LATEST

Wednesday, January 29, 2020

இரு உலகப்போர்க்கிடையே உலக நிலை (கி.பி.1919-கி.பி.1939) – கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இரு உலகப்போர்க்கிடையே உலக நிலை (கி.பி.1919-கி.பி.1939) – பொருளாதாரப் பெருமந்தம்

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. அமெரிக்க மக்களுக்குப் புதிய பயனுரிமைக் கொள்கையை அர்ப்பணிக்கப் போவதாக உறுதியளித்தவர் பிராங்களின் டி.ரூஸ்வெல்ட்.

2. எப்.டி.ஆர் (FDR) என்றழைக்கப்பட்டவர் பிராங்களின் டி.ரூஸ்வெல்ட்.

3. பொருளாதாரப் பெரும் தாழ்வை முடிவுக்கு கொண்டு வர எப்.டி.ரூஸ்வெல்ட் அமைத்த கொள்கை புதிய பயனுரிமைக் கொள்கை.

4. எப்.டி.ரூஸ்வெல்ட் உருவாக்கிய புதிய பயனுரிமைக் கொள்கையின் மூன்று அம்சங்களை உதவி, மீட்பு, சீர்திருத்தம்.

5. மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட்டாட்சி அவசர நிவாரண நிர்வாகம் வழங்கிய நிதி ஐநூறு (500) மில்லியன் டாலர்கள்.

6. பங்குச் சந்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் மூலம் உரிமம் வழங்கப்பட்டது.

7. தொழி;ற்சாலைகளில் சம்பள உயர்வு, பணி நேரக்குறைப்பு போன்ற சீர்திருத்தங்கள் தேசியத் தொழில் மீட்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டன.

8. அமெரிக்கப் பொருளாதார மேன்மைக்கு உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்த சட்டம் புதிய பயனுரிமைச் சட்டம்.

9. உலக நாடுகளின் சீர்த்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ள திட்டம் புதிய பயனுரிமைத் திட்டம்.

10. அமெரிக்கப் பொருளாதாரம் இயல்பு நிலைக்க திரும்பிய ஆண்டு 1940.

No comments:

Post a Comment