LATEST

Friday, December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -06. திண்டுக்கல்

Magme Guru

திண்டுக்கல் வரலாறு

தலைநகரம் : திண்டுக்கல்
பரப்பு : 6,036 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,159,775 (2011)
எழுத்தறிவு : 1,481,834 (76.26%)
ஆண்கள் : 1,080,938
பெண்கள் : 1,078,837
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 358

வரலாறு :

• திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது.
• இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும் திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.
• குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது.
• நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது.
• இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம்.
• பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான்.
• மலை மீது பாண்டியர் காலத்துக் கட்டிடக் கலைச் சிறப்புக் கொண்ட ஒரு கோயில் இருக்கிறது.
• 1605 இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலைக்குத் தென்கிழக்கில் மேற்கண்ட கோட்டையை கட்டினார்.
• திப்புசுல்தான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, திண்டுக்கல் கோட்டை விரிவாக்கப்பட்டு, பழைய வாயில்கள் மாற்றப் பட்டு புதிய வாயில்கள் அமைக்கப்பட்டன.
• 1798இல் ஆங்கிலேயர், கோட்டையில் மேலும் சில கட்டிடங்களைக் கட்டினர்.
• 1947 வரையில் இக்கோட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்தது.
• சுமார் 157 ஆண்டுகள் அவர்கள் வசமிருந்தது.
• மதுரை மாவட்டத்தில், முதன் முதலாக ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த பகுதி திண்டுக்கல்தான்.

எல்லைகள் :
• திண்டுக்கல் மாவட்டம் வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்களையும் தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்களையும், மேற்கில் கோயமுத்தூர் மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் திண்டுக்கல் ஆகும்.

வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-4 (திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்);

ஊராட்சி ஒன்றியங்கள்-14
(திண்டுக்கல், சாணார் பட்டி, நத்தம், ஆத்தூர்(இருப்பு), செம்பட்டி, ரெட்டியார்சத்திரம்,நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, பழனி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி, கொடைக்கானல்);

பேரூராட்சி-24 
(அம்மைநாயக்கனுர், அய்யம்பாளையம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, அகரம், பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு, சித்தயன்கோட்டை, ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சேவுகம்பட்டி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பாலசமுத்திரம் பாளையம், நெய்க்காரப்பட்டி, கீரனுர், வடமதுரை, அய்யலூர், எரியோடு, பண்ணைக்காடு);

கிராமங்கள்- 358.

சட்டசபைத் தொகுதிகள் :8
பழனி, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதி மட்டும்).

பாரளுமன்றத் தொகுதிகள் :3
திண்டுக்கல், பழனி, பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப்பகுதி மட்டும்).

கல்வி :

பள்ளிகள்: துவக்கநிலை-1,133; நடுநிலை-216; உயர்நிலை-55; மேனிலை-36; கல்லூரிகள்-9; (அரசு மற்றும் தனியார்) பொறியியல் கல்லூரிகள்-2; தொழில்பயிற்சி நிறுவனங்கள்-3; தொழிற்நுட்பக் கல்லூரிகள்-4; பல்கலைக் கழகம்-2; (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம்).

திண்டுக்கல் நகரம் :
• திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராய் இது விளங்குகிறது.
• இருபெரும் தேசிய
நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன.
கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இவ்வூரருகே சந்திக்கின்றன.
• இங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் செல்லுகின்றன.
• திருச்சி-மதுரை, திண்டுக்கல்-பாலக்காடு, திண்டுக்கல்-கோயம்புத்தூர் இரயில் பாதைகள் சந்திக்கும் இடமாக திண்டுக்கல் விளங்குகிறது.


இவ்வூரிலுள்ள மலை ஒரே கல்லால் ஆனது. திண்டு போல் அரைவட்ட வடிவமானது. இந்த ஊர் இங்குள்ள மலையால் இப்பெயர் பெற்றது. தேனி, பொள்ளாச்சி, மணப்பாறை போன்ற வணிக நகரங்களுக்கு மத்தியில் இருப்பதால், திண்டுக்கல் பெரிய வணிகச்சந்தையாக விளங்குகிறது. வேடச்சந்தூர்ப் புகையிலை, சின்னாளப்பட்டி நார்பட்டுத் துணிகள், கோடை மலையின் சில விளைபொருட்கள் திண்டுக்கல்லில் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து கடலைப் புண்ணாக்கு ஏற்றுமதியாகிறது.

