19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும சமய சீர்திருத்த இயக்கங்கள்
வினா விடை பகுதி 1
1. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்அ) இராஜாராம் மோகன் ராய்
ஆ) தயானந்த சரஸ்வதி
இ) கேசப் சந்திரசென்
ஈ) தேவேந்திரநாத் தாகூர்
விடை: அ) இராஜாராம் மோகன் ராய்
2. 1829-ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்றும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்
அ) திருமதி. அன்னிபெசன்ட்
ஆ) சுவாமி விவேகானந்தர்
இ) இராஜாராம் மோகன் ராய்
இ) லாலா ஹன்ஸ்ராஜ்
விடை: இ) இராஜாராம் மோகன் ராய்
3. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.
அ) பிரம்ம சமாஜம்
ஆ) ஆரிய சமாஜம்
இ) பிரார்த்தன சமாஜம்
ஈ) அலிகார் இயக்கம்
விடை: ஆ) ஆரிய சமாஜம்
4. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
அ) காஞ்சிபுரம்
ஆ) பேலூர்
இ) மேலூர்
ஈ) ஹம்பி
விடை: ஆ) பேலூர்
5. வள்ளலார் பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) எட்டுத்தொகை
ஈ) திருவருட்பா
விடை: ஈ) திருவருட்பா
6. சர்.சையது அகமதுகான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்
அ) அலிகார் இயக்கம்
ஆ) பிரம்ம ஞான சபை
இ) சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
ஈ) முஸ்லீம் லீக்
விடை: அ) அலிகார் இயக்கம்
7. சர்.சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்
அ) அலிப்பூர்
ஆ) ஆலப்புழை
இ) காசிப்பூர்
ஈ) கான்பூர்
விடை: இ) காசிப்பூர்
8. கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி
அ) ஸ்ரீ நாராயண குரு
ஆ) குரு பிரசாத்
இ) குருநானக்
ஈ) குரு சாயி
விடை: அ) ஸ்ரீ நாராயண குரு
9. நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன் ராய்
10. இந்து சமயத்தின் மார்டின் லூதர் - சுவாமி தயானந்த சரஸ்வதி
No comments:
Post a Comment