LATEST

Saturday, January 18, 2020

பொருளாதாரம் - வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 1

பொருளாதாரம்

வரியும் அதன் முக்கியத்துவமும் பகுதி 1

சரியான விடையை எழுதுக

1. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் செலுத்தும் வரி
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) பரிசு வரி
ஈ) சுங்க வரி
விடை: ஆ) நிறுவன வரி

2. ஒருவர் அரசாங்கத்திற்கு நேரடியாகச் செலுத்தும் வரி
அ) மறைமுக வரி
ஆ) விற்பனை வரி
இ) நேர்முக வரி
ஈ) சேவைவரி
விடை: இ) நேர்முக வரி

3. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி?
அ) சேவை வரி
ஆ) வருமான வரி
இ) நிறுவன வரி
ஈ) பரிசு வரி
விடை: அ) சேவை வரி

4. பின்வருவனவற்றில் எது நேரடி வரி
அ) பரிசு வரி
ஆ) சுங்க வரி
இ) சேவை வரி
ஈ)விற்பனை வரி
விடை: அ) பரிசு வரி

5. உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி
அ) விற்பனை வரி
ஆ) சேவை வரி
இ) சுங்க வரி
ஈ) கலால் வரி
விடை: ஈ) கலால் வரி

6. தமிழகத்தின் ------------ கல்வெட்டிலும் வரி விதிப்பு பற்றிய குறிப்புகளை காண முடிகிறது.
அ) அரச்சலூர் ஆ) குன்னத்தூர் இ) உத்திரமேரூர்
விடை: இ) உத்திரமேரூர்

7. டாக்ஸோ என்பது -------------- மொழி வார்த்தை ஆகும்
அ) கிரேக்க
ஆ) லத்தீன்
இ) ஆங்கில
விடை: ஆ) லத்தீன்

8. இறந்தவரின் சொத்தின் மீது செலுத்தும் வரி ----------- வரி ஆகும்
அ) எக்ஸ்பயர்
ஆ) பெரிஸ்
இ) எஸ்டேட்
விடை: இ) எஸ்டேட்

9. விற்பனை வரி தற்போது -------------- என அழைக்கப்படுகிறது
அ) மதிப்புக் கூட்டு வரி
ஆ) மைய மதிப்புக் கூட்டு வரி
இ) ஆயத்தீர்வை
விடை: அ) மதிப்புக் கூட்டு வரி

10. இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி -----------------
அ) கலால் வரி
ஆ) சுங்க வரி
இ) சேவை வரி
விடை: ஆ) சுங்க வரி

No comments:

Post a Comment