LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள் பகுதி 1

சமூக அறிவியல்


தென்னிந்திய அரசுகள் பகுதி 1

1. பல்லவ அரசர் --------------------- களப்பிரர்களை வீழ்த்தி, பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்
அ) சிம்ம விஷ்ணு
ஆ) முதலாம் மகேந்திர வர்மன்
இ) இரண்டாம் நரசிம்ம வர்மன்
விடை: அ) சிம்ம விஷ்ணு
 

2. முதலாம் நரசிம்ம வர்மனின் பட்டப்பெயர் -------------------------
அ) வாதாபி கொண்டான்
ஆ) ஜெயங்கொண்டான்
இ) கடாரம் கொண்டான்
விடை: அ) வாதாபி கொண்டான்

3. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் ---------------------
அ) முதலாம் இராசேந்திரன்
ஆ) கரிகால சோழன்
இ) இராஜராஜ சோழன்
விடை: ஆ) கரிகால சோழன்

4. முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பண்டிய மன்னரை தோற்கடித்ததால் ------------ என்ற பட்டப்பெயரைப் பெற்றார்
அ) மதுரை கொண்டான்
அ) முடிக்கொண்டான்
இ) கடராம் கொண்டான்
விடை: அ) மதுரை கொண்டான்

5. பாண்டிய பேரரசானது, பாண்டிய ------------ என அழைக்கப்பட்டது
அ) மண்டலம்
ஆ) வளநாடு
இ) ஊர்அவை
விடை: அ) மண்டலம்

6. ஆண்டாள் இயற்றிய நூல்
அ) தேவாரம்
ஆ) திருப்பாவை
இ) இராமாயணம்
விடை: ஆ) திருப்பாவை

7. கி.பி. 300 முதல் 600ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய 3 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள்
அ) பாரசீகர்கள்
ஆ) களப்பிரர்கள்
இ) சாதவாகனர்கள்
விடை: ஆ) களப்பிரர்கள்

8. பல்லவர்களின் தலைநகரம்
அ) உத்திரமேரூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) மாமல்லபுரம்
விடை: ஆ) காஞ்சிபுரம்

9. மாமல்லன் என்று புகழப்பட்டவர்
அ) இரண்டாம் நந்திவர்மன்
ஆ) இராஜசிம்மன்
இ) முதலாம் நரசிம்மவர்மன்
விடை: இ) முதலாம் நரசிம்மவர்மன்

10. கடைசி பல்லவ அரசர்
அ) பரமேஸ்வர வர்மன்
ஆ) இராஜசிம்மன்
இ) அபராஜித்தன்
விடை: இ) அபராஜித்தன்

No comments:

Post a Comment