LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 14

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 14

1. நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால்
உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்?
(a) செல் உடலம் 
(b) டென்டிரைட்டுகள்
(c) ரன்வீரின் கணுக்கள் 
(d) ரிசல் துகள்கள்
 
2. ஆக்ஸானின் கிளைத்த முடிவு பகுதிகளைத் தாவர மற்ற
பகுதிகளை போர்த்திய படி உள்ளது எது?
(a) டென்ட்ரைட்டு 
(b) நியூரிலெம்மா
(c) ஒரு முனை நியூரான் 
(d) இருமுனை நியூரான்
 
3. மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது?
(a) மைய நரம்பு மண்டலம் 
(b) புற அமைவு நரம்பு மண்டலம்
(c) தானியங்கு நரம்பு மண்டலம் 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
4. பெருமூளை, தலாமஸ், ஹைப்போ தலாமஸ் போன்ற
அமைப்புகளைக் கொண்டது எது?
(a) நடு மூளை 
(b) முன் மூளை 
(c) பின் மூளை 
(d) முகுளம்
 
5. மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது எது?
(a) பெரு மூளை 
(b) சிறு மூளை 
(c) பான்ஸ் 
(d) முகுளம்
 
6. பான்ஸ், சிறு மூளை, முகுளம் ஆகியவை எங்கே காணப்படுகிறது?
(a) முன் மூளை 
(b) நடு மூளை
(c) பின் மூளை 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
7. உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய
பணியைச் செய்வது எது?
(a) ஹைபோதலாமஸ் 
(b) தலாமஸ் 
(c) பான்ஸ் 
(d) முகுளம்
 
8. பெரு மூளையிலிருந்து சிறு மூளைக்கு செய்திகளைக் கடத்துவது
எது?
(a) முகுளம் 
(b) தலாமஸ் 
(c) பான்ஸ் 
(d) ஹைபோதலாமஸ்
 
9. கழுத்துபுடைப்பு மற்றும் இடுப்பு புடைப்பு போன்ற பகுதிகளில்
அகன்று காணப்படுவது எது?
(a) முகுளம் 
(b) பான்ஸ் 
(c) தண்டு வடம் 
(d) தலாமஸ்
 
10. பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக விளங்குவது எது?
(a) முகுளம் 
(b) பான்ஸ் 
(c) தலாமஸ் 
(d) ஹைபோதலாமஸ்

விடைகள்
1.C 
2.B 
3.A 
4.B 
5.A
6.C 
7.B 
8.C 
9.C 
10.A

No comments:

Post a Comment