சூரியன்
• சூரியன் குடும்பத்தின் நாயகன் சூரியன் தான். சூரியன், சூரியக் குடும்பத்தின் மையத்தில் உள்ளது. இது மிகமிகப் பெரிய, மிக வெப்பமான வாயுப்பந்து. இதன் ஈர்ப்பு சக்திதான் சூரியக் குடும்பத்தைப் பிணைத்து வைத்துள்ளது.
• சூரியக் குடும்பத்தில் தானே ஒளிரும் ஒரே வான்பொருள் சூரியன்தான்.
• எல்லாக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சற்றேக் குறைய ஒரே சமதளத்தில் சுற்றி வருகின்றன. கோள்கள் சுற்றி வரும் பாதையைச் சுற்றுப்பாதை என அழைக்கிறோம்.
• பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்.
• பூமியிலிருந்து சுமார் 150 மில்லியன் கி.மீ தொலைவு (அ) 150 கோடி கி.மீ
• பூமியை விட 300, 000 மடங்கு பெரியது.
• கனஅளவில் பூமியை விட 1.3 மில்லியன் மடங்கு பெரியது.
• சூரியனின் அதிக வெப்பத்திற்குக் காரணம் அணுக்கரு இணைவு ஆகும்.
• சூரியனில் ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாறுவதால் அதிக வெப்பம் உண்டாகிறது.
• சூரியனை வாயுக்களின் கலவை எனலாம்.
• 92% ஹைட்ரஜன், 7.8% ஹீலியம், 0.2%; இதர வாயுக்கள்
• ஒரு வினாடிக்கு 700 மில்லியன் டன் ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாறுகிறது.
• வானவியல் அறிஞர்கள் சூரியனை “நெருப்பு பந்து” (Fire Ball) என வர்ணிக்கின்றனர்.
• மையப்பகுதி வெப்பநிலை 15-20 மில்லியன் டிகிரி செல்சியஸ்
• வெளிப்புற வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
• சூரியன் 10000 மில்லியன் ஆண்டுகள் வரை இயங்கக்கூடிய அளவு எரிபொருள் கொண்டிருந்தது.
• தற்சமயம் சரிபாதி வரை பயன்படுத்தப்பட்டுவிட்டது. 5000 மில்லியன் ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே உள்ளதால் “நடுவயது நட்சத்திரம்” (Middle age star) எனப்படுகிறது.
• சூரியனின் ஒளிரும் பகுதி போட்டோஸ்பியர் (Photosphere) எனப்படும்.
• போட்டோஸ்பியரின் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் ஆகும்.
• போட்டோஸ்பியரைச் சுற்றியுள்ள பகுதி குரோமோஸ்பியர் எனப்படும்.
• சூரியனின் வெளிப்பகுதி கரோனா (Corona) எனப்படும்.
• கரோனாவின் வெப்பநிலை 1 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.
• சூரியனின் குளிர்ந்த பகுதிகள் சூரிய புள்ளிகள் (Sun Spots) எனப்படும்.
• இவை 11 ஆண்டுக்கொருமுறை தோன்றும்.
• இந்த சூரியப் புள்ளியின் “இண்ட மையப்பகுதி” வெப்பநிலை 4000 டிகிரி செல்சியஸ் ஆகும்.
• சூரியன் ஆற்றலை மின்காந்த அலைகள் மூலம் வெளியிடுகிறது.
• சூரியனிலிருந்து பெறப்படும் ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சின் மூலம் பெறப்படுகிறது.
• சூரியன் கதிர்வீச்சை x-கதிர் மற்றும் புற ஊதாக்கதிர் வடிவில் வெளியிடுகிறது.
• சூரியன் தனது அச்சில் தன்னைத் தானே ஒருமுறை சசுழல 25 நாட்கள் அல்லது 25-30 நாட்கள் ஆகும்.
• அதே வேளையில் பால்வழி மண்டலத்தையும் 225 மில்லியன் வருடங்களில் வலம் வருகிறது.
• சூரியனின் சுழற்சி வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டராகும்.
கோள்கள்
- சூரியக் குடும்பத்தின் எட்டு கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்.
- சூரியக் குடும்பத்தின் எட்டுக்கோள்களையும் திடக்கோள்கள், வாயுக்கோள்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்காலாம்.
- புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய நான்கும் திடக்கோள்கள்.
- வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் வாயுக்கோள்கள் எனப்படுகின்றன.
- வெள்ளி மற்றும் யுரேனஸ் தவிர அனைத்து கோள்களும் சூரியனை தங்களது அட்சில் மேற்கில் இருந்து கிழக்காக சுற்றுகிறது.
- கோள்களில் மிக வேகமாகச் சுழல்வது வியாழன். மிக மெதுவாகச் சுழல்வது வெள்ளி.
- கோள்களில் மிக பெரியது வியாழன், மிகச் சிறியது புதன், பிரகாசமானது வெள்ளி.
- யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களைத் தொலைநோக்கியால் மட்டுமே காண இயலும்.
- வெள்ளி, யுரேனஸ் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காக வலம் வருகின்றன.
- யுரேனஸ்; பம்பரம் போன்று ஒரே அச்சில் சுழலாமல் உருண்டு கொண்டே சுழல்கிறது.
- வெள்ளிக் கோள், காலையில் சூரிய உதயத்திற்குச் சற்று முன்பு புலப்படும்போது விடி வெள்ளி| என அழைக்கின்றனர். அதுபோலவே அந்திவேளையில் மேற்கு வானத்தில் பேரொளியுடன் இக்கோள் காட்சியளிக்கும். அப்பொழுது இக்கோள் மாலை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
- சனியின் வளையம்தான் எடுப்பானது என்றாலும் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளது.
- கோள்கள் உள்கோள்கள் மற்றும் வெளிக்கோள்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
உள்கோள்கள்
- புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன் உள்கோள்கள் எனப்படும். இவற்றின் இயல்பு அளவில் சிறியது. பாறைகளால் ஆனது. அடர்த்தி மிகுந்தது. உள்கோள்களுக்கு மற்றோரு பெயர் பாறைக்கோள்கள்- Terrestrial planets.
- சூரியனுக்கு அருகில் உள்ளதால் உள்கோள்கள் (Inferior planets) எனப்படுகின்றன.
No comments:
Post a Comment