ஆந்திராவிலிருந்து வரும் சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்துக்கும் திண்டுக்கல்லே தலைச் சிறந்த விற்பனையிடம். சிறுமலை வாழைப்பழமும் மிகுதி. தெற்கேயுள்ள பல ஊர்களுக்கும் இங்கிருந்துதான் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

1866 இல் திண்டுக்கல் நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் பெரும்தொகையினராக இங்கு வாழ்கின்றனர். இரண்டுக் கல்லூரிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், தொழிற்பள்ளி இவற்றுடன் காந்திக்கிராமத்தில் உள்ள கல்வி நிலையங்களும் கல்விப் பணியாற்றி வருகின்றன.

திண்டுக்கல்லில் சிவன் கோயில்களும், பெருமாள் கோவில்களும் உள்ளன. இராமலிங்க சுவாமி கோயிலும் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருவிழாவில் தீச்சட்டி ஏந்துவதும், சுற்றுவதும் சிறப்பாக நடைபெறும். 1729 இல் கட்டப்பட்ட 'சர்ச் ஆப் அவர் லேடி ஆப் டோலர்ஸ்' மற்றும் 1872 இல் கட்டப்பட்ட 'புனித ஜோசப் சர்ச்' ஆகியன குறிப்பிடத்தக்க கிறிஸ்துவ தேவாலயங்கள். கரூர் சாலையில் பெஸ்கி பாதிரியார் பெயரால் இயேசு சபையாரின் கல்வி நிலையம் உள்ளது.

தொழில் வளம் நிறைந்த திண்டுக்கல்லில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுருட்டுச் சுற்றுதல் சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. கேரளத்திற்குப் பெரிய அளவில் வாசனைப் புகையிலை ஏற்றுமதியாகிறது. இங்குள்ள புகையிலைத் தொழிற் சாலைகளில் குறிப்பிடத்தக்கது ஸ்பென்சர் கம்பெனி.

நூல் ஆலைகள், பருத்திக் கொட்டையை நீக்கிப் பஞ்சு எடுக்கும் ஆலைகள், கடலைஎண்ணெய் ஆலைகள், தோல் பதனிடுதல், தோல் செருப்புகள் தயாரித்தல் முதலியன முக்கியப் பெரும் தொழில்களாக நடைபெறுகின்றன. ஜரிகை வியாபாரத்திற்கும் திண்டுக்கல் பிரசித்திப் பெற்றது.

பழங்குடிகள் :
திண்டுக்கல் மாவட்டத்தில் பலநூ ற்றாண்டுகளாக பழங்குடியினர் பலரும் வாழ்ந் துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தகுந்த பிரிவினராக பளியர், முதுவர், புலையர் முதலியோர் காணப்படுகின்றனர்.

மீன்வளம் :
திண்டுக்கல் மாவட்டத்தில இருக்கும் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களிலும் மீன்வளம் சிறந்து காணப்படுகிறது. அநேக ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், குளிர் நீரோடைகள் இம்மாவட்டடத்தில் உள்ளன. இவற்றில் மிக வேகமாக வளரக் கூடிய மீன் இனங்களான காட்லா, ரோடு, மிர்கால் மற்றும் சாதா கொண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மீன்வளப் பணிகளுக்காக தேர்ந்தெடுத் திருக்கும் நீர்த்தேக்கங்கள் வரதமாநதி அணை, பெரிய கோம்பை அணை, பாலாறு,
புரந்தலாறு அணை முதலியனவாகும்.

