LATEST

Wednesday, December 4, 2019

TNPSC தமிழ் ஒரு வரி வினாக்கள் 01

Magme-Guru-TNPSC-Tamil

தமிழ் ஒரு வரி வினாக்கள்
  1. பாம்பு எந்த அதிர்வுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது? தரையின்
  2. 02. பாம்பு யாருக்கு நண்பன்? விவசாயிகளுக்கு
  3. “மனைக்கு விளக்கம் மடவாள்” என்னும் நான்மணிக்கடிகைப் பாடலை பாடியவர் யார்? விளம்பிநாகனார்
  4. நான்மணிக்கடிகை எந்த நூல்களுள் ஒன்று? பதினெண்கீழ்க்கணக்கு
  5. குடும்பத்தின் விளக்கு யார்? பெண்
  6. கடிகை என்பது? அணிகலன் (நகை)
  7. நான்மணிக்கடிகை என்பதன் பொருள்? நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
  8. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பிநாகனார்
  9. எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு எது? நாட்டுப்புறப் பாட்டு
  10. குழந்தையைத் தாய் தொட்டிலிலிட்டுப் பாடும் பாட்டுக்கு பெயர் என்ன? தாலாட்டுப்பாடல்
  11. முற்காலத்தில் தாலாட்டுப்பாடல்களை எவ்வாறு கூறி வந்தார்கள்? கிராமியப் பாடல்கள்
  12. சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ______ கூட நாட்டுப்புறப் பாடல்? கானாப்பாடல்
  13. கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் என்ன பாட்டு பாடுவார்கள்? நாட்டுப்புறப்பாடல்
  14. நாட்டுப்புறப் பாடல்களைக் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? தாலாட்டுப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள்
  15. பிறந்த குழந்தைக்காக பாடும் பாடல் எது? தாலாட்டுப் பாடல்
  16. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் எது? விளையாட்டுப்பாடல்
  17. 1 களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது எது? தொழில் பாடல்
  18. திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது எது? சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்கள்
  19. சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் எது? வழிபாட்டுப்பாடல்
  20. இறந்தொருக்குப் பாடும் பாடல் எது? ஒப்பாரிப்பாடல்கள்
  21. மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் எது? கொல்கத்தா
  22. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து சாலைக்கு வந்தவர் யார்? விவேகானந்தர்
  23. பிற்காலத்தில் உலகம் புகழ் உயர்ந்த சுவாமி யார்? விவேகானந்தர்
  24. விவேகானந்தரின் மறுபெயர் என்ன? நரேந்திரநாத்
  25. மழையே மழையே வாவா என்ற இசையமுது என்ற பாடலை எழுதியவர் யார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

No comments:

Post a Comment