திருக்குறள் - அன்புடைமை - குறள் 77 & 78 - பொருளும் விளக்கமும்
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
பொருள்: என்பிலாத சீவனை வெயில்
சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.
மு.வ விளக்க உரை: எலும்பு இல்லாத
உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம்
வருத்தும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: எலும்பு இல்லாத
புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து
கொல்லும்.
கலைஞர் விளக்க உரை: அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை
புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
பொருள்: தன்னிடத்து அன்பில்லாத
உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற்
போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
மு.வ விளக்க உரை: அகத்தில் அன்பு
இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற்
போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை: மனத்தில் அன்பு
இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது
போலாம்.
கலைஞர் விளக்க உரை: மனத்தில் அன்பு
இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில்
பட்டமரம் தளிர்த்தது போன்றது
No comments:
Post a Comment