வார்த்தைக்கு விகிதம் என்பது பொருள்.

2. வரி நாகரிகத்தின் கட்டடத் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.

3. சுமேரியா ஒரு ஒழுங்கமைகப்பட்ட முதல் சமூகமாகும்.

4. வரி செலுத்துவது நமது அடிப்படைக் கடமை ஆகும்.

5. சேவை வரி தொடர்பான நிதிச்சட்டம் 1994 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

6. குத்தகை, இணையம், போக்குவரத்துப் போன்ற சேவைகள் சேவை வரியில் உட்படுத்தப்படுகின்றன.

7. தனிநபர் வருமானத்தின் மீதி நேரடியாக விதிக்கப்படாததால் மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.

8. TDS -இன் விரிவாக்கம் Tax Deduction at Source.

9. வரி என்பது அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் கட்டணத்தீர்வை ஆகும்.

10. அரசால் பரிந்துரைக்கப்பட்ட வரிவிலக்கு வரம்புக்கு மேல் வருமானமுள்ளவர்கள் செலுத்துவது வருமான வரியாகும்.
January 18, 2020

பொருளாதாரம் - வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 1

பொருளாதாரம்

வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 1

சரியான விடையை எழுதுக

1. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் செலுத்தும் வரி
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) பரிசு வரி
ஈ) சுங்க வரி
விடை: ஆ) நிறுவன வரி

2. ஒருவர் அரசாங்கத்திற்கு நேரடியாகச் செலுத்தும் வரி
அ) மறைமுக வரி
ஆ) விற்பனை வரி
இ) நேர்முக வரி
ஈ) சேவைவரி
விடை: இ) நேர்முக வரி

3. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி?
அ) சேவை வரி
ஆ) வருமான வரி
இ) நிறுவன வரி
ஈ) பரிசு வரி
விடை: அ) சேவை வரி

4. பின்வருவனவற்றில் எது நேரடி வரி
அ) பரிசு வரி
ஆ) சுங்க வரி
இ) சேவை வரி
ஈ)விற்பனை வரி
விடை: அ) பரிசு வரி

5. உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி
அ) விற்பனை வரி
ஆ) சேவை வரி
இ) சுங்க வரி
ஈ) கலால் வரி
விடை: ஈ) கலால் வரி

6. தமிழகத்தின் ------------ கல்வெட்டிலும் வரி விதிப்பு பற்றிய குறிப்புகளை காண முடிகிறது.
அ) அரச்சலூர் ஆ) குன்னத்தூர் இ) உத்திரமேரூர்
விடை: இ) உத்திரமேரூர்

7. டாக்ஸோ என்பது -------------- மொழி வார்த்தை ஆகும்
அ) கிரேக்க
ஆ) லத்தீன்
இ) ஆங்கில
விடை: ஆ) லத்தீன்

8. இறந்தவரின் சொத்தின் மீது செலுத்தும் வரி ----------- வரி ஆகும்
அ) எக்ஸ்பயர்
ஆ) பெரிஸ்
இ) எஸ்டேட்
விடை: இ) எஸ்டேட்

9. விற்பனை வரி தற்போது -------------- என அழைக்கப்படுகிறது
அ) மதிப்புக் கூட்டு வரி
ஆ) மைய மதிப்புக் கூட்டு வரி
இ) ஆயத்தீர்வை
விடை: அ) மதிப்புக் கூட்டு வரி

10. இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி -----------------
அ) கலால் வரி
ஆ) சுங்க வரி
இ) சேவை வரி
விடை: ஆ) சுங்க வரி
January 18, 2020

பொருளாதாரம் உற்பத்திக்காரணிகள் பகுதி 3

பொருளாதாரம்

உற்பத்திக்காரணிகள் பகுதி 3

1. -------------- பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்
அ) ஆடம் ஸ்மித் 
ஆ) ராபின்ஸ் 
இ) ரூஸோ
விடை: அ) ஆடம் ஸ்மித்
 
2. வளர்ந்த நாடுகள் பண்டங்களையும் பணிகளையும் ----------------- அளவில் உற்பத்தி செய்கின்றன
அ) அதிக 
ஆ) மிதமான 
இ) குறைந்த
விடை: அ) அதிக
 
3. ‘நாடுகளின் செல்வம்’ என்ற நூலை எழுதியவர்
அ) ஜான் ஸ்மித் 
ஆ) ராபின்ஸ் 
இ) ஆடம் ஸ்மித்
விடை: இ) ஆடம் ஸ்மித்
 
4. மூலதனம் என்பது ---------- ஆகும்
அ) செல்வம் 
ஆ) நிலம் 
இ) வருமானம்
விடை: அ) செல்வம்
 
