LATEST

Friday, December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -08.காஞ்சிபுரம்

Magme Guru

8. காஞ்சிபுரம் வரலாறு

தலைநகரம் : காஞ்சிபுரம்
பரப்பு : 4,483 ச.கீ.மீ
மக்கள் தொகை : 3,998,252 (2011)
எழுத்தறிவு : 3,013,382 (84.49 %)
ஆண்கள் : 2,012,958
பெண்கள் : 1,985,294
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 892


வரலாறு :
• காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று.
• காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது.
• ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. 

• சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர்.
• பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர்.
• இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன.
• பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். 

• பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று.
• சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.
• சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். 

• பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது.
• விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
• 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது.
• இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். 

• பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
• 1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
• 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. 

• பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
• ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார்.
• ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

எல்லைகள் :
• காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன.
• தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.


No comments:

Post a Comment