LATEST

Wednesday, April 15, 2020

திருக்குறள் பகுதி 03

திருக்குறளின் சிறப்பு பகுதி 01

 திருக்குறளின் சிறப்பு :
•    திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
 
•    திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
 
•    திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
 
•    திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
 
•    திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
 
•    திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

•    திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

•    திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

•    திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

•    திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

•    திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

•    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

•    திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

•    திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

•    திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

•    திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

•    திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
•    திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

•    திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன

•    திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

No comments:

Post a Comment