LATEST

Wednesday, May 19, 2021

வரலாற்றில் இன்று மே 19 (Today in History)

வரலாற்றில் இன்று மே 19 (Today in History)

 

மே 19 (May 19) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.

 

715இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1268பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.

1499அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது.

1535பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;

1542புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.

1568இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.

1649 இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.

1655ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1743சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.

1780 நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.

1802பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.

1828அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

1834 இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]

1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

1919 முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1934பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.

1950இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.

1950 பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.

1961சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.

1961அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1971 சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

1978 விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1991குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.

2012சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2016எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.

2018வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.

 

சிறப்பு நாள்

 

·        இனவழிப்பு நினைவு நாள் (கிரேக்கம்)

·        ஓ சி மின் பிறந்தநாள் (வியட்நாம்)

·        கல்லீரல் அழற்சி சோதனை நாள் (ஐக்கிய அமெரிக்கா)

·        அன்னையர் நாள் (கிர்கிசுத்தான்) 

No comments:

Post a Comment