LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 1

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. இன்சுலின் சார்ந்த நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனிதனின் கணையத்தில்________செல்கள் சிதைவடைந்திருக்கும்
i) ஆல்பா
ii) பீட்டா 
iii) காமா
iv) டெல்டா

2. ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறப்பதற்குக் காரணமான கருவுறுதல்________ இடையே நடைபெறுகிறது.
i) இரண்டு அண்ட செல்கள் மற்றும் இரண்டு விந்து செல்கள்
ii) இரண்டு அண்ட செல்கள் மற்றும் ஒரு விந்து செல்
iii) ஒரு அண்ட செல் மற்றும் ஒரு விந்து செல் 
iv) ஒரு அண்ட செல் மற்றும் இரண்டு விந்து செல்கள்

3. ஒரே மாதிரியான இரட்டையர்கள் பற்றிய தவறான கூற்று________
i) ஒரு கருமுட்டையிலிருந்து உருவாக்கம்
ii) ஒரேபாலினமாக இருத்தல்
iii) பெரும்பாலான பண்புகளில் ஒத்திருத்தல்
iv) இரத்தவகை வேறுபடுதல்.

4. நியாண்டர்தல் மனிதன் பற்றிய சரியான கூற்று________
i) மனிதனை ஒத்த முதல் ஹோமினிட்டுகள்
ii) வேளாண்மை தொடக்கம்
iii) இறைச்சிகளை உண்ணுதல்இநிமிர்ந்த நடையும்
iv) இறந்தவர்களைப் புதைத்தல்.

5. தலைமுறைஇதலைமுறையாகப் பண்புகள் கடத்துதலைப் பாரம்பரியம் எனப்படும். மெண்டல் தன் ஆய்விற்கு பயன்படுத்திய பட்டாணிச் செடியில்இமரபுப்பண்பிற்காண காரணிகள் ________ல் காணப்படுகிறது.
i) டி.என்.ஏ 
ii) ஆர்.என்.ஏ.
iii) புரதம்
iv) சைட்டோபிளாசம்.

6. பின்வருவனவற்றுள் விரும்பத்தக்க உடல் நலக்கூறு________
i) திரு X தொற்றுநோயிலிருந்து குணமடைகிறார்.
ii) திரு Y நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டுக்கொள்கிறார்
iii) திரு Z மிகவும் மன அழுத்ததில் உள்ளார்
iv) திரு K நாள்தோறும் தன் கடமையினைச் செய்கிறார்.மகிழ்ச்சியாக உள்ளார்.

7. சமூகத்தில் சமூகமற்ற செயல்________
i) ஒருவர்இபிறந்தநாள் விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்
ii) எளிய செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார். 
iii) சூழ்நிலைகளுக்கு ஒப்பச் செயல்படுகிறார்.
iv) தன் உடல்நலமற்ற தாயை மருத்துவமனையில் சென்று கவனித்துக் கொள்கிறார்.

8. பாக்டீரியாவால் உண்டாகும் நோய்________
i) மூளைக்காய்ச்சல்
ii) வெறிநாய்க்கடி
iii) இரணஜன்னி 
iv) பெரியம்மை

9. பின் வருவனவற்றுள் காற்றின் மூலம் பரவும் நோய்________
i) காசநோய் 
ii) மூளைக்காய்ச்சல்
iii) டைபாய்டு
iv) காலாரா

10. மிகக்கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம் கிருமி________
i) ஒவேலே
ii) மலேரியே
iii) பால்சிபாரம்
iv) வைவாக்ஸ்

No comments:

Post a Comment