சமூக சமய சீர்திருத்தம் இயக்கம் - 15 Minutes Seminar Notes
- பெரும்பாலான இந்துக்கள் இன்றும் நான்கு முக்கிய சமூகங்கள் வழியாகப் பின்பற்றப்படும் பாரம்பரிய போதனைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிக்கின்றனர்.
- "நவீன இந்து மதம்" என்று அழைக்கப்படுவது, பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பலதீவிர சீர்திருத்த இயக்கங்களில் இருந்து பெருமளவில் வளர்ந்துள்ளது.
- இந்த இயக்கங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்தன மற்றும் எந்த வகையிலும் இந்து மதத்தின் முக்கிய பாரம்பரிய வடிவங்களை மாற்றவோ அல்லது மாற்றவோ இல்லை.
ஆர்ய சமாஜ் மற்றும் ராம கிருஷ்ணா மிஷன் போன்ற சில குறிப்பிட்ட சீர்திருத்த இயக்கங்கள் இன்னும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
1.நாயர் இயக்கம்:
- டாக்டர் தரவத் மாதவன் நாயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தமது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தொடங்கினார்.
- 1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (திருவல்லிக்கேணி தொகுதி) பணியாற்றினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- 1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் தியாகராய செட்டியுடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார்.
- 1919 இல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மொண்டேகு - கெம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது.
- நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லோருக்கு வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார்.இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்குஉடல் நிலை மோசமாகி மரணமடைந்தார்.
- டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக் கோட்டையில் பிறந்தார்.டி.எம்.நாயரின் தந்தை சங்கரன் நாயர் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர்.
2.சுயமரியாதை இயக்கம் – (ஈ. வே. இராமசாமி):
சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது.
பெயர்க்காரணம்
ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது.25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது. அவ்வாறாக, 'நாயக்கர்' என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், 'நாயக்கர்' என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ.இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார்
இளமைக்காலம்
- ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்.
- இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர்.இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர்.இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார்.இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர்.
- 1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில்,தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
- பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார்.அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார்.தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார்.
- அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார்.அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின.
- இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களைய வேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமய குருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.
- இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மை தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக் கொண்டார்.
- இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார்.அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது.அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
காசிப்பயணம்
- 1904இல் இராமசாமி, இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை[11] [1] தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்க விடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
- இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிராமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919–1925)
- இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்துப் பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார்.
- 1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வைக்கம் போராட்டம் (1924–1925)
- கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது.கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.கே.மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது.அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
- ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார்.இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாராதவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை.
- இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது.
- பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது
சுயமரியாதை இயக்கம்
- சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
- சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
- ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
- சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
- அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது.
- கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.
- இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது.
திராவிடர்கழகம் (1944 - முதல்)
திராவிடர் கழகம் உருவாதல்
- 1944 இல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது.
- திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன.
4.நாடார் இயக்கம்:
- நாடார் (Nadar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் பல இடங்களில காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.
- நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்களாக உள்ளனர்.ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.
- தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர்கள் கருதினர்
- நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு - செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.
- திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நம்பூதரி மட்டும் தங்க ஆபரணம் அணியலாம்.நாடார், நாயர், ஈழவர் போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது.ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாடார், ஈழவர் முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.
- இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815–1829) "பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது.அரசு ஆணையை எதிர்த்து நாடார்கள் போராடத் தொடங்கினர்.சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது.நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன.சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, சூலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார்.
5.ஸ்ரீநாராயணதர்மபரிபாலன இயக்கம்:
- நாராயணகுரு (ஆகஸ்ட் 28, 1855 - செப்டம்பர் 20, 1928), இந்து ஆன்மிகவாதியும். இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்.
- சன்னியாசியாகத் திரிந்த நாராயணன் தனது கொள்கைகளை விரும்பும் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார்.அதன் பிறகு நாராயண குருவாக உயர்ந்தார். 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தைத் தேர்வு செய்தார்.
- அந்த இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார்.இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.
- கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது.
