பொருளாதாரம்
உற்பத்திக்காரணிகள் பகுதி 2
1. உற்பத்தி என்பது பயன்பாட்டை உருவாக்குவதாகும்.
2. பயன்பாடு என்பது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் சக்தி.
3. நிலமும் மற்றும் உழைப்பும் உண்மைக் காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
4. நிலம் என்பது இயற்கையின் கொடையாகும்.
5. மூலதனமும், தொழில் அமைப்பும் பெறப்பட்ட காரணிகள் ஆகும்.
6. வேலைப்பகுப்பு முறை என்பதை அறிமுகப்படுத்தியவர் ஆடம் ஸ்மித்.
7. தொழில் முனைவோர் என்பவர் சமுதாய மாற்றம் காணும் முகவர்.
8. இரண்டாம் துறை உற்பத்தித் துறை என்றும் அழைக்கப்படுகிறது.
9. சமுதாயத்தின் பொருளாதார சார்புத் துறை என்பது சேவை துறை ஆகும்.
10. “நாடுகளின் செல்வமும் அவற்றின் இயல்புகளும் ஓர் ஆய்வு” என்ற நூலை இயற்றியவர் ஆடம் ஸ்மித்.
No comments:
Post a Comment