LATEST

Monday, December 9, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு - 01.அரியலூர்

  
அரியலூர் வரலாறு

உருவாக்கம் :

    அரியலூர் மாவட்டம் ஜனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

    ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
    

எல்லைகள் :

    வடக்கில் கடலூர் மாவட்டத்தையும், கிழக்கில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களையும், தெற்கில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களையும், மேற்கில் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களையும் பெரம்பலூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பொது விபரங்கள் :

தலைநகரம் :அரியலூர்

பரப்பு : 1949.31 ச.கி.மீ

மக்கள் தொகை :7,54,894 (2011)

எழுத்தறிவு :480,604 (71.34%)

ஆண்கள் :374,703

பெண்கள் :380,191

மக்கள் நெருக்கம் :1 ச.கீ.மீ - க்கு 389

வருவாய் நிர்வாகம் :

கோட்டங்கள்-3 (அரியலூர், உடையார்பாளையம், செந்துறை); வருவாய் கிராமங்கள்-195.


உள்ளாட்சி நிறுவனங்கள் : நகராட்சி-2 ; ஊராட்சி ஒன்றியம்-6 (ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், திருமானூர், த.பழூர், அரியலூர், செந்துறை); பேரூராட்சி-2, ஊராட்சிகள் : 201.


சட்டசபைத் தொகுதிகள் : 3 (அரியலூர், ஜெங்கொண்டம், ஆண்டிமடம்).


பாராளுமன்றத் தொகுதி : 1 (சிதம்பரம், பெரம்பலூர் பகுதியாக)


வழிபாட்டுத் தலங்கள் : கங்கை கொண்ட சோழபுரம் :

    முதலாம் இராஜேந்திர சோழன் தமிழகத்தின் தலைச்சிறந்த மன்னனாக 11 ஆம் நூற்றாண்டில் விளங்கினான்.
    இவன் கடல் கடந்து கடாரத்தையும், மற்றும் பல தீவுகளையும் வெற்றி கொண்டான்.
    இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை இராஜேந்திர சோழனின் வெற்றிக் கொடி பறந்தது.
    இதனால் இவனுக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் வந்தது.
    இம்மாபெரும் வெற்றிக்கு எடுத்துக் காட்டாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்நகரை நிர்மாணித்து, இங்கே அழியாத கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான்.
    பிறகு இராஜேந்திர சோழன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்.
    அதன் பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராய்க் கொண்டிருந்தனர்.

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் :

    இவ்வைணவக் கோயில் விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் உள்ள அரியலூருக்குக் கிழக்கில் 3 மைல் தூரத்திலிருக்கும் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ளது.
    இதைக் கலியபெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள்.
    சுமார் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில்கட்டப்பட்ட இக்கோயில் தென்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும்.
    இக்கோயிலுக்கு நான்கு வாயிற்படிகள் அமைந்துள்ளன.
    16 1/2 அடி உயரத்தில் சுற்றுமதில் சுவரும் எழுப்பப் பட்டுள்ளது.
    தலவிருட்சம் மகாலிங்க மரமாகும்.
    கிழக்கு கோபுர வாசலின் கீழ்பால், கருங்கல்லால் ஆன நாற்கால் மண்டபம் உள்ளது.

தொழில் :

டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை :

    டால்மியாபுரத்தில் சிமெண்டு தொழிற்சாலை நடைபெறுகிறது.
    இத்தொழிலகத்திற்காக டால்மியாபுரம் என்னும் இரயில்நிலையம் அமைந்தது.
    கல்லக்குடி பெயர் மாற்றத்தின் போது மக்கள் மத்தியில் புகழ் பெற்றது.
    ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைகள் :

அரியலூருக்குக் கிழக்கில் மணலேரி என்னும் ஊருக்கு அருகில் அரசினர் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும், அரியலூருக்குத் தெற்கில் தனியார் துறையினரால் நடத்தப்படும் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகின்றன.

அரியலூர் வரலாறு தொகுப்பு:

அரியலூர் மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் 2 இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்குக் கொண்டு செல்கிறது.

No comments:

Post a Comment