- அதே சமயம் உயர் சாதியினர்களுக்கு இது எரிச்சலையும் இந்தக் கோவிலில் தங்கள் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை செய்யலாம்?என்கிற பிரச்சனையையும் எழுப்பினர். ஆனால் நாராயண குரு கடவுள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சொன்னதுடன் இந்தக் கோவிலில் சாதி-மத பேதமில்லாமல் அனைவரும் வணங்கும் தலம் என்று எழுதி வைக்கவும் செய்தார். (மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவருடைய படைப்பில் இதை ஈழுவ சிவன் கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.)
- 1904-ல் தனது சன்னியாசி வாழ்க்கையிலிருந்து புனிதமான வாழ்விற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.இதற்காக திருவனந்தபுரத்திற்கு வடக்கே 20 மைல் தொலைவிலிருந்த சிவகிரி எனுமிடத்தைத் தேர்வு செய்தார்.இங்கு அம்பாள் ஆலயம் அமைத்து அதில் தெய்வ ஆராதனைகளைத் தொடர்ந்தார்.இதன் பிறகு “வர்க்கலை” எனும் ஊரில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை அமைத்தார்.இங்கு சாதிப் பாகுபாடுகளின்றி கல்வித்தகுதிகள் எதுவுமின்றி பலரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இதில் ஏழைக் குழந்தைகள், அனாதையாக விடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவளித்தார்.
- நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையிலிருந்த நாயர் வகுப்பினர்கள் கூட கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார்.
- கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் இலங்கையில் கொழும்பிலும் சில முக்கியமான கோவில்களைக் கட்டி அங்கு சிவன், விஷ்ணு, தேவி போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார். இக்கோவில்களில் வழிபாட்டுப் பூஜைகளுக்காக இவரே சமஸ்கிருதம், மலையாளம் மொழியில் சில மந்திரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.இவைகளில் சுப்பிரமணிய சதகம், காளி நாடகம், தெய்வ தசகம், சாரதா தேவி துதி போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.
- ஈழவ மக்களிடையே இருந்து வந்த சிறு தெய்வ வழிபாடு எனும் குலதெய்வ வழிபாட்டு முறையை ஒழித்து பெரும் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். ஏனெனில், குல தெய்வ வழிபாட்டு முறையில் கள், சாராயம் போன்றவைகளையும், மிருகங்களைப் பலியிட்டு மாமிசங்களைப் படைத்து அதை அனைவரும் குடித்தும் சாப்பிட்டு மகிழ்வதாக கடைப்பிடிக்கப்பட்டது.
- இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இந்த வழிபாட்டில் குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது.மேலும் இந்நிலை சமுதாயத்தின் அவமானச் சின்னங்களாகவும் இருந்தன.
- இதை மாற்றும் நோக்கத்தில் குலதெய்வ ஒழிப்பு முறையை கொண்டு வருவதற்காக சிவன், விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்களை ஸ்ரீ நாராயண குரு பிரதிஷ்டை செய்து புதிய கோவில்களைக் கட்டினார் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- 1913-ல் ஆலுவா எனுமிடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது.இந்த ஆசிரமத்தின் முக்கிய கொள்கையாக "கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம்" என்கிற வாசகம் வலியுறுத்தப்பட்டது.
6. வைக்கம் சத்தியாக்கிரகம்:
- வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1925 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.
- கேரளா மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது.இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லை.
- இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி.கே.மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார்.அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார்.இதற்காக 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
- இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்த போது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது.இந்தப் போராட்டத்தை நடத்த தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை.அவர்கள், இப்போராட்டத்தினால் தங்களுக்குக் கிடைத்து வரும் சில சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சம் கொண்டனர்.இதனால் இப்போராட்டத்தில் நம்பிக்கையின்றியும் இருந்தார்கள்.
- டி.கே.மாதவன் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று இப்போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்தார். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் குஞ்ஞப்பி என்கிற புலையர் சாதியைச் சேர்ந்தவர், பாகுலேயன் என்கிற ஈழவர் சாதியைச் சேர்ந்தவர், கோவிந்தப் பணிக்கர் என்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவர் என மூன்று நபர்கள் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த இடம் வரை சென்றனர்.
- இந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து 6 மாத காலம் சாதாரணத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.
- கைதானவர்களுக்கு ஆதரவினைத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றன.இந்தப் போராட்டத்திற்கு டி.கே.மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார்.
- அதன் பிறகு டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனோன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர்.இந்தக் குற்றத்திற்காக இருவரையும் காவல்துறை கைது செய்ததுடன் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
- கைது செய்யப்பட்ட டி.கே.மாதவன் ஈழவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள மாநிலத்திலிருந்த ஈழவர் சாதியைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர்.இந்தப் போராட்டத்தில் இறங்கியவர்களுள் முக்கியமானவர் சகோதரர் அய்யப்பன்.நியாயமான இப்போராட்டத்திற்கு ஸ்ரீ நாராயண குரு ஆதரவளித்தார்.
- ஸ்ரீ நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக் காரர்கள் தங்குவதற்காக அளித்தார்.இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார்.இந்த மடத்தில்தான் மக்கள் ஒன்று கூடி போராட்டத்திற்குச் சென்றனர்.டி.கே. மாதவன் கைது செய்யப்பட்டதும், நியாயமான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீ நாராயண குரு தன் கைப்பட ஒரு கடிதமெழுதி அதை மக்களிடையே பரப்பிடச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு செய்தி கேரளா முழுவதும் சென்றது.கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
- இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர்.இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர். படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ,ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர்.
- நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டுவிடுமே என்று கவலைப்படுகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார்.பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார்.
- இப்போராட்டச் செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக வெளியானது.எனவே இந்தப் போராட்டம் குறித்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது.இதன் பிறகு காங்கிரசு இயக்கத் தலைவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கினர். இராஜகோபாலாச்சாரி, டாக்டர் வரதராஜூலு நாயுடு, அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம்.பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.
- கேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ.வே.ரா பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது.இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ.வே.ரா பெரியார் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
- இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.
- தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா பெரியார் விடுதலையானார்.விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார்.அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்கப்பட்டு திருவாங்கூர் மத்தியச் சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார்.இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார்.இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ.வே.ரா பெரியார் விடுவிக்கப்பட்டார்.விடுதலையான ஈ.வே.ரா பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.
- காங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது.இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனால் மகாத்மா காந்தி 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.
- அதன் பின்னரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கும், பேச்சுகளுக்கும் பின்னால் 1925 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது.அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்ட போராட்டம் இதுதான்.
7.மஹர் இயக்கம்:
- மஹர் (Mahar) எனப்படுவோர் இந்திய மாநிலமான மகாராஷ்ட்ரா பகுதியிலும் வாழும் ஒரு சாதியினர் ஆவார்.மஹர் இனத்தவர்களின் தாய்மொழி மராத்தி ஆகும்[3] .மஹர் சமூகத்தினர் சுமார் 16 இந்திய மாநிலங்களில் பட்டியல் இனத்தவர்களாக உள்ளனர்.இவர்கள் சத்திரபதி சிவாஜி மகாராஜ் படையில் படை வீரர்களாக இருந்துள்ளனர்[4] [5]. அம்பேத்கரின் வழிகாட்டுதலில் படி மஹர் சமூகத்தினர் பௌத்தம் சமயம் பின்பற்றினர் மகாராஷ்ட்ரா மக்கள் தொகையில் சுமார் 9 % மஹர் சமூகத்தினர் உள்ளனர்.
- காலனித்துவ காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ராஜ் ஆகியவற்றால் ஏராளமான மஹர்கள் இராணுவப் பணிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் . கோரேகான் போர் ( ஜனவரி 1, 1818) கோரேகான் தூண் என அழைக்கப்படும் ஒரு தூபியால் நினைவுகூரப்பட்டது.
- இது போர் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டது-மற்றும் 1851 இல் வழங்கப்பட்ட ஒரு பதக்கம்.இந்த தூண் சுதந்திரம் பெறும் வரை மஹர் படைப்பிரிவின் முகட்டில் இடம்பெற்றது. இந்தியா ; போரில் கொல்லப்பட்ட 22 மஹர்களின் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. வெற்றித் தூண் மஹர் வீரத்தின் மையப் புள்ளியாக விளங்குகிறது.
- மஹர் 1750 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு தங்கள் சேவையைத் தொடங்கினார்.பிரிட்டிஷ் பம்பாய் இராணுவத்தில் 20-25% மஹர். சிப்பாய்களாக அவர்களின் நடத்தை பல பிரிட்டிஷ் அதிகாரிகளால் பாராட்டப்பட்டது .மஹர்கள் பிரிட்டிஷ் மரைன் பட்டாலியனின் முக்கிய அங்கமாக இருந்தனர்.
- கிழக்கிந்திய கம்பெனி இராணுவத்தில் அவர்கள் இரண்டாம் ஆங்கிலோ-மராத்தா போர் , மூன்றாம் ஆங்கிலோ-மராத்தா போர் , இரண்டாம் ஆங்கிலோ-சீக்கியப் போர் மற்றும் இரண்டாம் ஆப்கான் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களில் கலந்து கொண்டனர்.
- 1857 கலகத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் தங்கள் இராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையை மாற்ற முடிவு செய்தனர், ஒரு அறிக்கை "பூர்வீகவாசிகள் சமூக ரீதியாக அதை பராமரிக்கும் வரை அதை (சாதி அமைப்பு) நடைமுறையில் புறக்கணிக்க முடியாது" என்று வலியுறுத்தியது. இது மஹர்கள், பிற தாழ்ந்த சாதிகள் மற்றும் சில நம்பகத்தன்மையற்ற பிராமண சாதிகளுக்கு எதிரான பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.
8.டாக்டர்.B.R.அம்பேத்கர்
- அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.[6] அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
- இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர்.மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
- 1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்.உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
- இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார்.பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார்.இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் இவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.
- அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார்.
- பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர்.இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார்.அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது.மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.
- இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும்.இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.
9.இந்துமத சீர்திருத்த இயக்கங்கள்:
- இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் என்பவை இந்து மதத்தில் காலத்தால் மறைந்து போன பழக்க வழக்கங்களை மீண்டும் அறிமுகம் செய்யவும், மீளுருவாக்கம் செய்யவும் தோற்றுவிக்கப்பெற்ற இயக்கங்களாகும்.
- இந்த இயக்கங்கள் பண்டைய இந்து மதத்தின் சமத்துவ வடிவங்களை மீண்டும் அறிமுகம் செய்தன.மக்களிடையே நிலவும் பாகுபாடுகளையும், சாதி அமைப்புகளையும் கலைந்து சமத்துவம் ஏற்படுத்த பாடுபட்டன.
- பிரம்ம சமாஜம்
- ஆரிய சமாஜம்
- புதிய அத்வைத்தம்
- புதிய வேதாந்தம்
- பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார்.இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.பிரம்ம சபை கி.பி.1828ல் நிறுவப்பட்டது.இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.19ஆம் நூற்றாண்டிலேயே பல பிரிவுகளாக பிரம்ம சமாஜம் பிரிந்திருந்தது.1861 ஆம் ஆண்டு நவீன் சந்திர ராய் தற்போதுள்ள பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தார்.
- மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (மராத்தி: जोतीबागोविंदरावफुले ஆங்கில மொழி: Mahatma Jyotirao Govindrao Phule) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர்.ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
- ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857 சிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி இந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்யசோதாக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.
- சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தில் கத்தியவார் மாகாணத்தில் “மூர்வி” எனும் இடத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் மூல் சங்கர் .சிறுவயதிலேயே துறவறம் பூண்டு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து, சமஸ்கிருதம் பயின்று அம்மொழியில் புலமை பெற்று விளங்கினார்.
10.முஸ்லீம் சீர்திருத்த இயக்கம்:
- முஸ்லீம் சீர்திருத்த இயக்கம் என்பது அமைதி ,மனித உரிமைகள் மற்றும் மதச் சார்பற்ற நிர்வாகத்தின் மதிப்புகளின் அடிப்படையில் இஸ்லாத்தில் சீர்திருத்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
- மசூதியின் கதவுகளில் சீர்திருத்தம் "வன்முறை ஜிஹாதைக் கண்டனம் செய்தல், இஸ்லாமிய புள்ளி விவரத்தை நிராகரித்தல் மற்றும்வன்முறை இஸ்லாமிய தீவிரவாதத்தின் சித்தாந்தத்தை எதிர்த்தல் ." [2] முஸ்லீம் சீர்திருத்த இயக்கத்தின் ஸ்தாபக கையொப்பமிட்டவர்கள் அஸ்ராநோமானி ,தாஹிர்அஸ்லம்கோரா , தவ்பிக்ஹமீத் , உசாமாசன்ஆரிஃப்ஹுமாயூன், ஃபரானாஸ்இஸ்பஹானி , சுஹ்திஜாசர், நாசர்காதர் , கோர்ட்னிலோனர்கன் , ஹசன்மஹ்மூத் , ரஹீல்ராசா , சோஹைல்ராசா , மற்றும் சல்மாசித்திக்.
- வன்முறை, சமூக அநீதி மற்றும் அரசியல் இஸ்லாம் ஆகியவற்றை ஆதரிக்கும் இஸ்லாத்தின் உண்மையான விளக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
- இஸ்லாத்தின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இஸ்லாத்தின் இந்த விளக்கம் வெளியே சென்றது தான் பிரச்சனை. கடந்த நான்கு தசாப்தங்களாக உலகம், இந்தோனேசியாவில் இருந்து இன்று வரை, கலிபோர்னியாவின் சான்பெர்னார்டினோவில் இருந்துதீவிரவாதக் குழுக்களை உருவாக்கிவருகிறது. நம்பிக்கையை திரும்பப்பெற வேண்டும்.அமைதி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற நிர்வாகத்தின் கொள்கைகளுடன் நாம் அதை திரும்பப் பெற வேண்டும்.
11.குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்:
- குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.இது 1891 ஜனவரியில் சட்ட முன் வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28 ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதுசார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது.இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினைந்து வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது.1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனேநிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார்.
- தற்போது பெண்ணின் திருமண வயது 21 எனவும், ஆணின் திருமண வயது 23 எனவும்மாற்றப்பட்டுள்ளது.
எதிர்ப்புகள்
- அன்றைய கால கட்டத்தில் பாலகங்காதரதிலகர் தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்துமதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட ஆங்கிலேயர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார்.அவருடைய எழுத்துகளுக்கு, அன்று இந்தியாவில் இருந்த இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது.இது போன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர்.
- மலபாரி, பார்சிமதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்ற திலகரின் கூற்றுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது. இச்சட்டத்துக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது.
- மீண்டும் 1913 இல் அதே மாதிரியான இன்னொரு சட்டமுன் வடிவை அரசு கொண்டு வந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற இந்து மதவாதிகள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர்.'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத்தண்டனை என்கிறது உங்கள் அரசு.பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்துமதம்.நாங்கள் என்ன செய்வது?’ என்றார் ஆச்சார்யா.அச்சட்ட முன் வடிவை, மெய்யறம் என்னும் தனது நூலில்வ. உ. சிதம்பரம்பிள்ளை வரவேற்று எழுத, அதே நூலின்முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்துஎழுதினார். இப்படிப் பல்வேறுஆதரவு, எதிர்ப்புகளுக்குப் பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது.
தமிழகத்தில் பெண்கள் எழுச்சி
- 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற கவிஞர்களும் பெண் விடுதலைக்காக எழுதினர். 1926 அதன்பிறகு இந்தியாவில் பெண்விடுதலை இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்தன.
- அதன்விளைவாக, பெண்கள் பலர் எழுச்சி பெற்றனர்.சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பினர்.டாக்டர் முத்துலட்சுமிரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர்.
சட்டம் நடைமுறையாதல்இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது.இம்முறை அச்சட்ட முன் வடிவை ' ராய்சாஹிப்ஹாபிலாஸ்சார்தா' என்னும் ஆங்கிலேயர் முன்மொழிந்தார்.அதனால் தான் அச்சட்டம் 'சார்தா சட்டம்' என்று அறியப்பட்டு, காலப் போக்கில் சாரதாச் சட்டம் ஆகி விட்டது.1929 செப்டம்பர் 28 - ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.1978 -ஆம்ஆண்டில், சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்தபட்ச திருமணவயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமணவயது 21 எனவும் மாற்றப்பட்டது.தற்போது அது பெண்ணின் திருமண வயது 21 எனவும், ஆணின் திருமண வயது 23 எனவும் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை.ஆதாரம்: இந்தியாவின் சட்டங்கள்
Presented By,
Priya
Tnpsc Student
Magme School Of Banking
No comments:
Post a Comment