LATEST

Tuesday, February 8, 2022

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி - 15 Mints Seminar Notes

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி - 15 Mints Seminar Notes

  • இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் மராத்தியர்கள்
  • முகலாயர் அரசுக்கு உண்மையான ஆபத்தை கொடுத்தவர்கள் இவர்கள்

அறிமுகம்

  • மராத்தியரில் முக்கியமானவர் சிவாஜி இவர் போர்வீரர் மற்றும் கொரில்லாப் போர்முறையில் சிறந்தவர் ஆவர்
  • கொரில்லாபோர் முறை (மறைந்திருந்து தாக்குதல்)
  • ஔரங்கசீப் தளபதிகளுக்கு கடும் போட்டியாக இறந்தவர்கள் மராத்தியர்கள்
  • முகலாயர் வலிமை குறைவாகவும் மராத்தியர்களின் வலிமை அதிகமாக இருக்கும் போது முகலாயர் ஆட்சியின் போதேசவுத் மற்றும் சர்தேஷ்முகி என்கிற வரியை மக்களிடமிருந்து பெற்றனர்
  • பேஷ்வாக்கள் என்றால் மராத்திய ஆட்சியில் பிரதம அமைச்சர்கள்
  • உண்மையான அதிகாரம் ஷாகுவின் காலம் வரை
  • 1761ல் மராத்தியர்கள் மேலாதிக்கம் தொடங்கியது

மராத்தியர்கள் எழுச்சிக்கான காரணங்கள்

1)புவியியல் கூறுகள்

  • மராத்தியர்களின் புவியல் கூறுகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்களை விடவேறுபட்டு இருந்தது மராத்தியர்கள் கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கினார்கள்
  • அகமது நகர் மற்றும் பீஜப்பூர் சுல்தான்கள் மராத்தியர்களை தன் குதிரைப் படையில் அமர்த்தினார்கள் அப்போது தான் மராத்தியர்களுக்கு முகலாயர்கள் அவர்களை எவ்வாறு அடக்கி வைக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது
  • பின்பு தான் மராத்தியர்களுக்கு முகலாயர்களை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது

2) பக்தி இயக்கம்

  • பக்தி இயக்கம் முதலில் மகாராஷ்டிரத்தில் தோன்றியது
  • மராத்திய மக்களிடையே பக்தி இயக்கம் ஒரு விழிப்புணர்வாக இருந்தது
  • இதன் கொள்கை சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பது
  • பக்தி இயக்கத்தின் குறிப்பிடத்தக்கோர்
  • ஏக்நாத்,துக்காராம் ,ராம்தாஸ்

3)மராத்திய மொழி இலக்கியம்

  • ஒற்றுமையை வளர்க்க மராத்திய மொழி முக்கிய பணியாற்றியது
  • பக்தி இயக்க பெரியோர்கள் மராத்திய மொழியில் பக்தி பாடல்கள் பாடி மராத்தியர்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வந்தனர்

சிவாஜி 

பிறப்பு: 1627

தாய்:ஜீஜாபாய்

தந்தை: ஷாஜி பான்ஸ்லே

ஆசிரியர்: தாதாஜி கொண்டதேவ்

பயிற்சி:குதிரை ஏற்றம் மற்றும் போர்களை,அரசுநிர்வாகம் ஆகியவற்றை சிவாஜியின் குரு கற்றுக்கொடுத்தார்

1645- தனது 18 வயதில்இராணுவத்தில் அடி எடுத்து வைத்தார் பின் முதலில்   1)கோண்டுவானா கோட்டையை கைப்பற்றினார் பின்பு 2) தோர்னாமற்றும் 3)ரெய்கார்கோட்டையை கைப்பற்றினர்

குரு இறப்பு 1649

ஜாகிர் நிலப்பகுதியை சிவாஜி முழுமையாக பெற்றார்

காலாட்படை உதவியுடன் பிஜப்பூர் கோட்டையை எதிர்த்து போர் தொடங்கினார்

    புறந்தார் கோட்டையை கைப்பற்றினார் பிஜப்பூர் சுல்தான் கோபம்கொண்டு சிவாஜியின் தந்தையை சிறையில் அடைத்தார்வாக்குறுதி பெற்றார் பூனே நகர்க்கு எதிரே போர் தொடுக்க கூடாது என்று தந்தை இறக்கும் வரை சிவாஜி பூனே அருகே செல்லவில்லை

