LATEST

Thursday, December 19, 2019

மொழித்திறன் பயிற்சி - ல, ழ, ள பொருள் வேறுபாடு 01


  • அலகு - பறவையின் மூக்குஅளவுஆண்பனை
  • அழகு - வனப்பு
  • அளகு - சேவல்பெண்கூகை
  • அலகம் - திப்பிலி
  • அளகம் - வெள்ளெருக்குநீர்
  • அலகை - கற்றாழைபேய்
  • அளகை - அளகாபுரிபெண்
  • அழம் - பிணம்
  • அலம் - கலப்பை
  • அளம் - உப்பு
  • அலத்தல் - அலட்டல்அலைதல்
  • அளத்தல் - அளவிடுதல்மதித்தல்
  • அலவன் - ஆண்நண்டு
  • அளவன் - அளப்பவன்உப்பு எடுப்போன்
  • அழி - அழித்துவிடு
  • அலி - பேடிகாகம்விருச்சிகராசி
  • அளி - கருணைகள்வண்டு
  • அல்லல் - துன்பம்
  • அள்ளல் - வாரி எடுத்தல்
  • அழை - கூப்பிடு
  • அலை - கடல்நீரலைஅலைதல்
  • அளை - தயிர்நண்டுபுற்று
  • அவல் - பள்ளம்உணவுப் பொருள்
  • அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
  • அல் - இரவு
  • அள் - அள்ளி எடுநெருக்கம்
  • உலவு - நட
  • உளவு - ஒற்று
  • உழவு - கலப்பையால் உழுதல்
  • உழி - இடம்பொழுது
  • உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
  • உலு - தானியப் பதர்
  • உழு - நிலத்தை உழு
  • உளு - உளுத்துப் போதல்
  • உலை - கொல்லன் உலைநீருலை
  • உழை - பாடுபடுபக்கம்கலைமான்
  • உளை - பிடரி மயிர்சேறுதலை
  • உழுவை - புலி
  • உளுவை - மீன்வகை
  • எல் - கல்மாலைசூரியன்
  • எள் - எண்ணெய்வித்துநிந்தை
  • எலு - கரடி
  • எழு - எழுந்திருதூண்
  • ஒலி - சப்தம்நாதம்காற்று
  • ஒழி - அழிதவிர்கொல்துற
  • ஒளி - வெளிச்சம்மறை(த்துவை)
  • ஒல் - ஒலிக்குறிப்பு
  • ஒள் - அழகுஉண்மைஅறிவுஒளி
  • கலகம் - போர்அமளிஇரைச்சல்
  • கழகம் - சங்கம்கூட்டமைப்பு
  • கழங்கம் - கழங்குவிளையாட்டுக் கருவி
  • களங்கம் - குற்றம்அழுக்கு
  • கலி - கலியுகம்பாவகைசனி
  • கழி - கோல்மிகுதிஉப்பளம்
  • களி - மகிழ்வுஇன்பம்
  • கலை - ஆண்மான்சந்திரன்கல்வி
  • கழை - மூங்கில்கரும்புபுனர்பூசம்
  • களை - அழகுபுல் பூண்டுஅயர்வு
  • கல் - மலைபாறைசிறுகல்
  • கள் - மதுதேன்
  • கலம் - கப்பல்பாத்திரம்
  • களம் - இடம்போர்க்களம்இருள்
  • காலி - ஒன்றுமில்லாததுவெற்றிடம்
  • காளி - துர்க்கைமாயை
  • காழி - சீர்காழி (ஊர்)
  • காலை - பொழுதுவிடியற்பொழுது
  • காளை - காளைமாடுஇளைஞன்
  • காலம் - பொழுதுநேரம்
  • காளம் - எட்டிமரம்சூலம்
  • கிலி - அச்சம்பயம்
  • கிழி - கிழித்துவிடுமுடிப்பு (பொன்)
  • கிளி - பறவைவெட்டுக்கிளி
  • கிழவி - முதியவள்மூதாட்டி
  • கிளவி - சொல்மொழி
  • குலி - மனைவி
  • குழி - பள்ளம்பாத்திபன்னீரடிச் சதுரம்வயிறு
  • குளி -நீராடு
  • குலம் -ஜாதியின் உட்பிரிவுஇனம்குடி
  • குளம் -நீர்நிலைகண்மாய்ஏரி
  • குலை - கொத்துமனம் தடுமாறுதல்
  • குழை - குண்டலம்குழைந்துபோதல்
  • குலவி - மகிழ்ந்திருத்தல்
  • குழவி - குழந்தைஇளமையானைக் கன்று அம்மிக்கல்
  • குளவி - ஒரு வண்டுகாட்டுமல்லி
  • குலிகம் -சிவப்புஇலுப்பை
  • குளிகம் -மருந்துமாத்திரை
  • குவலை -துளசிகஞ்சா
  • குவளை - குவளை மலர்சொம்புஒரு பேரெண்
  • கூலம் - தானியம்கடைத்தெரு
  • கூளம் - குப்பை
  • கூலி - ஊதியம்
  • கூளி(யார்) - பேய்காளைவீரர்படைவீரர்வணங்கி நிற்பவர்ஏவலாளர்

No comments:

Post a Comment