மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 28 Test
இந்திய இயற்கையமைப்பு, நிலத்தோற்றம்
1. இந்தியாவின் இயற்கை அமைப்பை __________ பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
A. 4 B. 5 C. 6 D. 7
2. இந்திய நிலப்பரப்பு புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்
A. 1.2% B. 17% C. 4% D. 2.4%
3. ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்காக குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சுமார் __________ கி.மீ வரை நீண்டுள்ளது
A. 500 B. 600 C. 700 D. 800
4. அட்ச தீர்க்கப் பரவல்படி இந்தியா முழுமையும் __________ அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
A. தென்கிழக்கு B. தென்மேற்கு C. வடமேற்கு D. வடகிழக்கு
5. வடபெரும் சமவெளி ____________ சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது.
A. 5 லட்சம் B. 6 லட்சம் C. 7 லட்சம் D. 8 லட்சம்
6. பொருந்தாதை கண்டறிக?
A. மக்காலு B. தௌளகிரி C. குருலா மருதத்தா D. காமெட்
7. பிரம்மபுத்ரா ஆற்றுத் தொகுப்பின் மொத்த வடிகாலமைப்பில் இந்தியாவில் பாயும் பரப்பு
A. 5,80,000 ச.கி.மீ B. 1,94,413 ச.கி.மீ C. 3,84,213 ச.கி.மீ D. 2, 23,213 ச.கி.மீ
8. பாபர் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A. பாபர் சமவெளி இயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆனது.
B. படிவுகளில் நுண் துளைகள் அதிகமாக உள்ளதால், இதன் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன.
C. இச்சமவெளி சிவாலிக் குன்றுகளின் தென்புறம் மேற்கிலிருந்து கிழக்காக (ஜம்மு முதல் அஸ்ஸாம் வரை) அமைந்துள்ளது.
D. பாபர் சமவெளியின் அகலம் கிழக்கில் அகன்றும் மேற்கில் குறுகியும் 8 கி.மீ. முதல் 15 கி.மீ வரை உள்ளது.
9. நர்மதை நதி _______ கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
A. 17 B. 24 C. 27 D. 29
10. திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகும் ஆறு
A. யமுனை B. கங்கை C. சோன் D. பிரம்மபுத்ரா
11. திபெத்தியன் இமயமலை என அழைக்கப்படுபவை
A. ட்ரான்ஸ் இமயமலை B. மத்திய இமயமலை
C. கிழக்கு இமயமலை D. பூர்வாஞ்சல் குன்றுகள்
12. தவறானதை கண்டறிக?
A. கோதாவரி நதி – மகாராஷ்டிரா B. கிருஷ்ணா நதி - மகாராஷ்டிரா
C. காவிரி ஆறு – தமிழ்நாடு D. நர்மதை ஆறு - மத்திய பிரதேசம்
13. தராய் மண்டலம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வன விலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
B. பாபர் பகுதிக்கு வடக்கு பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது.
C. பெரும்பாலான மாநிலங்களில் தராய் காடுகள் வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
D. தராய் மண்டலம் கிழக்குப் பகுதியிலுள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது
14. ட்ரான்ஸ் இமயமலைகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் அமைந்துள்ளது?
A. நேபாளம், சிக்கிம் B. ஜம்மு காஷ்மீர், நேபாளம்
C. நேபாளம், திபெத் D. ஜம்மு காஷ்மீர், திபெத்
15. சிவாலிக் மலைத் தொடர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு
A. சிவாலிக் மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ளது.
B. சிவாலிக் மலைத்தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.
C. இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கி.மீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.
D. இது தொடர்ச்சியான மலைத் தொடர்களாகும்.
16. சாம்பார் ஏரி (அ) புஷ்கர் ஏரி __________சமவெளியில் அமைந்துள்ளது
A. ராஜஸ்தான் சமவெளி B. பஞ்சாப் - ஹரியானா சமவெளி
C. கங்கைச் சமவெளி D. பிரம்மபுத்திரா சமவெளி
17. கீழ்க்கண்ட எந்த ஆறு மாளவப் பீடபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்காதது?
A. சம்பல் B. மகாநதி C. கென் D. பீட்வா
18. காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில் உற்பத்தியாகி சுமார் _________ நீளத்துக்கு பாய்கிறது
A. 900 கி.மீ B. 850 கி.மீ C. 700 கி.மீ D. 800 கி.மீ
19. கங்கைச் சமவெளி __________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டது.
A. 2.75 லட்சம் B. 3.75 லட்சம் C. 4.25 லட்சம் D. 4.50 லட்சம்
20. இலட்சத்தீவுக் கூட்டங்களை _________ கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.
A. 5° B. 6° C. 7° D. 8°
21. தக்காண பீடபூமி ________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.
A. 5 லட்சம் B. 6 லட்சம் C. 7 லட்சம் D. 8 லட்சம்
22. சிவாலிக் மலைத்தொடரின் மேற்குப் பகுதி __________ என அழைக்கப்படுகிறது.
A. டூன்கள் B. டூயர்ஸ் C. பொமிடிலா D. ஜெலிப்லா
23. சிந்து நதி திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலைத்தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் ____________ உயரத்தில் உற்பத்தியாகிறது.
A. 2850 மீ B. 4550 மீ C. 4925 மீ D. 5150 மீ
24. கீழ்க்கண்டவற்றுள் மேற்கு இமயமலைகளில் காணப்படும் மலைத்தொடர்களில் அல்லாதது?
A. சாஸ்கர் B. கைலாஸ் C. கங்கோத்திரி D. காரகோரம்
25. கிழக்கில் இருந்து மேற்காக வரிசைப்படுத்துக?
1.நம்சபர்வதம்
2. கஞ்சன்ஜங்கா
3. காமெட்
4. நங்கபர்வதம்
A. 1 2 3 4 B. 2 1 3 4 C. 4 1 3 2 D. 4 2 3 1
26. கங்கையாற்றின் தொகுப்பு ____________ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பை கொண்டதாகும்.
A. 6,81,204 ச.கி.மீ B. 8,61,404 ச.கி.மீ C. 7,81,304 ச.கி.மீ D. 9,81,204 ச.கி.மீ
27. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் இமயமலை __________ சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
A. 5 B. 7 C. 8 D. 9
28. இமாலயா என்ற சொல் __________மொழியில் "பனி உறைவிடம்” என அழைக்கப்படுகிறது
A. கிரேக்க B. தமிழ் C. சமஸ்கிருதம் D. ஆங்கிலம்
29. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகை __________ வழியாக செல்கிறது.
A. ஆக்ரா B. அலிகார் C. மிர்சாபூர் D. அமேதி
30. இந்தியா, மேற்கே குஜராத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை ________ கி.மீ நீளத்தை கொண்டுள்ளது.
A. 2623 கி.மீ B. 2393 கி.மீ C. 2933 கி.மீ D. 2339 கி.மீ
31. சிந்து நதி பாயும் மொத்த வடிகாலமைப்பு பரப்பில் __________ இந்தியாவிலுள்ளது.
A. 11,65,500 B. 6,55,891 C. 3,21,289 D. 2,31,829
32. குஜராத் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் உள்ள தல நேர வேறுபாடு
A. 1 மணி 64 நிமிடம் 6 வினாடிகள் B. 1 மணி 57 நிமிடம் 12 வினாடிகள்
C. 1 மணி 47 நிமிடம் 24 வினாடிகள் D. 1 மணி 26 வினாடிகள்
33. கிழக்கு கடற்கரைச் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
B. இச்சமவெளியானது கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் படிய வைக்கப்பட்ட வண்டல் படிவுகளால் உருவானது.
C. மகாநதிக்கும் கோதாவரிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கோதாவரி மற்றும் காவேரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழ மண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
D. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மிக பிரபலமான உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாகும்.
34. கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் எம்மலையில் காணப்படுகின்றன?
A. இமாத்ரி B. இமாச்சல் C. சிவாலிக் D. ட்ரான்ஸ் இமயமலை
35. எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா ஆகியவை எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன?
A. இமாத்ரி B. இமாச்சல் C. சிவாலிக் D. ட்ரான்ஸ் இமயமலை
36. இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் ஏறத்தாழ __________ சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது.
A. 1,00,000 B. 1,50,000 C. 1,75,000 D. 2,00,000
37. இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்
A. இமயமலை B. விந்திய சாத்பூரா மலைகள்
C. ஆரவல்லி மலைத்தொடர் D. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
38. இந்தியாவின் அமைவிட அடிப்படையில் வடிகாலமைப்பை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
A. 2 B. 3 C. 4 D. 5
39. இந்திய நில எல்லையின் அளவு
A. 12500 கி.மீ B. 12500 ச.கி.மீ C. 15200 கி.மீ D. 15200 ச.கி.மீ
40. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரமான குருசிகாரின் உயரம்
A. 1533 மீ B. 1722 மீ C. 1799 மீ D. 1822 மீ
41. இமயமலைகள் மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை __________ கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது
A. 1600 கி.மீ B. 1800 கி.மீ C. 2100 கி.மீ D. 2500 கி.மீ
42. இந்தியாவின் நிலப்பரப்பு _________ ச.கி.மீ ஆகும்.
A. 23, 87,263 B. 32,87,263 C. 32,26,873 D. 23,26,873
43. இந்தியா அதிகபட்சமான நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு
A. சீனா B. பாகிஸ்தான் C. ஆப்கானிஸ்தான் D. வங்காள தேசம்
44. இந்திய கடற்கரைச் சமவெளிகளை எத்தனைப் பிரிவுகளாக பிரிக்கலாம்?
A. 2 B. 3 C. 4 D. 5
45. அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தை __________ பிரிவுகளாக பிரிக்கலாம்.
A. 2 B. 3 C. 4 D. 5
46. மேற்கு நோக்கிப் பாயும் தீபகற்ப ஆறுகளில் மிக நீளமான ஆறு?
A. கிருஷ்ணா நதி B. கோதாவரி நதி C. நர்மதை ஆறு D. தபதி ஆறு
47. மகாநதி சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் __________ கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது.
A. 581 B. 624 C. 751 D. 851
48. புவியானது தன் அச்சில் சுழன்று, 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்
A. 2 நிமிடம் B. 3 நிமிடம் C. 4 நிமிடம் D. 5 நிமிடம்
49. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி __________ல் அமைந்துள்ளது.
A. மேற்கு வங்கம் B. அஸ்ஸாம் C. வங்காளம் D. ஒடிசா
50. பஞ்சாப் - ஹரியானா சமவெளி ஏறத்தாழ __________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டது.
A. 1.25 லட்சம் B. 1.50 லட்சம் C. 1.75 லட்சம் D. 2.70 லட்சம்
51. ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி _____________ மாநிலத்தில் சரஸ்வதி ஆற்றில் உருவாகிறது
A. கர்நாடகம் B. தமிழ்நாடு C. கேரளா D. ஆந்திரா
52. வங்கதேசத்தில், கங்கை _________ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
A. பவானி B. யமுனா C. பத்மா D. கோமதி
53. முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
A. காயல் B. வடிகால் பரப்பு C. வடிகால் கொப்பரை D. விவசாய வடிகால்
54. பெரிய இந்திய பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனத்தின் பரப்பளவு
A. 2 இலட்சம் ச.கி.மீ B. 2.5 இலட்சம் ச.கி.மீ
C. 3 இலட்சம் ச.கி.மீ D. 4 இலட்சம் ச.கி.மீ
55. பிரம்மபுத்ரா ஆறு வங்காளதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்த போது _________ எனவும் அழைக்கப்படுகிறது.
A. மேக்னா B. மாக்மா C. திஸ்டா D. மனாஸ்
56. பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய்
A. கைபர் கணவாய் B. போலன் கணவாய்
C. ஜொஷிலா கணவாய் D. நாதுலா கணவாய்
57. நர்மதை ஆறு ________ ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
A. 87969 B. 98796 C. 87975 D. 78659
58. தார்ப் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் _________ பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
A. ½ B. 2/3 C. 2/5 D. 1/3
59. தவறானதை கண்டறிக?
A. சிந்துநதி - 2850 km B. கங்கை நதி - 2525km
C. பிரம்மபுத்திரா நதி - 2800km D. மகாநதி - 851km
60. தபதி நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து ___________ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது
A. 752 மீ B. 724 மீ C. 765 மீ D. 784 மீ
Answers for vyuha test please
ReplyDelete