திருக்குறள் - அன்புடைமை - குறள் 79 & 80 - பொருளும் விளக்கமும்
79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
பொருள்: உடம்பிற்கு
அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்.
மு.வ
விளக்க உரை: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின்
புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
சாலமன்
பாப்பையா விளக்க உரை: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி
உறுப்பாக விளங்கும் இடம்,
பொருள், ஏவல் என்பன என்ன
பயனைத் தரும்?
கலைஞர்
விளக்க உரை: அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து
உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்: அன்பின் வழி
நிற்பது உயிர் வாழ்வு; அன்பு
இல்லாதார்க்குள்ள உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தியதாகும்.
மு.வ
விளக்க உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்:
அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்
சாலமன்
பாப்பையா விளக்க உரை: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும்
இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
கலைஞர்
விளக்க உரை: அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத்
தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்
No comments:
Post a Comment