    தந்தை இறந்த பின்பு மீண்டும் போர் தொடங்கினார் முகலாயர் படையெடுப்பு நிகழ்ந்தது மராத்தியர்கள் வெற்றி பெற்றன
    1659 பிஜபூர் தளபதி அப்சல்கான்கொலை செய்யப்பட்டார்
    1663ஔரங்கசீப் மாமனார் செய்ஷ்டங்கானைகாயப்படுத்திய அனுப்பினார்
    1664 அரபிக் கடல் அருகே உள்ள சூரத் நகரை முதலில் சூறையாடினார்

சிவாஜியும்  ஒளரங்கசீப்பும்

    ஒளரங்கசீப் சிவாஜி கொள்ள கொரில்லா போர் முறையை தெரிந்து ராஜபுத்திர தளபதி ராஜா ஜெய்சிங் அனுப்பினார் மராத்தியர்கள் வீழ்ச்சி அடைந்தனர்
    சத்ர- குடை,பதி-தலைவன் அல்லதுபிரபு
    சத்ரபதி என்றசமஸ்கிருத சொல்லை மராத்தியர்கள் சிவாஜிக்கு மட்டுமே பயன்படுத்தினர்
    1670 இரண்டாவது முறை சூரத் நகர் கொள்ளை
    1674 சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்துடன் முடிசூட்டு விழா ரெய்கார் கோட்டையில் நடைபெற்றது சில நாட்களில் தாய் ஜீஜாபாய் இறந்துவிடுகிறார்
    சிவாஜி தன் கடைசி காலங்களை மகனுடன் செலவிடுகிறார்
    1680ல் நோய்வாய்ப்பட்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு வந்து இறந்துவிடுகிறார்

சிவாஜியின் கீழ் மராத்திய நிர்வாகம்
    அரசியல் முறை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டது
    முதல் வட்டத்தில் மக்களை துன்புறுத்துவதை அனுமதிக்கப்படவில்லை
    இரண்டாவது வட்டத்தில் நேரடிநிர்வாகம் மேற்கொள்ளவில்லை
    சவுத் ¼பாதுகாப்பு கட்டணம் அரசுக்கு செலுத்தப்பட்டது
    சர்தேஷ்முகி 1/10அரசனுக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது
    மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே நோக்கம்
    கிராமங்கள் தேஷ்முக் என்பவரால் நிருவாகம் செய்யப்பட்டது
    20-100கிராமங்கள் சிவாஜியின் கீழ் பாதுகாப்பில் இருந்தது
    கிராமத் தலைவர் பட்டில் என்பவர்
    ஆவணக் காப்பாளர் குல்கர்னி
இராணுவம்
    இராணுவத்தின் முதுகெலும்பு காலாட்படை என்று அழைக்கப்பட்டது
அஷ்டபிரதான்
    எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு அஷ்டபிரதான்
    நிலவரி 3/5, விவசாயிகளுக்கு,2/5 அரசுக்கும் அளிக்கப்பட்டது
    நிதித்துறை சிவில் பஞ்சாயத்து கிராம குழுக்கள் மூலம் தீர்க்கப்பட்டது
    குற்றவியல் குற்றங்கள் சாஸ்திரங்களில் உள்ள சட்ட நூல்களை கொண்டு தீர்க்கப்பட்டது
    பந்த்பிறதான்/பேஷ்வா-பிரதம அமைச்சர்
    அமர்த்தியா/மஜும்தார்-நிதி அமைச்சர்
    சுர்நாவிஸ்/ சச்சீவ்-செயலர்
    வாக்கிய-நாவிஷ்-உள்துறை அமைச்சர்
    சர் – இ-நௌபத்/சேனாபதி-தலைமை தளபதி
    சுமந்த்/துபீர்-வெளியுறவுத்துறை அமைச்சர்
    நியாயதிஸ்-தலைமை நீதிபதி
    பண்டிட்ராவ்-தலைமை அர்ச்சகர்
சாம்பாஜி
    அனாஜிதத்தோவுடன் சண்டை போட்டு பதவி ஏற்றார்
    மார்வார்மற்றும் ரத்தோர்குடும்பத்தை சேர்ந்த துர்க்காதாஸ் எனும் அரசன் ஒளரங்கசீப் மகன்அக்பர் உடன் சேர்ந்து அவுரங்கசீப் எதிராக போர் செய்தனர்
    மகாராஷ்டிரத்தில் சம்பாஜி அவையின் தஞ்சம் புகுந்தனர்
    1681ஒளரங்கசீப் தக்காணம் சென்று பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டாவை கைப்பற்றினர்
    1687சாம்பாஜி சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று விடுகிறார்
    1707 ஒளரங்கசீப் இறந்து விடுகிறார்

