LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 6 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 6

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. மலர் தாவரத்தின் முக்கியப்பகுதி இது________ க்கு உதவுகிறது.
i) கவர்தல்
ii) தேன்சுரத்தல்
iii)மகரந்தச்சேர்க்கை
iv) பால் இனப்பெருக்கம்

2. மலரின் இன்றியமையாத பாகங்கள்
i) புல்லிவட்டம்,அல்லிவட்டம்
ii) மகரந்ததாள்வட்டம், சூலகவட்டம்
iii) புல்லிவட்டம், மகரந்ததாள்வட்டம்
iv) அல்லிவட்டம்; சூலகவட்டம்

3. ________ உற்பத்தி செய்ய அயல்மகரந்தச்சேர்க்கை உதவுகிறது.
i) புதிய வகைத்தாவரங்கள்
ii) நன்கு வளரும் தாவரங்கள்
iii)நோய் எதிர்பாற்றல் கொண்ட தாவரங்கள்
iv) மேற்கூறிய அனைத்தும்

4. காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை________ இல் நடைபெறுகிறது.
i) வாலிஸ்நேரியா
ii) புல்
iii) தென்னை
iv) ஊமத்தை

5. ________ அமைப்பு பூச்சிகள் மூலம் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெற ஏதுவாகிறது.
i) இறகுகளையுடைய மகரந்தத்தூள்இகிளைத்த சூல்முடி
ii) நிறமுள்ள அல்லிவட்டம், தேன்சுரத்தல்
iii)குறைவான மகரந்தமுடைய கொத்தான மலர்கள்
iv) கோழை சூழ்ந்த மகரந்ததூள்

6. கருவுற்ற பின் சூல்________ ஆக மாறுகிறது
i) விதை
ii) கனி
iii) கருஊண்(எண்டோஸ்பர்ம்)
iv) கனித்தோல்(பெரிகார்ப்)

7. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தியது________
i) பொய்க் கனி-மா
ii) கூட்டுக் கனி-ஆப்பிள்
iii)திரள் கனி-நெட்டிலிங்கம்
iv) கேரியாப்சிஸ்-வாழை

8. பொருந்தாத இணை________
i) இருபுறவெடிகனி-உலர்வெடிகனி
ii) சிப்செலா-உலர்வெடியாகனி
iii)போம்-சதைகனி
iv) ரெக்மா-இருபுற வெடிகனியை போல

9. பாலூட்டிகளின் மிக முக்கியமான பண்பு________
i) நான்குஅறைகள்கொண்டஇதயம
ii) முன்னங்கால்கள்இபின்னங்கால்கள்
iii)பால் சுரப்பிகள்
iv) வால்

10. மாமிச உண்ணிகள்________ பற்களைப்பயன்படுத்தி மாமிசத்தைக் கிழிக்கிறது
i) வெட்டும் பற்கள்
ii)கோரைப் பற்கள்
iii)முன்கடைவாய்ப் பற்கள்
iv) பின்கடைவாய்ப் பற்கள்

No comments:

Post a Comment