Temples in India - 15 Mints Seminar Notes
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
- கற்களை மட்டுமே கொண்டு செய்யப்பட்ட தொன்மையான இந்திய கோவில்(ராஜராஜேஸ்வரம் கோவில்) பிரகதீஸ்வரர் கோவில், என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும்.
- இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
- தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
- கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
- இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
- அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன
- தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
- இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
- சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது.
- இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.
- மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
- இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும்.
- அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
புரி ஜெகன்நாதர் கோயில்
- இந்தியாவின்,கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும்.
- ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.
- இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்.
சோமநாதபுரம் சோமநாதர் கோயில்
- இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது
- இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.
- சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.
லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்
- ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்று.
- இக்கோயில் இந்துக்கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
- இதுதான் இந்த ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150 க்கு மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்
- திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும்.
- இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
- இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும்.
- திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.
- மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி
- 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம், சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும்,
- திருவரங்கம் பூலோக, ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்ய தேச தலம்.
- திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
திருப்பதி
- திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
- இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
- இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
- இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.
- 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
யமுனோத்திரி கோயில்
- யமுனோத்திரி கோயில் இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் யமுனை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
- அரித்வாரிலிருந்து யமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழுப் பகற்பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான அனுமான் சட்டி எனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் “சார் தாம்” எனும் நான்கு இடங்களில் அமைந்த வேறு கோயில்களான யமுனோத்திரி கோயில், பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் கங்கோத்திரி கோயில்களை வலம் வந்து தரிசிப்பதையே இந்தியில் சார்-தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது
கொனார்க் சூரியக் கோயில்
- இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில்.
- இது கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
- புவனேசுவரில் இருந்து 65 கிமீ தொலைவிலும் புரியில் இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். புரி, புவனேசுவரில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. புவனேசுவரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.
பத்ரிநாத் கோயில்
- பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
- இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
காமாக்யா கோவில்
- காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது.
- இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய ஏழும் தனித்தனிக் கோவில்களாக அமைக்கப்பட்டுள்ளன.
- அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
Presented by
Ashok Kumar
TNPSC Student
Magme School of Banking
No comments:
Post a Comment