PMGKAY மற்றும் NFSA திட்ட இணைப்பு
- மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவை (PMGKAY) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் (NFSA) இணைக்க முடிவு செய்துள்ளது.
- நாடு தழுவிய முழு ஊரடங்கு மூலம் வாழ்வாதாரம் முடங்கிய ஏழைகளுக்கு உதவிட PMGKAY திட்டம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது.
- NFSA சட்டத்தின் கீழ், ஒவ்வொரு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பமும், மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு.
- மற்ற அனைத்து வகை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment