1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி
வினா விடை பகுதி 1
1. 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞர்கள் அழைத்தது.அ) படைவீரர் கலகம்
ஆ) பெரும் கலகம்
இ) இந்திய சுதந்திரப்போர்
ஈ) சுதந்திரப்போராட்டம்
விடை: அ) படைவீரர் கலகம்
2. இந்திய வரலாற்றறிஞர்கள் 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியை அழைத்தது.
அ) சிப்பாய் கலகம்
ஆ) பெரும் புரட்சி
இ) முதல் இந்திய சுதந்திரப்போர்
ஈ) படைவீரர் கலகம்
விடை: இ) முதல் இந்திய சுதந்திரப்போர்
3. 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
அ) லிட்டன் பிரபு
ஆ) ரிப்பன் பிரபு
இ) கானிங் பிரபு
ஈ) வெல்லெஸ்ஸி பிரபு
விடை: இ) கானிங் பிரபு
4. குடியானவர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்த வரி
அ) நிலவரி
ஆ) சுங்க வரி
இ) வருமான வரி
ஈ) சேவை வரி
விடை: அ) நிலவரி
5. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்
அ) லின்லித்தோ
ஆ) டல்ஹெளசி பிரபு
இ) பெண்டிங் பிரபு
ஈ) மவுண்ட் பேட்டன்
விடை: இ) பெண்டிங் பிரபு
6. பொது இராணுவப் பணியாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
அ) 1856
ஆ) 1857
இ) 1858
ஈ) 1859
விடை: அ) 1856
7. முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம்
அ) மீரட்
ஆ) பரெய்லி
இ) பாரக்பூர்
ஈ) கான்பூர்
விடை: இ) பாரக்பூர்
8. படை வீரர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டது.
அ) மீரட்
ஆ) பரெய்லி
இ) பாரக்பூர்
ஈ) கான்பூர்
விடை: அ) மீரட்
9. அயோத்தி நவாபின் மனைவி
அ) மும்தாஜ்
ஆ) பாத்திமா பேகம்
இ) பேகம் ஹஸ்ரத் மகால்
ஈ) ரசியா சுல்தானா
விடை: இ) பேகம் ஹஸ்ரத் மகால்
10. 1857-ஆம் ஆண்டு புரட்சிக்குப்பின் இந்திய கவர்னர் ஜெனரல் அழைக்கப்பட்டது.
அ) இந்திய அரசப்பிரதிநிதி
ஆ) இந்திய அரசர்
இ) இந்திய ஆளுநர்
ஈ) இந்திய அமைச்சர்
விடை: அ) இந்திய அரசப்பிரதிநிதி
No comments:
Post a Comment