LATEST

Saturday, December 7, 2019

TNPSC புவியியல் பேரண்டம் 01 சூரியக்குடும்பம்

Magme Guru TNPSC UPSC Geography

பேரண்டம் (Universe)
 
•   பல கோடிக்கணக்கான விண் மீன்களின் தொகுதியே அண்டம் எனப்படும்.
•பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதியே பேரண்டமாகும்.
• இத்தகைய பேரண்டத்தில் காணப்படு;ம் பல்வேறு அண்டங்களில் ஒன்று பால்வெளி அண்டம் ஆகும்.
• இதனை நமது முன்னோர் பால்வெளி (Milky Way) எனவும், ‘ஆகாய கங்கை| எனவும் அழைத்தனர்.
• புவியியல் என்ற பதம் “Geo” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
• புவியியலின் தந்தை “எராஸ்டோதீனடூ (Eratosthenes)” ஆவார்.

• நாம் வாழும் இப்புவிப்பரப்பு உயிர்க்கோளம் (Biosphere) எனப்படும்.
• இப்புவியில் முதல் முதலில் தோன்றிய உயிரினம் நீலப்பசும் பாசி (Blue green algae) ஆகும்.
• முதல் முதலில் உயிரினம் தோன்றிய இடம் கடல் ஆகும்.


சூரியக்குடும்பம் (Solar System)

• பேரண்டத்தில் எண்ணற்ற நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. அவ்வாறு காணப்படும் ஒரு நட்சத்திரத் தொகுதியான பால்வழி அண்டத்தில் நமது சூரியன் உள்ளது.

• சூரியக் குடும்பம் என்பது சூரியன், எட்டுக் கோள்கள், கோள்களைச் சுற்றி வரும் சந்திரன் போன்ற துணைக் கோள்கள், குள்ளக்கோள்கள், இலட்சக்கணக்கான குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியன அனைத்தும் அடங்கியதாகும்.
• கோள்கள் அனைத்தும் சூரியனிடமிருந்து மட்டுமே ஒளியைப் பெற்று பிரதிபளிக்கின்றன.
• கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு வலம் வருகின்றன என முதலில் தெரிவித்தவர் கோபர் நிகஸ். (Heliocentric View).
• பூமியை மையமாகக் கொண்டே கோள்கள் வலம் வருகின்றன என்ற கருத்தை வெளியிட்டவர் தாலமி. (Geocentric View).
• பூமிக்கும், நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தொலைவை கணக்கிட ஒளியாண்டு என்ற அலகு பயன்படுகிறது.
• ஒரு ஒளியாண்டு என்பது 9.46 x 1012KM ஆகும்.
• பூமி, சூரியன் இடையே உள்ள தொலைவு வானியல் அலகு (astronomical unit) எனப்படும் அலகால் அளக்கப்படுகிறது.
• ஒரு வானியல் அலகு என்பது 1.496 x 108KM ஆகும்.
• நமது சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும்.
• பூமிக்கு அருகில் உள்ள மற்றொரு நட்சத்திரம் பிராக்சிமா சென்ட்டாரி ஆகும். இது 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
• சூரியன், நிலா உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றன. காரணம் பூமியின் சுழற்சி மேற்கிலிருந்து கிழக்காக உள்ளது. சூரியன்
• சூரியன் குடும்பத்தின் நாயகன் சூரியன் தான்.

No comments:

Post a Comment