ஷாகு மகராஜா
    ஆட்சிக்காலம்1708 முதல் 1749 வரை
    சிவாஜியின் பேரன்
    ஷாகுஎன பெயர் சூட்டியவர்ஓளரங்கசீப் சிவாஜியிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த பெயரை அவுரங்கசீப் வைத்தார்
    ஷாகுஎன்றால் நேர்மையானவர்
பேஷ்வாக்கள்
பாலாஜி விசுவநாத்( 1713 -1720)
    வருவாய்த்துறை அமைச்சர்
    1713பேஷ்வா( பணிஅமர்ந்தார்)
பாஜிராவ்(1720-1740)
    பாலாஜி விஸ்வநாதன் மகன்
    தனது 20வது வயதில் பணி அமர்ந்தார்
    முகலாயர் அரசை வீழ்த்த மராட்டிய குடும்பங்களின் உதவியுடன் போர் வீரர்களை சேகரித்து ஹைதராபாத்நிஜாமுக்கும் முகலாயர்களுக்கு எதிராக போர் புரிகிறார்
முக்கிய மராட்டிய குடும்பங்கள்
    கெய்க்வாட்-பரோடா
    பான்ஸ்லே-நாக்பூர்
    ஹோல்கர்-இந்தூர்
    சிந்தி மற்றும் சிந்தியா -குவாலியர்
    பேஷ்வா-பூனே
    நிதி நிர்வாகம் புனேவில் மையப்படுதினார்
    மராத்தியர்களின் குதிரைப்படை ஐயாயிரத்திற்கும் குறைவாக இருந்த போதிலும் முகலாயர்கள் தோற்றத்திற்கான காரணம் அவர்களின் வலிமை குறைவு ஆகும்
    1720-குதிரைப்படை இரண்டு மடங்காக உயர்ந்தது
பாலாஜி பபாஜிராவ்(1740-1761)
    1749ஷாகு மகாராஜா இறப்பு
    வாரிசுரிமைப் போர் பாலாஜி பாஜிராவின்தலையீட்டால் முடிவுக்கு வந்தது
    ஊதியம் கொடுக்கப்பட்ட வீரர்கள் படைக்கு பாலாஜி பாஜிராவ் தலைமையேற்றார்
    போர் வீரர்கள் போர்க்களத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதை அனுமதிக்கப்படவில்லை அதற்கு பதிலாக கோட்டையிலே தங்க வைக்கப் பட்டது

மராத்தியர்களின் வீழ்ச்சி
    1761 இல் டெல்லிக்கு அருகே உள்ள பானிப்பட்டில் மராத்தியர்களின் பேரரசு வீழ்ச்சியடைந்தது
    பேஷ்வாவிற்கும் ஆப்கானியர்கள் அரசன்அகமதுஷா அப்தாலி என்பவருக்கும் இடையே போர் நடந்தது
    முதல் பானிபட் போர் பாபர் காலத்தில் 1526 ல் நடந்தது
    இரண்டாம் பானிபட் போர் அக்பர் காலத்தில் 1556 நடந்தது
    மூன்றாம் பானிபட் போர் மராத்தியர்கள் காலத்தில்1761இல் நடந்தது முகலாயர்கள் பீரங்கிகள் மூலம் மராத்திய வீரர்களை வீழ்த்தினார்கள் எஞ்சியிருக்கும் மராத்தியர்கள் மகாராஷ்டிரா வருவதற்கு ஆறு மாத காலம் ஆகும் அந்த நேரத்தில் துணை கண்ட மராத்திய பேரரசு சுதந்திரம் பெற்றது இவ்வாறு மராத்தியர் ஆட்சி வீழ்ச்சியடைந்த


PRESENTED By
RAJESHWARI K
TNPSC STUDENT




















 

No comments:

Post a Comment