LATEST

Friday, December 30, 2022

நூலகங்களின் நண்பர்கள் திட்டம் 2022

 நூலகங்களின் நண்பர்கள் திட்டம் 2022


எப்பொழுது: டிசம்பர் 2022

எங்கு: திண்டுக்கல்

யாரால்: அன்பில் மகேஷ்

குறிப்புகள்:

  • தமிழக அரசானது, வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் ‘நூலகங்களின் நண்பர்கள்’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்' மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் அன்பில் மகேஷ் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நூலகங்களுக்குச் செல்ல முடியாத நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் படி, நூலகத்திற்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள் உள்ளிட்டோர் இந்த முன்னெடுப்பின் மூலம் பயனடைவார்கள்.
  • இதற்காக தன்னார்வலர்களின் சேவைகளும் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ஒரு அறிவு சார்ந்தச் சமூகத்தை மேம்படுத்தச் செய்வதே இத்தகைய முன்னெடுப்பின் ஒரு நோக்கமாகும்.
  • முதல் கட்டமாக இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேர கிளை நூலகங்கள், 1463 கிளை நூலகங்கள். 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது.


உபயம் : தி இந்து

No comments:

Post a Comment