LATEST

Wednesday, January 29, 2020

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம் ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

முதல் உலகப்போர் (கி.பி. 1914 – கி.பி. 1918) சர்வதேச சங்கம்

ஒர் வார்த்தையில் விடையளி பகுதி 2

1. ஜெர்மனியின் பேராசை
அ) முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் அரசர் யார்?
விடை: கெய்சர் இரண்டாம் வில்லியம்
 
ஆ) அவரின் நம்பிக்கை என்ன?
விடை: உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை மற்றும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது என்று நம்பினார்
 
இ) அவரால் சகித்துக் கொள்ள முடியாதது எது?
விடை: ஆங்கிலேயர்களின் பேரரசின் சூரியன் மறைவதேயில்லை என்ற ஆங்கிலேயர்களின் கூற்றை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
 
ஈ) எங்கு கப்பற்படைத்தளம் அமைத்திருந்தார்?
விடை: வடகடலில் உள்ள ஹெலிகோலாண்ட என்னுமிடத்தில்
 
2. பால்கன் பிரச்சனை
அ) பால்கன் நாடுகளைக் குறிப்பிடுக
விடை: செர்பியா, பல்கேரியா, அல்பேனியா, கிரீஸ் மற்றும் மாண்டி நீக்ரோ
 
ஆ) முதல் பால்கன் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
விடை: துருக்கி தோற்கடிக்கப்பட்டு லண்டன் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
 
இ) ஏனைய பால்கன் நாடுகள் பல்கேரியா மீது ஏன் போர் தொடுத்தன?
விடை: போரின் முடிவில் கிடைத்த பகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் செர்பியாவிற்கும் பல்கேரியாவிற்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டன. எனவே மற்ற பால்கன் நாடுகள் பல்கேரியா மீது, 1913-ஆம் ஆண்டு போர் தொடுத்தன 

ஈ) இரண்டாம் பால்கன் போரின் முடிவு என்ன?
விடை: பல்கேரியா தோற்கடிக்கப்பட்டது செர்பியா பெரும் பகுதிகளைத் தன்னோடு சேர்த்துகொண்டது

No comments:

Post a Comment