LATEST

Thursday, January 23, 2020

பேராழியியல் (Oceanography) - அலைகள்(Waves), ஓதங்கள் (Tides), பேராழி நீரோட்டங்கள்

அலைகள்(Waves), ஓதங்கள் (Tides), பேராழி நீரோட்டங்கள்

 அலைகள்(Waves)
•    பேராழிகளில் நீரானது எப்பொழுதும் மேலும் கீழுமாக அசைகின்றன. இந்த நீரின் அசைவே அலைகள் என அழைக்கப்படுகிறது. அலைகள் உருவாவதற்கு முக்கயக் காரணம் காற்றோட்டம் ஆகும். 
•    இயற்கையான அலைகள் பெரும்பாலும் காற்றோட்டத்தால் தோற்றுவிக்கப்படுகின்றன. அலைகள் சில குறிப்பிட்ட திசைகளில் பயணிக்கின்றன. ஆனால் நீரானது அலைகளோடு பயணிப்பதில்லை.

ஓதங்கள் (Tides)
•    சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் ஒவ்வொரு நாளும் 6 மணி நேர இடைவெளியில் கடல் நீரின் மட்டம் உயர்ந்து தாழ்வதை ஓதம் என அழைக்கப்படுகின்றது. கடல் மட்டம் உயர்வதை உயர் ஓதம்(High Tide) என்றும் தாழ்வதை தாழ் ஓதம் (Low Tide) என்றும் அழைக்கப்படுகிறது.
•    மிதவை ஓதமானது (Spring Tide) அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஏற்படுகிறது. இந்த நாட்களில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன ஒரே நேர்க்கோட்டின் இருக்கின்றன. அத்தகைய நாட்களில் சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்டுகின்றது. இக்காலங்களில் உயர் ஓதம் மிக உயர்ந்தும் மற்றும் தாழ் ஓதம் மிகத் தாழ்ந்தும் காணப்படும்.
•    தாழ்வை ஓதாமானது (Neap Tide) நிலவின் முதல் மற்றும் மூன்றவாது வளர்ச்சி நிலையில் ஏற்படுகின்றது. இந்நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன செங்கோணத்தில் இருக்கின்றன. 
•    இதன் விளைவாக நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமைகின்றன. இந்நேரங்களில் உயர் ஓதம் மிகத் தாழ்ந்தும் மற்றும் தாழ் ஓதம் மிக உயர்ந்தும் காணப்படும்.

பேராழி நீரோட்டங்கள்
•    பேராழி நீரோட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினை குறிக்கும்.
•    வேறுவகையில் கூறவோமேயானால் பேராழி நீரோட்டமானது பேராழியில் இயல்பாக ஓடும் நீராகும். இப்பேராழி நீரோட்டங்கள் ஆறுகளைப் போல் குறிப்பிட்ட பாதை மற்றும் வேகத்தில் பாய்கின்றன. பேராழி நீரோட்டங்கள் இரண்டு வகைப்படும். 
அவைகள், 
1. வெப்ப (Warm) நீரோட்டங்கள்
2. குளிர் (Cold) நீரோட்டங்கள் ஆகும். 
•    வெப்ப நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. இருப்பினும் குளிர் நீரோட்டங்கள் உயர் அட்சரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.

No comments:

Post a Comment