LATEST

Tuesday, May 18, 2021

வரலாற்றில் இன்று மே 18 (Today in History)

 வரலாற்றில் இன்று மே 18 (Today in History)


மே 18 (May 18) கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.

 

332கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.

872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார்.

1096முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.

1268அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது.

1565உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

1593மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

1652 வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.

1756 பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப் போர் ஆரம்பமானது.

1803 நெப்போலியப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் பிரான்சு மீது போரை அறிவித்தது.

1804முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.

1812 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

1896உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது "கோதிங்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.

1900 தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.

1912 முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.

1917முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்கு கட்டாய ஆள் திரட்டு அதிகாரம் அமெரிக்க அரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டது.

1927மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.

1944 இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.

1944கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1955முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.

1969அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1973சோவியத் ஒன்றியத்தின் ஏரோபுளொட் வானூர்தி 109 வான்வெளியில் கடத்தப்பட்டு, கடத்தல்காரரின் குண்டு வெடித்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 82 பேரும் கொல்லப்பட்டனர்.

1974 அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

1980வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

1984 அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1991வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.

1994இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.

2005ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.

2006நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.

2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

2010 நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

2015கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.

2018அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2018கியூபா தலைநகர் அவானாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 113 பேரில் 112 பேர் உயிரிழந்தனர்.

 

சிறப்பு நாள்

 

·        முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)

·        கிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள் (உக்ரைன்)

·        விடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)

·        பன்னாட்டு அருங்காட்சியக நாள்

·        போர்க்குற்ற நாள் (இலங்கை)

·        ஆசிரியர் நாள் (சிரியா)

·        உலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்

No comments:

Post a Comment