பாலாறு-புரந்தலாறு அணையில் ரூ.13.2 இலட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மீன் பண்ணையில் 2 சிறிய மீன் குளங்களும், 8 மீன் குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 12 நர்சரி குளங்களும் கட்டப்பட்டுள்ளன. பழனியில் மீனவர்கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் துறை ஏரிகளில் மீன்பிடிப் பதற்கு பங்கு முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வேளாண்மை :
• வைகை ஆறு, முல்லையாறு ஆகிய பெரிய ஆறுகளும், மணலாறு, இரவங்கல் ஆறு, கலிக்க வையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக் குடியாறு பெருந்தலாறு, குதிரையாறு, கூலிளங்காறு, முத்துக் கோம்மையாறு, வராகநதி, பாம்பாறு ஆகிய ஆறுகளும் திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மையில் வளம் செழிக்க உதவுகின்றன.
• வைகை அணையும், பெரியாறு அணையும் இம்மாவட்ட வேளாண்மை பாசனத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 2,74,707 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகும்.
• நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, சிறுதிணைகள், நிலக்கடலை, பூக்கள், ஆமணக்கு, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, புகையிலை, கரும்பு முதலியன விளைவிக்கப்படுகின்றன.
• கரும்பு உற்பத்தி பழனி வட்டத்தில் அதிகமாய் நடைபெறுகிறது.
• கொடைக்கானல் மலையில் பல வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
• கொடைக்கானல்,நிலக்கோட்டை, திண்டுக்கல் வட்டங்களில் பெருமளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.
• வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவையும் இம்மாவட்டத்தில் அதிகமாய் விளை கின்றன.
• வெற்றிலை பயிரிடுவதில் வத்தலக்குண்டு இம்மாவட்டத்தில் முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது.
• தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மலர்களில் பெருமளவு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தே கிடைக்கின்றன.
• மலர் உற்பத்தியில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 1757 ஹெக்டேரில் மலர்களை இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.
• உற்பத்தியாகும் பூ வகைகளில் மல்லிகைப்பூ முதலிடம் வகிக்கிறது.
• கொடைரோடு, அம்பாத்துறை ஆகியவை மலர் உற்பத்தியில் குறிபிடத்தக்க இடங்கள். நாள்தோறும் ஆயிரக்கணகான கூடைகளில் இந்தியாவெங்கும் பூக்கள் இரயில், விமானம் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன.
• பெருமளவு மலர்கள் உற்பத்தியால் இம்மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என வழங்கப்படுகிறது.
• சில இடங்களில் கருங்கண்ணிப் பஞ்சும், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளில் கம்போடியாப் பஞ்சும் விளைகின்றன.
• பழனி மலைத்தொடரில் பழனி, பட்டிவீரன்பட்டி, சிறுமலை போன்ற பகுதிகளில் காப்பி பெருமளவில் விளைகிறது. இங்கு தேயிலையும் ஓரளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
• பட்டி வீரன்பட்டியிலிருந்து திராட்சைப் பழங்களும் பதியன்களும் ஏராளமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப் படுகின்றன.
• மேலும் பன்னீர் திராட்சையும் பயிரிடப்பட்டு, பானைகளில்அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
• கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிறு அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது.
• இம்மாவட்டத்தில் பெருமளவில் வாழைத் தோட்டங்கள் உள்ளன.
• இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வாழைப்பழங்கள் அனுப்பப்படுகின்றன.
• இம்மாவட்டத்தில் நெல் சாகுபடியாகும் பரப்பு 33,200 ஹெக்டேர் ஆகும்.
• அதில் அமோக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான ஐ.ஆர்.20, கோ.43, வைகை ஐஐடி 4786, பொன்னி, ஆடுதுறை 36 முதலியவை 20,810 ஹெக்டேரில் சாகுபடியாகின்றன.
• சோளம் இயல்பாக நன்செயில் 12,912 ஹெக்டேரிலும், மானாவாரியில் 63,062 ஹெக்டேரிலும் சாகுபடியாகிறது. கரும்பு சாகுபடி செய்யும் இயல்பான பரப்பு நன்செயில் 8922 ஹெக்டேர், மானாவாரியில் 7740 ஹெக்டேர்.
• சுமார் 37,700 ஹெக்டேரில் பயிறு வகை உற்பத்தியாகிறது.
• எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 47,35/ ஹெக்டேரிலும், சூரியகாந்தி 8000 ஹெக்டேரிலும், எள் 2500 ஹெக்டேரிலும், ஆமணக்கு 500 ஹெக் டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன.
• வேளாண்மைக் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களால் பலவித வேளாண் கருவிகள் செய்யப்படுகின்றன.
• குறிப்பாக பலவிதப் பெயர்களில் கலப்பைகள் இம்மாவட்டத்தில செய்யப்படுகின்றன.
• தோட்டக்கலைத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பழமரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழில் வளர்ச்சி:
தொழில் :
• திண்டுக்கல் மாவட்டத்தில் 3592 சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன.
• 52 தொழிற்சாலைகள் உள்ளன.
• மதுரை-திண்டுக்கல்-கரூர் அகல இரயில்பாதை திட்டம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.

பட்டுத்தொழில் :
• பட்டுப்பூச்சி வளர்ப்பு இம்மாவட்டத்தில் சுமார் 2100 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெறுகிறது. திண்டுக்கல், பழனியில் அரசுபட்டுக்கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன.
• இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், வத்தலகுண்டு, பழனி ஆகிய இடங்களில் பட்டுத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன.

தேனீ வளர்ப்பு :
கொடைக்கானல், மற்றும் காமனுர் என்னும் இடங்களில் செயல்படும் இரு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்.

சுற்றுலாதலங்கள் :

கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக்கேணி ஆகியன இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.


No comments:

Post a Comment