LATEST

Monday, May 17, 2021

வரலாற்றில் இன்று மே 17 2021 (Today in History)

 

வரலாற்றில் இன்று மே 17 2021 (Today in History)

 

மே 17 (May 17) கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

·        1498வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.

·        1521பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

·        1536 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.

·        1590டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார்.

·        1792நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

·        1805முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

·        1809பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார்.

·        1814 நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார்.

·        1814மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக் கைமாறியது.

·        1865 அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

·        1902 கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.

·        1915பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

·        1940 இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.

·        1969சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

·        1972இலங்கையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது.

·        1974அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

·        1980மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

·        1983லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

·        1987ஈரான் ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.

·        1990உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.

·        1992தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

·        1994மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

·        1997சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

·        1998 தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

·        2004அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.

·        2006 அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.

·        2007 வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.

·        2009 தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

·        2014வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

 

சிறப்பு நாள்

·        குழந்தைகள் நாள் (நோர்வே)

·        அரசமைப்பு நாள் (நவூரு)

·        விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)

·        உலக தகவல் சமூக நாள்

 

No comments:

Post a Comment