ஐரோப்பிய ஒன்றியம்
ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 1
1. ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கங்கள்.அ) ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் இயற்றும் அமைப்பு எது?
விடை: ஐரோப்பிய நாடாளுமன்றம்.
ஆ) ஐரோப்பிய ஆணையத்தின் செயல்பாடுகள் யாவை?
விடை:
i.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுகிறது.
ii.சட்டம் இயற்ற தூண்டுதலாக இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்கிறது.
iii.ஐரோப்பிய கூட்டமைப்பின் சட்டங்களை வடிவமைத்து, அதனை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும், ஐரோப்பிய ஒன்றிய மன்றத்திலும் சமர்ப்பிக்கிறது.
இ) ஐரோப்பிய நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
விடை: லக்ஸம்பர்க் நகரில் அமைந்துள்ளது.
ஈ) அந்நியப் பரிவர்த்தன முறைகள் யாருடைய முக்கியப் பொறுப்பாகும்?
விடை: ஐரோப்பிய மத்திய வங்கி
2. ஐரோப்பிய ஒன்றியத்தின் சாதனைகள்
அ) ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயத்தின் குறியீடு என்ன?
விடை: €
ஆ) ஐரோப்பிய ஒற்றை நாணயம் எதைக் களைகிறது?
விடை: ஐரோப்பிய எல்லையைக் கடந்து, வெளிநாடுகளில் வணிகம் செய்யும் குழுமத்திற்கு ஏற்படும் வணிகப் பரிவர்த்தனைக்கான தடைகளைக் களைகிறது.
இ) ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?
விடை: 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
ஈ) ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அமைப்பு எது?
விடை: ஐரோப்பிய ஆராய்ச்சி ஆணையம்
No comments:
Post a Comment