சங்க கால அரசியல்
காவல் மரம்
• சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் மரம் இருந்தது.
• அம்மரம் தெய்வத் தன்மை பெற்றிருந்ததாக எண்ணப்பட்டது.
• காவல் மரம் வெட்டப்பட்டால் அந்நகரம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது.

அமைச்சர்
• அரசருக்கு ஆலோசனை கூறுவதற்கு அமைச்சர்கள் இருந்தனர். தவறான ஆலோசனை கூறி அதனால் தீமை விளையுமாயின் ஆலோசனை வழங்கிய அமைச்சர்கள் ஏளனம் செய்யப்பட்டனர்.
• அரசுப் பதவியில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு மன்னன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புச் செய்தான்.
• சான்றாக எட்டி, காவிதி, ஏனாதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.

தூதுவர்
• சங்க கால மன்னர்கள் தூதுவர்களை நியமித்திருந்தனர்.
• தூது செல்லுதல் அவர்களது பணியாகும்.
• பொதுவாகத் தூதுவர்கள் நடுவராக இருந்து வந்தனர்.
• ஒளவையார் அதிகமான் நெடுமான் அஞ்சியின் தூதுவராகத் தொண்டைமான் அவைக்குச் சென்றார்.
• பெரும்புலவரான கோவூர்கிழார் தூதுவராகச் செயல்பட்டு, நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைத் தவிர்த்து அவர்கள் இருவருக்கும் இடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்குப் பாடுபட்டார்.

ஒற்றர்
• சங்க கால மன்னர்கள் தூதுவர்களைப் போல் ஒற்றர்களையும் நியமனம் செய்தனர்.
• ஒற்றர் முறை நிரந்தரமான அமைப்பாக இருந்து வந்தது.
• இவ்வொற்றர்கள் பல்வேறு வகைப்பட்ட சத்தங்களை எழுப்பித் தங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.
• ஒற்றர்கள் உள்நாட்டு மக்களையும், அயல் நாட்டினரையும் உளவு பார்த்து வந்தனர்.
• மேலும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், அரச குடும்பத்தினர், பகைவர்கள் ஆகியோர்களை உளவு பார்த்து வந்தனர்.
• இவர்கள் மாறுவேடங்களில் இருந்து வந்தனர்.
• ஒற்றர்கள் கூறுவது மற்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
• ஓர் ஒற்றர் கூறுவதை உண்மையானது என்று முடிவு செய்யாமல், ஒற்றர்களுக்கு ஒற்றராகச் செயல்படும் மற்றோர் ஒற்றரின் கருத்தைக் கேட்டு உறுதி செய்யப்பட்டது.
• மூன்றாவது ஒற்றரையும் கேட்டுச் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
• ஒற்றர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் தனியாகச் செயல்பட்டனர்.
• ஒற்றர் தவறாகச் செயல்பட்டால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

படை
• சங்க கால மன்னர்கள் எப்போதும் தம்முடைய அண்டை நாடுகளைக் கைப்பற்றும் எண்ணத்துடனே இருந்து வந்தனர்.
• இதற்காகப் போர்க்கருவிகள், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை போன்றவைகளை நிரந்தரமாக வைத்திருந்தனர்.
• இப்படைகளில் வீரம் பொருந்திய மறவர், மள்ளர், எயினர், மழவர், வல்லம்பர், பரதவர் போன்றோர் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
• சங்ககால மன்னர்கள் பல இடங்களை வெற்றி கொண்டுள்ளார்கள்.
• சான்றாக, கரிகால் சோழன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரைக் கூறலாம்.
• இவர்களுள் கரிகால் சோழன் வட இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டான்.

சங்க கால ஆட்சி முறை
• பொதுவாகச் சங்க காலத்தில் நற்குணங்கள் நிறைந்த மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
• ஒரு சிலர் கொடுங்கோலாட்சியும் செய்து வந்தனர்.
• மன்னர்கள் மக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டனர் என்பதும் புரிகிறது.
• ஒற்றர்கள் வாயிலாக மக்கள் நிலையை மன்னர்கள் அறிந்து அதற்கு ஏற்றவாறு பணியாற்றி வந்தனர்.
• சங்க காலத்தில் ஊராட்சி, நகராட்சி என்ற அமைப்புகள் இருந்தன.

Sangakala araseyal Neil Tamil anupuva please
ReplyDelete