LATEST

Thursday, January 9, 2020

சமூக அறிவியல் - பொருளாதாரம் ஓர் அறிமுகம் பகுதி 1

சமூக அறிவியல்

பொருளாதாரம் ஓர் அறிமுகம் பகுதி 1

1. தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை நுகர்ச்சி என்கிறோம்.

2. சந்தையில் பொருள்கள் அதிகமாகக் குவியும்போது விலை குறையும்.

3. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென்.

4. சந்தைக்குப் பொருள் வரத்து குறையும் போது விலை அதிகரிக்கிறது.

5. தானியங்களை நிலத்தில் பயிரிட்டு உழவர்கள் உற்பத்தி செய்யும் தொழில் ------ எனப்படும்
அ) பசுமை
ஆ) வளமை
இ) வேளாண்மை
ஈ) தரிசு
விடை: இ) வேளாண்மை

6. அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ---------- என்றழைக்கப்படும்
அ) சேகரிப்பு
ஆ) உற்பத்தி
இ) தகவல் தொடர்பு
ஈ) பகிர்வு
விடை: ஈ) பகிர்வு

7. பொருள்களை வாங்கி, விற்பதற்கு --------- என்று பெயர்
அ) பதுக்கல்
ஆ) தரகு
இ) வணிகம்
ஈ) ஏற்றுமதி
விடை: இ) வணிகம்

8. பொருள்களுக்கு ------- ஏற்படும் போது அரசு இறக்குமதி செய்கிறது.
அ) அதிக வரத்து
ஆ) தன்னிறைவு
இ) பற்றாக்குறை
ஈ) விலைகுறைவு
விடை: இ) பற்றாக்குறை

9. அறிவு வளர்ச்சிக்குத் தேவைப்படுவது
அ) உணவு
ஆ) வசிப்பிடம்
இ) உடுத்த உடை
ஈ) கல்வி
விடை: ஈ) கல்வி

10. தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் -----------
அ) நாட்டு வருவாய்
ஆ) வீட்டுவருவாய்
இ) தனிநபர் வருமானம்
ஈ) கூட்டு வருமானம்
விடை: இ) தனிநபர் வருமானம்

No comments:

Post a Comment