LATEST

Thursday, January 30, 2020

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

1857 ஆம் ஆண்டு மாபெரும் கிளர்ச்சி

ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

1. 1857-ஆம் ஆண்டு புரட்சிக்கான அரசியல் காரணங்கள் 

அ) துணைப்படைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை: வெல்லெஸ்லி பிரபு

ஆ) டல்ஹெளசி பிரபு அறிமுகப்படுத்திய கொள்கை யாது?
விடை: “வாரிசு இழப்புக் கொள்கை”

இ) இரண்டாம் பகதூர்ஷா மீது ஆங்கிலேயர் மேற்கொண்ட நடவடிக்கை யாது?
விடை: மெகாலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷா சிறைபிடிக்கப்பட்டு ஆயுள் கைதியாக ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஈ) நானாசாகிப் தனது வெறுப்பை ஆங்கிலேயர் மீது அதிகப்படுத்தியது ஏன்?
விடை: நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆங்கிலேய அரசால் நிறுத்தப்பட்டது.

2. கான்பூர்

அ) கான்பூரில் நடந்த புரட்சியாளர்களுடன் இணைந்தது யார்?
விடை: புரட்சியாளர்களுடன் நானாசாகிப் இணைந்தார்;

ஆ) ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன?
விடை: ஆங்கிலப் படை கலகக்காரர்களிடம் சரணடைந்தது.

இ) நானாசாகிப்பைத் தோற்கடித்தது யார்?
விடை: சர் காலின் காம்ப்பெல்

ஈ) கான்பூர் எப்பொழுது ஆங்கிலேயர் வசம் வந்தது?
விடை: நவம்பர், 1857-ஆம் ஆண்டில்

3. மத்திய இந்தியாவில் பெரும் புரட்சி

அ) மத்திய இந்தியாவில் புரட்சியை வழி நடத்திச் சென்றவர் யார்?
விடை: ஜான்சி இராணி இலட்சுமிபாய் மற்றும் தாந்தியாதோப்

ஆ) இராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் எது?
விடை: குவாலியர்

இ) இராணி இலட்சுமிபாயின் முடிவு என்ன?
விடை: இராணி இலட்சுமிபாய் 1858-ஆம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்

ஈ) தாந்தியாதோப்பிற்கு நிகழ்ந்தது என்ன?
விடை: தப்பிச் சென்ற தாந்தியாதோப் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்

No comments:

Post a Comment