LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 8 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 8

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது
i) CO2 மற்றும் நீர்
ii) பச்சையம்;
iii) சூரியஒளி
iv) இவை அனைத்தும்

2. இலைத்துளைகள் இதற்கு உதவுகின்றன
i) ஒளிச்சேர்க்கையின் போது CO2 வை எடுத்துக்கொள்வதற்கு
ii) ஒளிச்சேர்க்கையின் போது O2 வை வெளியிடுவதற்கு
iii) நிராவிப்போக்கின் போது நீராவியை வெளியிடுவதற்கு
iv) இவை அனைத்தும்.

3. பசுந்தாவரங்களில் காணப்படும் எந்தச்செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?
i) மைட்டோகாண்டிரியா
ii) பசுங்கணிகம்
iii) எண்டோபிளாசவலை
iv) உட்கரு   

4. கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற ஒட்டுண்ணித்தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
i) வேரிகள்
ii) ஹாஸ்டோரியா
iii) ஹைபாக்கள்
iv) ஸ்டோலன்

5. மனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பினை எழுதுக
i) தொண்டை.
ii) வாய்.
iii) வாய்க்குழி.
iv) கணையம்

6. பொருள்களின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இவற்றில் சிதைவடையும் பொருள்களைக்கொண்டதொகுப்பினைத் தேர்ந்தெடுக்க
i)புல்,மலர்கள்,இலைகள்
ii) புல்,கட்டை மற்றும் பிளாஸ்டிக்
iii) பழத்தோல்,கேக்மற்றும்பிளாஸ்டிக்
iv) கேக்,கட்டைமற்றும்கண்ணாடி

7. கீழுள்ளவற்றில் எது உணவுச்சங்கிலி?
i) புல்,கோதுமை
ii) புல்,ஆடு,மனிதன்
iii) ஆடு,பசு,யானை
iv) புல்,மீன்,ஆடு

8. இவற்றில் எவை சூழ்நிலையைப் பாதுக்காக்கும் நடைமுறைகள்?
i) பொருள்கள் வாங்குவதற்குத்துணிப்பையை எடுத்துச் செல்லுதல்
ii) பயன்படுத்தாதபோது மின்விளக்குகள் மின்விசிறிகளைஅணைத்தல்
iii) பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
iv) மேற்கண்ட அனைத்தும்.

9. கறுப்புத்தங்கம் என்றழைக்கப்படுவது எது?
i)ஹைட்ரோகார்பன்கள்
ii) நிலக்கரி
iii) பெட்ரோலியம்
iv) ஈதர்

10. பொருத்தமற்றதை உணவுச்சங்கிலியின் அடிப்படையில் நீக்குக
தாவரங்கள்--வெட்டுக்கிளி--தவளை--புலி--பாம்பு பொருத்தமற்றது :
புலி

No comments:

Post a Comment