LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள் பகுதி 1

சமூக அறிவியல்


தென்னிந்திய அரசுகள் பகுதி 1

1. பல்லவ அரசர் --------------------- களப்பிரர்களை வீழ்த்தி, பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்
அ) சிம்ம விஷ்ணு
ஆ) முதலாம் மகேந்திர வர்மன்
இ) இரண்டாம் நரசிம்ம வர்மன்
விடை: அ) சிம்ம விஷ்ணு

2. முதலாம் நரசிம்ம வர்மனின் பட்டப்பெயர் -------------------------
அ) வாதாபி கொண்டான்
ஆ) ஜெயங்கொண்டான்
இ) கடாரம் கொண்டான்
விடை: அ) வாதாபி கொண்டான்

3. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் ---------------------
அ) முதலாம் இராசேந்திரன்
ஆ) கரிகால சோழன்
இ) இராஜராஜ சோழன்
விடை: ஆ) கரிகால சோழன்

4. முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பண்டிய மன்னரை தோற்கடித்ததால் ------------ என்ற பட்டப்பெயரைப் பெற்றார்
அ) மதுரை கொண்டான்
ஆ) முடிக்கொண்டான்
இ) கடராம் கொண்டான்
விடை: அ) மதுரை கொண்டான்

5. பாண்டிய பேரரசானது, பாண்டிய ------------ என அழைக்கப்பட்டது
அ) மண்டலம்
ஆ) வளநாடு
இ) ஊர்அவை
விடை: அ) மண்டலம்

6. ஆண்டாள் இயற்றிய நூல்
அ) தேவாரம்
ஆ) திருப்பாவை
இ) இராமாயணம்
விடை: ஆ) திருப்பாவை

7. முதலாம் நரசிம்ம வர்மன் ஆட்சியில், காஞ்சிக்கு வந்தவர் யுவான் சுவாங்

8. ஒற்றைக்கல் இரதங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன

9. சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கபடுபவர் முதலாம் குலோத்துங்கன்

10. சைவ மதத்தை சோழ மன்னாகள் ஆதரித்தார்கள்

No comments:

Post a Comment