LATEST

Saturday, March 28, 2020

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 11

பொது அறிவியல் வினா விடைகள் பகுதி 11

1. பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?
(a) டார்வின் 
(b) மெண்டல் 
(c) ஜென்னர் 
(d) லூயிபாஸ்டர்ஸ்
 
2. மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய தாவரம் எது?
(a) பட்டாணி 
(b) உளுந்து 
(c) நெல் 
(d) அவரை
 
3. கிரிகர் ஜோகன் மெண்டல் எந்நாட்டைச் சார்ந்வர்?
(a) ஆஸ்திரியா 
(b) ஆஸ்திரேலியா 
(c) அமெரிக்கா
(d) பிரிட்டன்
 
4. உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியவர் யார்?
(a) டார்வின் 
(b) ஜென்னர் 
(c) லாமார்க்
(d) மெண்டல்
 
5. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
(a) ஜென்னர் 
(b) லாமார்க் 
(c) மெண்டல்
(d) சார்லஸ் டார்வின்
 
6. 1791 ம் ஆண்டு தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கி
தடுப்பூசிக் கொள்கைகளை வெளியிட்டவர் யார்?
(a) ஜென்னர் 
(b) லாமார்க் 
(c) மெண்டல்
(d) சார்லஸ் டார்வின்
 
7. ஒரு மூலக்கூறு கத்திரிக் கோலாக செயல்பட்டு னுNயு வைக்
குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்கு பயன்படுவது எது?
(a) லிகேஸ் நொதி 
(b) ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
(c) வைட்டமின்கள் 
(d) ஸ்ட்டிராய்டுகள்
 
8. உடற் செல்களில் அல்லது இனச் செல்களில் காணப்படும் ஜீன்
குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய மருத்துவ முறை
எது?
(a) இயற்கை மருத்துவம் 
(b) சித்த மருத்துவம்
(c) மரபணு மருத்துவம் 
(d) யுனானி மருத்துவம்
 
9. விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ---------- ஜீனை
பாக்டீரியாவுக்கு மாற்றி நைட்ரஜனை நிலை நிறுத்தச் செய்யலாம்?
(a) நிஃப் 
(b) உடல ஜீன் 
(c) மரபு 
(d) இவற்றுள் எதுவுமில்லை
 
10. ஆற்றல் ஏதும் அளிக்காத, ஆனால் ஆற்றல் மாற்றம் மற்றும்
வளர்சிதை மாற்ற ஒழுங்குபடுத்துதலில் பெரிதும் பயன்படுவது எது?
(a) தாது உப்புகள் 
(b) தடுப்பூசிகள்
(c) வைட்டமின்கள் 
(d) ஸ்டிராய்டுகள்
நோய்த்தடைக் காப்பு மண்டலம்
 
விடைகள்
1.B 
2.A 
3.A 
4.C 
5.D
6.A 
7.B 
8.C 
9.A 
10.C

No comments:

Post a Comment