5. பண மாற்றுப் பத்திரங்களாக உள்ள முதலீடுகள் --------------- எனப்படும்
அ) பருமப்பொருள் மூலதனம் 
ஆ) பண மூலதனம் 
இ) மனித மூலதனம்
விடை: ஆ) பண மூலதனம்
 
6. ------------------- என்பது நிலம். உழைப்பு மற்றும் மூலதனத்தைப் பொருத்தது.
அ) வளங்கள் 
ஆ) சேமிப்பு 
இ) உற்பத்தி
விடை: இ) உற்பத்தி
 
7. உலோகத் தொழில் ------------- துறையைச் சாhந்தது
அ) முதன்மை 
ஆ) இரண்டாம் 
இ) சார்பு
விடை: ஆ) இரண்டாம்

8. பொருளியல் ஒரு சமூக அறிவியல்.
 
9. பண்டங்கள், பணிகளின் உற்பத்தி அளவைப் பொறுத்தே ஒரு நாட்டின் நாட்டு வருமானம் அமையும்.
 
10. இயந்திரங்கள், கருவிகள் மற்றும் இடைப்பொருள்கள் மூலதனத்தில் அடங்கும்.
January 18, 2020

பொருளாதாரம் - உற்பத்திக்காரணிகள் பகுதி 2

பொருளாதாரம்

உற்பத்திக்காரணிகள் பகுதி 2


1. உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும்.

2. பயன்பாடு என்பது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் சக்தி.

3. நிலமும் மற்றும் உழைப்பும் உண்மைக் காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

4. நிலம் என்பது இயற்கையின் கொடையாகும்.

5. மூலதனமும், தொழில் அமைப்பும் பெறப்பட்ட காரணிகள் ஆகும்.

6. வேலைப்பகுப்பு முறை என்பதை அறிமுகப்படுத்தியவர் ஆடம் ஸ்மித்.

7. தொழில் முனைவோர் என்பவர் சமுதாய மாற்றம் காணும் முகவர்.

8. இரண்டாம் துறை உற்பத்தித் துறை என்றும் அழைக்கப்படுகிறது.

9. சமுதாயத்தின் பொருளாதார சார்புத் துறை என்பது சேவை துறை ஆகும்.

10. “நாடுகளின் செல்வமும் அவற்றின் இயல்புகளும் ஓர் ஆய்வு” என்ற நூலை இயற்றியவர் ஆடம் ஸ்மித்.
January 18, 2020

பொருளாதாரம் - உற்பத்திக்காரணிகள் வினா விடை பகுதி 1

MagmeGuru

பொருளாதாரம்

உற்பத்திக்காரணிகள் பகுதி 1

1. பொருளாதாரம் என்பது ------------ அறிவியல் ஆகும்
அ) சமூக
ஆ) அரசியல்
இ) நீதி
விடை: அ) சமூக

2. உற்பத்திக் காரணிகள் --------- வகைப்படும்
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை: ஆ) நான்கு

3. உழைப்பை --------------- இருந்து பிரிக்க முடியாது
அ) உழைப்பாளரிடம்
ஆ) லாபம்
இ) மூலதனம்
விடை: இ) மூலதனம்

4. பொதுவாக மூலதனம் என்பது ---------
அ) கட்டடங்கள்
ஆ) இயந்திரங்கள்
இ) பணம்
விடை: இ) பணம்

5. தொழில் முனைவோர் எப்போதும் செய்வது ------------------
அ) புத்தாக்கப்பணி
ஆ)மரபு
இ) இடர்ப்பாடுகள்
விடை: அ) புத்தாக்கப்பணி

6. முதலுக்கு அளிக்கப்படும் ஊதியம் --------------------
அ) வாரம்
ஆ)கூலி
இ) வட்டி
விடை: இ) வட்டி

7. கல்வியில் செய்யப்படும் முதலீடு ------ மூலதனம் எனப்படும்
அ) பருமப்பொருள்
ஆ) மனித
இ) பண
விடை: ஆ) மனித

8. உற்பத்திக் காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி ------------ ஆகும்
அ) வாரம்
ஆ) கூலி
இ) இலாபம்
விடை: ஆ) கூலி

9. அமெரிக்காவில் --------------- க்கு அதிகமான உழைப்பாளர்கள் சார்புத்துறையைச் சேர்ந்தவர்கள்
அ) 60%
ஆ) 40%
இ) 80%
விடை: இ) 80%

10. வேளாண்மை -------------- துறையைச் சார்ந்தது.
அ) முதன்மை
ஆ) இரண்டாம்
இ) சார்பு
விடை: அ) முதன்மை