LATEST

Wednesday, December 4, 2019

கற்காலப் பிரிவுகள்


Magme-Guru-TNPSC-English


1. கற்காலப் பிரிவுகள்

பழைய கற்காலம்
• பழைய கற்காலம் கற்கருவிகளின் உருவாக்கத்தோடு தொடர்புள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம்.
• இது மனிதர் இப்புவியில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்குகிறது (ஏறத்தாழ மனித வரலாற்றின் 99%). இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக்காலம் தொடங்குகிறது. இது ஹோமோ ஹபிலிசுகள் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிமு 10000 ஆண்டளவில் வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது வரை நீடித்தது.
• பழையகற்காலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கியது.
• இக் காலத்தில் மனிதனுடைய கூர்ப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்திய பல பெரிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன.
• இடைக்கற்காலத்தின் தொடக்கத்துடன் பழையகற்காலம் முடிவுற்றது.
• குலக்குழுக்கள் எனப்படும் சிறு குழுக்களாக இயங்கிய பழையகற்கால மனிதர் தமது உணவை தாவரங்களைச் சேகரிப்பதன் மூலமும் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும் பெற்றனர். பழையகற்காலத்தில் மரம் எலும்பு முதலியவற்றாலான கருவிகளும் பயன்பட்டுவந்த போதிலும் அக்காலத்தின் சிறப்பியல்பாக உள்ளது கற்கருவிகளே.
• இவற்றுடன் தோல் தாவர இழைகள் போன்றனவும் பயன்பட்டன ஆயினும் அவை விரைவில் அழிந்துவிடக்கூடியன ஆதலால் அவை போதிய அளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று கிடைக்கவில்லை.
• மனித இனம் ஹோமோ ஹபிலிஸ் போன்ற ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த பழைய இனங்களில் இருந்து படிப்படியாகக் கூர்ப்பு அடைந்து நடத்தைகளிலும் உடலமைப்பிலும் தற்கால மனிதனாக மாறியது பழையகற்காலத்திலேயே.
• பழையகற்காலத்தில் இறுதிப் பகுதியில் சிறப்பாக இடைப் பழையகற்காலத்திலும் மேல் பழையகற்காலத்திலும் மனிதர்கள் தொடக்ககால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன் இறந்தோரை அடக்கம் செய்தல் சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.
கீழ் பழையகற்காலம்
• ஆப்பிரிக்காவில்இ பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான ஹோமோ ஹபிலிசுகள் உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை.
• இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும் காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர்.
• விலங்குகளை வேட்டையாடவில்லை. சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த ஹோமோ இரெக்டசு என்னும் மனித இனம் தோன்றியது. ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன்இ சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர்.
• அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர்.
• சீனாவிலுள்ள சூக்கோடியன் (Zhoukoudian) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன.
• ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது.
நடு பழையகற்காலம்
• நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300000 இருந்து 30000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும்.
• உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்துஇ மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும்.
மேல் பழையகற்காலம்
• 35000 தொடக்கம் 10000 ஆண்டுக் காலத்துக்கு முன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட அனித இனங்களில் குரோ-மக்னன்களதும் நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன.
• சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின.
• கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர்.
• இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
• 13000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன.
• பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும்இ உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும் வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது.
இடைக் கற்காலம்

அயர்லாந்தில் உள்ள கல்திட்டை
• இறுதியான உறைபனிக் கால முடிவான சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதி கடல்மட்ட உயர்வு காலநிலை மாற்றங்கள் உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை போன்றவற்றை உடையதாக இருந்தது.
• இந்த நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கில் நுண்கற்கருவிகளின் வளர்ச்சி ஏற்பட்டது.
• இவை முன்னைய பழங்கற்காலக் கற்கருவிகளிலிருந்தே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவுக்கு இக் கருவிகளும் அதோடுகூடிய வாழ்க்கை முறைகளும் அண்மைக் கிழக்குப் பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டன.
• இங்கே நுண்கற்கருவிகள் கூடிய செயற்திறன் உள்ள வகையில் வேட்டையாட வழிவகுத்ததுடன் சிக்கலான குடியிருப்புக்கள் தோன்றுவதையும் ஊக்கப்படுத்தின

புதிய கற்காலம் (Neolithic)
• மக்கள் நிரந்தரமாக வாழத் தொடங்கினார்.
• பளபளப்பான தேவைகேற்ற வடிவங்களில் கற்களை உருவாக்கினர்.
• அறிவியல் வளர்ச்சியின் முதல்படியான சக்கரம் கண்டுபிடிக்கப்படட்து.
• வேளாண்மை செய்தனர்.
• முதன் முதலில் வளர்த்த பிராணி ஆடு ஆகும்.
• பசு, எருமை, ஆடு நாய் விலங்குகளை பயனப்டுத்தினர்.
• நெருப்பை உண்டாக்கினர்.
• மற்பாண்டங்கள் செய்தனர்.
• பருத்தி, கம்பளி நூல் நூற்றனர்.
• பழங்கள், காய், மீன், பால் கறிகள் உண்டனர்.
• கடற்பயணம் மேற்கொண்டனர்.
• வேட்டையாடுதல், நடனமாடுதல், போன்ற சித்திரங்களை தீட்டினர்.
• இறந்தவர்களை மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர்.
• டால்மென்ஸ் எனப்படும் கல்லறையின் தூண்களை உருவாக்கினர்.
• தென்னிந்தியாவில் நாகார்ஜூனகொண்டா, மாஸ்கி, பிரம்மகிரி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தக்காணபீடபூமி, சேலம், கடப்பா, பெல்லாரி, அனந்தபூர், தெலுங்கானா, குஜராத், கத்தியவார் ஆகியவை புதிய கற்கால இடங்களாகும். உலோகக்காலம்
• செம்பு பயனப் டுத்தப்பட்ட காலம் செம்புக் காலம்.
• மனிதன் பயனப் டுத்திய முதல் உலோகம் செம்பு ஆகும்.
• கி.மு. 800 முதல் 150 இடையே உளள் காலம் இரும்பு காலம்.
• இரும்புகாலத்தில் கலப்பை, கத்தி போன்றவை செய்யப்பட்டது.
• உலோகக்கால மக்கள் செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களை பயனப்டுத்தினர்.
• மக்கள் பளிங்கு – கண்ணாடி ஆகியவற்றை பயனப்டுத்தினர்.
• உலோக காலம் மூன்றாக பிரிக்கப்படட்து.
1)செம்புக்காலம்
2) வெண்கலக்காலம்
3) இரும்புக்காலம்
• ஆதிச்ச நல்லூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய இடங்களில் அதிகமான உலோகக் கருவிகள் கிடைத்துளள்து.
• இறந்தவாக் ளின் நினைவாக நினைவுச் சின்னம் எழுப்பினர்.
• இறந்தவாக்ளை முதுமக்கள் தாழி எனப்படும் மற்பாண்டங்களில் இட்டு புதைத்தனர். தெய்வ வழிபாட்டு முறை காணப்பட்டது.
• ஆதிச்சநல்லூரில் இதற்கான சான்றுகள் கிடைத்துளள்து. திராவிட நாகரிகம் காலத்தால் பழைமையானது திராவிட நாகரிகம்.
• குமரில பட்டர் எழுதிய Tantravarttika என்ற நூலில் இருந்து திராவிடம் என்ற சொல்லை கார்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் முதன் முதலில ஆங்கிலத்தில் கையாண்டுள்ளார்.

1 comment: