LATEST

Wednesday, December 18, 2019

எழுத்து இலக்கணம் பகுதி-1

https://play.google.com/store/apps/details?id=com.edu.magmemsb&hl=en

எழுத்து இலக்கணம் பகுதி-1

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"
                                                                              —தொல்காப்பியம்
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"
                                                          —நன்னூல் 
எழுத்து இலக்கணம்
•    எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும்.
•    எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது.
•    எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை, முதலெழுத்துகள், சார்பெழுத்துகள்.
முதலெழுத்துகள்
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
உயிரெழுத்துகள்
  • உயிரெழுத்துகள் 12 அவை: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
  • குறில் : குறுகிய ஓசை உடையவை. அவை : அ, இ, உ, எ, ஒ
  • நெடில்: நெடிய ஓசை உடையவை . அவை : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள்
  • மெய்யெழுத்துகள் 18 அவை: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
  • மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:
  • வல்லினம் : க், ச், ட், த், ப், ற்
  • மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
  • இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
சார்பெழுத்துகள்
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவை பத்து வகைப்படும்.
1. உயிரெழுத்து,
2. ஆய்த எழுத்து,
3. உயிரளபெடை,
4. ஒற்றளபெடை,
5. குற்றியலுகரம்,
6. குற்றியலிகரம்,
7. ஐகாரக்குறுக்கம்,
8. ஒளகாரக்குறுக்கம்,
9. மகரக்குறுக்கம்,
10. ஆய்தக்குறுக்கம்.
1. உயிர்மெய் எழுத்து:
•    ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
2. ஆய்த எழுத்து:
•    ஆய்த எழுத்து தனக்கு முன் உயிர் குறில் எழுத்தையும், தனக்கு பின் வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
•    ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும்.
•    இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும்.
•    இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.
3. உயிரளபெடை:
•    உயிர் +அளபெடை ₌ உயிரளபெடை. உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை என்று பெயர்.
•    மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
"இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ- நன்னூல்

உயிரளபெடையின் வகைகள்:
i. செய்யுளிசை அளபெடை
ii. இன்னிசை அளபெடை
iii. சொல்லிசை அளபெடை
i. செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை
•    செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு அல்லது இசையைக் கூட்டச் செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.
உதாரணம்
•    கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
•    இதில் அ எனும் எழுத்து இசையை நிறைக்க வந்துள்ளது கடாக் களிறு என எழுதினால் செப்பலோசை குன்றும்.
•    கடா - நிரை - இது சீர் ஆகாது.
•    கடாஅ என இசை கூட்டும்போது புளிமா என்னும் வாய்பாட்டுச் சீராக அமைந்து மா முன் நிரை என்னும் வெண்டளையாகி வெண்பாவுக்கு உரிய செப்பலோசையாகிவிடுகிறது.
ii. இன்னிசை அளபெடை
•    செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
•    செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது.
உதாரணம்
•    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
•    இந்த திருக்குறளை,
கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.
என்று எழுதினாலும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படியிருக்க இன்னிசைக்காக அளபெடை கூட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
iii. சொல்லிசை அளபெடை
•    செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
•    எ.கா: குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு.
•    இக்குறட்பாவில் தழி என்றிருப்பினும் செய்யுளின் ஒசை குறைவதில்லை ‘தழீ’ என்பது தழுவுதல் எனப் பொருள் தரும்.
•    பெயர்ச்சொல்லாகும் அச்சொல் ‘தழிஇ’ என அளபெடுத்தால் ‘தழுவி’ என வினையெச்சச் சொல்லாயிற்று.
குறிப்பு: பெரும்பாலும் செய்யுளிசை (அ) இசைநிறை அளபெடை எனில் ‘அ’வும், இன்னிசை அளபெடையெனில் ‘உ’வும், சொல்லிசை அளபெடை யெனில் ‘இ’யும் அளபெடுக்கும்.
4. ஒற்றளபெடை: (ஓசை குறையும் போது ஒற்றெழுத்துக்கள் அளபெடுப்பது)
•    ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
•    ஒற்றளபெடையில், மெல்லின எழுத்துக்கள் ஆறும், இடையின எழுத்துக்கள் நாலும் (ர், ழ் தவிர), ஆய்த எழுத்து ஒன்று என பதினோறு எழுத்துக்கள் அளபெடுக்கும்
•    வல்லின எழுத்துக்கள் ஆறும் (க், ச், ட், த், ப், ற்) மற்றும் இடையின எழுத்துக்களில் இரண்டும் (ர், ழ்) என எட்டு(8) எழுத்துக்கள் ஒற்றளபெடையில் அளபெடுக்காது.
•    ஒற்றளபெடை –1 மாத்திரை அளவைப் பெறும்.
•    செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும், ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும் ஒற்றளபெடை ஆகும்.
"ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ -  நன்னூல்
•    எ.கா:- எங்ங்னம்

No comments:

Post a Comment