LATEST

Wednesday, January 29, 2020

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்: வினா-விடை பகுதி 1

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்

வினா-விடை பகுதி  1

1. உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர்
அ) பிஸ்மார்க்
ஆ) கெய்சர் இரண்டாம் வில்லியம்
இ) ஹிட்லர்
ஈ) முசோலினி
விடை: ஆ) கெய்சர் இரண்டாம் வில்லியம்

2. கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்
அ) ஹெலிகோலாந்து
ஆ) ஹாலந்து
இ) ஜீட்லாந்து
ஈ) அயர்லாந்து 
விடை: அ) ஹெலிகோலாந்து

3. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்
அ) அல்சேஸ் மற்றும் லொரைன்
ஆ) போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
இ) ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி
ஈ) எஸ்தோனியா மற்றும் லாட்வியா
விடை: அ) அல்சேஸ் மற்றும் லொரைன்

4. ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்
அ) பிரான்சிஸ் பெர்டினான்டு
ஆ) பிரான்சிஸ் டியூக்
இ) பிரான்சிஸ் டி லெசப்ஸ்
ஈ) பிரான்சிஸ் பேயாகன்
விடை: அ) பிரான்சிஸ் பெர்டினான்டு

5. ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள்
அ) ஜீலை 28, 1914
ஆ) ஜீன் 28, 1914
இ) மார்ச் 28, 1914
ஈ) ஆகஸ்ட் 28, 1914
விடை: அ) ஜீலை 28, 1914

6. ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது.
அ) நெதர்லாந்து
ஆ) லக்ஸம்பர்க்
இ) ரைன்லாந்து
ஈ) பெல்ஜியம்
விடை: ஈ) பெல்ஜியம்

7. துருக்கி தனது ஆதரவை வழங்கியது
அ) கூட்டு நாடுகள்
ஆ) அச்சு நாடுகள்
இ) மைய நாடுகள்
ஈ) வளர்ச்சியடைந்த நாடுகள்
விடை: இ) மைய நாடுகள்

8. ஆங்கிலேயர்களுக்கு படுதோல்வியாக அமைந்தது.
அ) ஜெர்மானியப் படையெடுப்பு
ஆ) பிரெஞ்சுப் படையெடுப்பு
இ) டார்டனல்ஸ் படையெடுப்பு
ஈ) கியூபா படையெடுப்பு
விடை: இ) டார்டனல்ஸ் படையெடுப்பு

9. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக் கப்பல்
அ) லுப்டாப்
ஆ) ராயல்
இ) லூசிட்டானியா
ஈ) பெர்லின் 
விடை: இ) லூசிட்டானியா

10. ரஷ்யாவில் சார் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
அ) லெனின்
ஆ) கார்ல் மார்க்ஸ்
இ) மார்டோவ்
ஈ) ஸ்டாலின்
விடை: அ) லெனின்

No comments:

Post a Comment