உள்கோள்கள் பகுதி 2
பூமி
• சூரியனிடமிருந்து 150 மில்லியன் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ( 149.6 மில்லியன் கி.மீ) தனது 23 ½ டிகிரி சாய்வில் சுழல 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது.
• சூரியனை வலம் வர 365.25 நாட்கள் (365 ¼ நாட்கள்) எடுத்துக் கொள்கிறது.
• நீர் நிறைந்திருப்பதால் “நீலக் கோள்” மற்றும் உயிர் வாழும் தகவமைப்பு உள்ளதால் “உயிர்க்கோளம்” எனப்படுகிறது.
• 1969 ம் ஆண்டு அப்பல்டீலா-2 என்ற விண்கலத்தில் பயணம் செய்த மைக்கேல்கோலின்ஸ் என்பவர் பூமியை நீல நிறத்தில் ஒளிவீசும் “மிதக்கும் பந்து” என்றார்.
• பூமியானது உட்புற கிரகங்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும். அது ஒன்றில் மட்டும் நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் விட்டுவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றன. பிரபஞ்சத்தில் பூமி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன .
• நிலம் சார்ந்த கிரகங்களில் அது ஒன்றுதான் திரவ நீர்மண்டலம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் பூமி கிரகத்தில் ஒன்று மட்டும் தான் 'கவசத்தகடு கட்டுமானம்' காணப்படுகின்றமை அதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது.
• பூமியின் வளிமண்டலம் மற்ற கிரகங்களின் மண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது. உயிரினங்கள் வாழ்வதால் 21 சதவீதம் பிராணவாயு கொண்டிருப்பதாலும் அத்தகு வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
• அதற்கு ஒரேயொரு இயற்கை உபகோள் உண்டு அதுதான் நிலா ஆகும். அந்நிலாவே கதிரவன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு பெரும் நிலம்சார் உபகோள் எனப் பெயர் பெற்றுள்ளது.
செவ்வாய்
• சிவப்பு கோள் (or) Fiery Planet எனப்படுகிறது. சூரியனிடமிருந்து 228 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. தனது அச்சில் 24.6 மணி நேரத்தில் சுழல்கிறது.
• 687 நாட்களில் சூரியனை வலம் வருகிறது. கார்பன்-டை- ஆக்சைடு நிறைந்த வளிமண்டலம் உள்ளது. வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலைகள், பாறைகள் நிறைந்த பாலைவனம், பனி மூடிய துருவங்கள் உள்ளன. இக்கோளில் எரிமலை உயரம் 24 கி.மீ. பாறைகள் மற்றும் மண்ணில் இரும்பு ஆக்சைடு உள்ளது.
• Dustry Planet - “தூசுக்கள் நிறைந்த கோள்” எனப்படுகிறது. வைக்கிங் விண்கலம் ஆராய்ச்சிகள் செய்து உயிரினங்கள் வாழ இயலாது என நிருபித்துள்ளது. இரண்டு துணைக் கோள்கள் Deimos and Phobos உள்ளன. மணிக்கு 270 கி.மீ டீவகத்தில் தொடர்ந்து மாதக்கணக்கில் சூறைக்காற்று வீசுகிறது. பகல் நேர வெப்பம் 23 டிகிரி செல்சியஸ். இரவு நேர வெப்பம் -101 டிகிரி செல்சியஸ்.
• வளிமண்டலத்தில் அதிகம் கரியமில வாயுவே உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் எரிமலைகள் 'ஒலம்பஸ் மான்ஸ்' என்றழைக்கப்படுகின்றன. அங்குள்ள பிளந்த பள்ளத்தாக்குகள் 'வாலிஸ் மேரினாரிஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
• அவைகள் அதன் மண்ணியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன. அதுவும் சமீப காலமாகத்தான் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால் (துரு) ஏற்பட்ட தாகும்.
• செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறுகுறு இயற்கை உபகோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன. அவைகளே கைப்பற்றப்பட்ட நட்சத்திர வடிவுக்கோள்கள் எனவும் கருதப்படுகின்றன. இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment