LATEST

Saturday, May 1, 2021

வரலாற்றில் இன்று - 01/05/2021

 

வரலாற்றில் இன்று
01/05/2021-சனி


1328 : ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது.

ஸ்காட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

 

1776 : இலுமினாட்டி குழு ஆரம்பிக்கப்பட்டது.

 

1794 : பிரெஞ்சுப் படையினர் ஸ்பெயினைத் தோற்கடித்து சென்ற ஆண்டு தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.

 

1840 : உலகின் முதலாவது அதிகாரப்பூர்வமாக பசை தடவிய தபால்தலையான பென்னி பிளாக் வெளியிடப்பட்டது.

 

1844 : ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறையாக

ஹாங்காங் காவல்துறை அமைக்கப்பட்டது.

 

1851 : லண்டனில் பொருட்காட்சி நடத்துவதற்கென்றே கட்டப்பட்ட பளிங்கு அரண்மனை விக்டோரியா மகாராணியால் திறந்துவைக்கப்பட்டது.

 

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- அமெரிக்க கூட்டு ராணுவம் நியூ ஓர்லென்ஸைக் கைப்பற்றியது.

 

1866 : அமெரிக்காவில் மெம்பிஸ் இனக்கலவரம் ஆரம்பமானது.

3 நாட்களில் 46 கறுப்பினத்தவர்களும், இரண்டு வெள்ளை இனத்தவரும் கொல்லப்பட்டனர்.

 

1875 : கடந்தாண்டு எரிந்து அழிந்த லண்டன் அலெக்ஸாண்ட்ரா அரண்மனை மீண்டும் நிறுவப்பட்டது.

 

1886 : அமெரிக்காவில் 8 மணி நேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலை நிறுத்தம் ஆரம்பமானது.

 

1890 : அமெரிக்காவில் 8 மணி நேர வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது.

 

1893 : உலக கொலம்பியாக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.

 

1895 : அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் முதல் பயணிகள் மின்சார ரயில் விடப்பட்டது.

 

1897 : கல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

 

1900 : அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

 

1917 : புலிட்சர் விருது வழங்கும் திட்டம் கொலம்பியா பல்கலைக் கழகத்தினால் துவக்கப்பட்டது.

 

1923 : இந்தியாவில் சென்னை கடற்கரையில் முதன்முதலில் தொழிலாளர் தினம் எம். சிங்காரவேலு தலைமையில் கொண்டாடப்பட்டது.

 

1919 : ஈரான் - துருக்மேனியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,800 பேர் உயிரிழந்தனர்.

 

1930 : சூரியனைச் சுற்றி வந்த குறுங்கோளுக்கு புளூட்டோ என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது.

 

1931 : நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் பில்டிங் திறந்து வைக்கப்பட்டது.

 

1940 : ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

 

1944 : இரண்டாம் உலகப் போர் :- 200 கம்யூனிஸ்ட் கைதிகள்

ஏதென்ஸில் நாஜிக்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

1945 : ஹிட்லரின் போர் பிரச்சார அமைச்சர் கோயபல்சும் அவரது மனைவியும் பதுங்கு அறைக்கு வெளியே தங்களது 6 குழந்தைகளுக்கு சயனைட் கொடுத்து கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் :- செஞ்சேனையின்

முன்னேற்றத்தை அடுத்து ஜெர்மனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

 

1956 : ஜோனஸ் சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது.

 

1957 : இங்கிலாந்து, ஹாம்ஷயர் என்ற இடத்தில் விமானம் ஒன்று விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

 

1960 : பம்பாய் மாகாணம் குஜராத், மகாராஷ்டிரா என

இரண்டு மாநிலங்களாக பிரிக்கப் பட்டன.

 

1961 : கியூபாவில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது.

இனி தேர்தலே நடைபெறாது என மே தின உரையில் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

 

1983 : சிட்னி பொழுதுபோக்கு மையம் திறக்கப்பட்டது.

 

1989 : இந்திய அமைதிகாக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப்புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

 

1991 : கம்போடியாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

 

1993 : இலங்கை அதிபர் பிரேமதாசா மே தினப் பேரணியில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

 

1999 : 1924 ல் காணாமல்போன பிரிட்டனைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்ட் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

2009 : ஸ்வீடனில் ஓரினத் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

 

2010 : சீனாவின் ஷாங்காயில் எக்ஸ்போ - 2010 ஆரம்பமானது.

 

2011 : அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன்

அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment