வெப்பவியல் - 15 Mints Seminar Notes
வெப்பம்
1. வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றலாகும் அல்லது வெப்பம் என்பது பொருளின் மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்ஆகும்.
2. பொருட்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிப்பதால் பொருளின் வெப்பநிலை உயருகிறது.
3. பொருட்களை குளிர்விக்கும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைவதால் பொருளின் வெப்பநிலை குறைகிறது.
4. வெப்பத்தின்அலகு- ஜீல்
5. வெப்ப ஆற்றலின் அளவு ஒரு பொருளில் உள்ள துகள்களின் திசைவேகம்,எண்ணிக்கை துகள்களின் வகை மற்றும் அளவை பொறுத்தது.
6. வெப்பமும் வெப்பநிலையும் ஒன்றல்ல .அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகள்.
வெப்பநிலை
1. வெப்பநிலை என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் .
2. வெப்பநிலையின் அலகு-கெல்வின்.
3. ஒரு பொருளின் வெப்பநிலையை அளக்க உதவும் கருவி வெப்பநிலைமானி(தெர்மாமீட்டர்).
4. வெப்பநிலைமானி அல்லது தெர்மாமீட்டர் கருவிகளில் பயன்படும் திரவம் பாதரசம்
வெப்பத்தின் விளைவுகள்
1. காந்தத்தை வெப்பம் படுத்தும் போது அது காந்ததன்மையை இழக்கும்.
2. மின்கடத்திகளை வெப்பபடுத்தும் போது அதன் மின்தடை அதிகரிக்கும்.
விரிவடைதல்
- பொருட்கள் வெப்படுத்தும் போது விரிவடைகிறது.குளிர்விக்கும் போது சுருங்குகிறது.
- வெப்ப விரிவு திண்மங்களை விட திரவங்களில் அதிகமாகவும், திரவங்களை விட வாயுக்களில் அதிகமாக இருக்கிறது.
வெப்பவிரிவின் விளைவுகள்
- இரயில் தண்டவாளங்கள் இடைவெளி விட்டுஅமைக்கப்படுகின்றன.
- டயர்களில் உள்ள காற்றுக்குழாய்கள் கோடை காலத்தில் வெடிக்க காரணம் அதிலுள்ள காற்று வெப்பத்தினால் விரிவடைவதால்.
வெப்பம்பரவுதல்
· வெப்பக்கடத்தல்
1. திண்மங்களில் நடைப்பெற்றது.
2. பொருட்கள் ஒன்றையொன்று தொடும்போது மூலக்கூறுகளின் இரக்கமின்றி வெப்பம் பரவும் முறை.
· வெப்பச் சலனம்
1. பாய்மங்களில் ( திரவங்கள், வாயுக்கள்)நடைப்பெறும்.
2.மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தினால் வெப்பம் பரவுகிறது.
3. காற்று வீசுதல் வெப்பச் சலனத்தினால் நிகழ்கிறது.
· வெப்பக் கதிர்வீசல்
1. ஊடகம் எதுவுமின்றி வெப்பம் பரவும் முறை.
2. எ.கா. சூரியவெப்பம் புவியை வந்தடைதல்.
தன்வெப்பஏற்புதிறன்
· வெப்பத்தை வெளிவிடும் அல்லது உட்கவரும் பண்பு.
மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
1. பொருளின்நிறை
2. பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு
3. பொருளின் தன்மை
· SI அலகு JKg^1K^-1
· C=Q/m×∆T
வெப்ப ஏற்புதிறன்
· ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு
· SI அலகு JK^-1
· C^1= Q/∆T
தனிச் சுழிவெப்பநிலை
ஒரு பொருளைக் குளிர்விக்க்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை
0K=-273°C,. K= C+273
· தனிச்சுழி வெப்பநிலையில் மூலக்கூறுகளின் இயக்கம் முழுவதுமாக நின்று விடும்.
· இவ்வெப்பநிலையில் பொருளின் வெப்ப ஆற்றல் சுழி.
வாயு விதிகள்
வெப்பநிலை-T,அழுத்தம்-P,கன அளவு-V
பாயில் விதி
மாறாத வெப்பநிலையில் குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கன அளவிற்கு எதிர்தகவில் அமையும்.
P= மாறிலி/V
PV= மாறிலி
சார்லஸ் விதி
மாறாத அழுத்தத்தில் குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கு நேர்தகவில் அமையும்.
V= T×மாறிலி
V/T= மாறிலி
அழுத்தவிதி
மாறாதகன அளவில் குறிப்பிட்டநிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் வெப்பநிலைக்கு நேர்தகவில் அமையும்
P=T×மாறிலி
P/T=மாறிலி
வாயுச் சமன்பாடு
PV=RT
R= வாயு மாறிலி
R=8.31 j/mol/K
வாயுவிலுள்ள மோதல்களின் எண்ணிக்கை n எனில் வாயுச்சமன்பாடு
PV=nRT
ஸ்டீபன்விதி
சூரிய வெப்பநிலையை அளக்க பயன்படும் விதி
E = Sigma T^4,. Sigma- ஸ்டீபன் மாறிலி
உள்ளுறை வெப்பம்
· நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்-536 cal/g
· பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்பம்– 80 cal/g
Presented By,
Udhaya
Tnpsc Student
Magme School Of Banking
No comments:
Post a Comment