LATEST

Wednesday, April 15, 2020

திருக்குறள் பகுதி 01

திருக்குறள் பகுதி 01

நூல் குறிப்பு:

•    திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்.
•    உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்.
•    இதனை இயற்றியவர் திருவள்ளுவர்
•    பாவகை – வெண்பா
•    திருக்குறளில் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
•    திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
•    அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
•    பொருட்பால் - 70 அதிகாரங்கள்
•    இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
•    பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது

வேறு பெயர்கள் : 
•    திருவள்ளுவம்,
•    தமிழ் மறை,
•    உலக பொதுமறை,
•    முப்பால்,
•    பொய்யாமொழி,
•    தெய்வநூல்,
•    வாயுறைவாழ்த்து,
•    உத்தரவேதம்,
•    திருவள்ளுவப் பயன் (நச்சினார்க்கினியர்),
•    தமிழ் மாதின் இனிய உயர் நிலை,
•    அறஇலக்கியம்,
•    அறிவியல் இலக்கியம்,    
•    குறிக்கோள் இலக்கியம்,
•    நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு,
 
பெயர்க்காரணம்:
•    திரு + குறள் = திருக்குறள்
•    குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
•    திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”

ஆசிரியர் குறிப்பு:
•    திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31 

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :
•    நாயனார்
•    தேவர் (நச்சினார்க்கினியர்)
•    முதற்பாவலர்
•    தெய்வப்புலவர் (இளம்பூரனார்)
•    நான்முகன்
•    மாதானுபாங்கி
•    செந்நாப்போதார்
•    பெருநாவலர்
•    பொய்யில் புலவன்

No comments:

Post a Comment