LATEST

Wednesday, April 15, 2020

திருக்குறள் பகுதி 04

திருக்குறளின் சிறப்பு பகுதி 02

 திருக்குறளின் சிறப்பு :
 
•    திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

•    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

•    திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
 
•    திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

•    திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

•    திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

•    எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

•    ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

•    திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளி வந்துள்ளது.

•    திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

•    திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

•    திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. 

•    திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

•    46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment